கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமான வயநாட்டில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் சிக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பெரும் கவலையளிக்கிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடுபத்தினருக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு பணிகள் குறித்து பேசினேன். மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என கூறியுள்ளார்.