ஆபாசப் படம் பார்த்து 9 வயது தங்கையை பலாத்காரம் செய்து கொன்ற 13 வயது அண்ணன்

ஆபாசப் படங்களால் ஏற்படும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் மனதைப் பதற வைப்பதாக அமைந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி வீடு ஒன்றில் முன்னாள் இருந்த தோட்டத்தில் 9 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது .

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கினர். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்று பிரேதப் பரிசோதனையில் உறுதியான நிலையில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். தடயங்களை சேகரித்து பெண்ணின் குடும்பத்தினர் உட்பட சுமார் 50 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியலில் உயிரிழந்த சிறுமி அவளது 13 வயது அண்ணனால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட திடுக்கிடும் உண்மை வெளிவந்தது.

தொடர்ச்சியாக ஆபாசப் படங்களைப் பார்த்து வந்த அந்த சிறுவன் அன்றைய இரவு, வீட்டில் தனது அருகில் படுத்திருந்த தங்கையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். தங்கை, அப்பாவிடம் சொல்லப்போகிறேன் என்று கூறியதால் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் சிறுவன் தனது அவளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளான்.

கொலை செய்தவுடன் தூங்கிக்கொண்டிருந்த தனது தாயை எழுப்பி சிறுவன் நடந்ததைக் கூறியுள்ளான். இதனால் கலக்கமடைந்த தாய் சிறுவனைக் காப்பாற்றும் எண்ணத்துடன் நடந்ததை மூடி மறைத்துள்ளார். சம்பவத்தின் பின் விழித்த சிறுவனின் இரண்டு மூத்த சகோதரிகளுக்கும் இந்த விஷயம் தெரிந்தே இருந்துள்ளது.

ஆனால் முதலில் போலீஸ் விசாரணையில் கொலை குறித்து எதுவும் தெரியாததுபோல் அனைவரும் சிறுமி விஷப்பூச்சி கடித்து இறந்ததாக நாடகமாடியுள்ளனர். கடந்த 2 மாதகாலமாக போலீசார் அழுத்தம் குடுத்துவிசாரித்ததில் தற்போது அவர்கள் உன்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.

Related posts

Leave a Comment