தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் கைது

புதிய திரைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனைத்து புதிய படங்களும் வெளியான அன்றைய தினமே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் சிறிது நேரத்தில் வந்துவிடும். இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்தும் அதனை பதவியேற்றம் செய்யும் அட்மினை கைது செய்ய முடியவில்லை.

மேலும் ஒவ்வொரு முறை இணையதளம் தடை செய்யப்படும் போதும் புதிய முகவரியில் இருந்து சட்டவிரோதமாக படங்களை பதிவேற்றம் செய்து வந்தனர். இதுதவிர நீதிமன்றம் மூலம் தடை விதித்து நடவடிக்கை எடுத்த போதிலும் புதிய இணையதளம் தொடங்கப்படுவது வாடிக்கையாகி இருந்து வருகிறது.

இதனால் திரைப்படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் செய்வதறியாமல் திகைத்து வந்தனர். இந்நிலையில் கேரளத்தில் ஒரு திரையரங்கில் தனுஷின் ராயன் திரைப்படத்தை செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்த மதுரையை சேர்ந்த தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் ஸ்டீபன் ராஜை கேரள சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

புதிய படங்களின் முதல் நாள் காட்சியிலேயே இருக்கையில் சிறிய கேமரா வைத்து வீடியோ எடுத்துள்ளார். ஒரு படத்திற்கு ரூ.5000 கமிஷன் பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புதிய படங்களை அவர் பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

மேலும் இதுகுறித்து சைபர் போலீஸார் நடத்திய விசாரணையில் 12 பேர் இணைந்து செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

Related posts

Leave a Comment