செருப்புத் தைக்கும் தொழிலாளியைச் சந்தித்துப் பேசிய ராகுல்!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூரில் சமூகத்தின் பிரச்னைகளைப் புரிந்துகொள்வதற்காக செருப்புத் தைக்கும் தொழிலாளியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்துப் பேசினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதான அவதூறு கருத்துகள் தொடர்பான வழக்கில் சுல்தான்பூரில் உள்ள எம்பி-எம்எல்ஏ நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுல்தான்பூரில் உள்ள செருப்புக் கடையில் ராகுல் காந்தி தனது காலணியைத் தைக்கும்போது தலித் தொழிலாளியிடம் சுமார் 30 நிமிடங்கள் கலந்துரையாடினார். அதன் விடியோ பதிவு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

கடின உழைப்பாளிகளின் உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம், அவர்களுக்காக நாடாளுமன்றம் வரை குரல் எழுப்புவோம்.
அவர்களின் நிகழ்காலம் பாதுகாப்பாகவும், எதிர்காலத்தை வளமாகவும் மாற்றுவதே எங்களின் நோக்கமாகும் என்று ராகுல் தெரிவித்துள்ளதாக எக்ஸ் பதிவில் வெளியாகியுள்ளது.

Related posts

Leave a Comment