ஓய்வு பெற்ற துணை இராணுவத்தினருடன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்

ஓய்வு பெற்ற துணை இராணுவத்தினருடன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்/ அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நம் பாரத நாட்டின் எல்லைப் பகுதிகளில் கடும் குளிர், வெய்யில் என்றும் பாராமல் எல்லை சாமிகளாக நம்மையெல்லாம் பாதுகாத்து வருகின்ற துணை இராணுவப் படை வீரர்கள் சுமார் 20 ஆண்டுகாலம் தொடர் பணியில் ஈடுபட்டு ஓய்வு பெறுகின்றனர். அப்படி ஓய்வு பெறுகின்ற துணை இராணுவப் படை வீரர்களுக்கு, ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போன்று அவர்களுக்கும் வழங்க வேண்டும் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் 2012–ஆம் ஆண்டு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதனடிப்படையில் கோவா, டையூ & டாமன் மற்றும் தாத்ரா நகர் & ஹவேலி யூனியன் பிரதேசங்கள் தங்கள் மண்ணின் மைந்தர்களின் நலனுக்காக மறு வேலைவாய்ப்பு வழங்கும் சட்ட மசோதாவை தாக்கல் செய்து அரசாணை வெளியிட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.
அதே நிலையை பின்பற்றி நம் மண்ணின் மைந்தர்களாக உள்ள ஓய்வு பெற்ற துணை இராணுவப் படையினருக்கும் அச்சலுகை வழங்க அவர்கள் தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தியும் அவர்களுக்கான உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. அரசுக்கான வேலைவாய்ப்பு தேர்வில் வெற்றி பெற்றபோதும் உரிமைகோர முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர். இதன் காரணமாக குறைந்த சம்பளத்திற்கு கிடைத்த வேலையை பார்க்கும் சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, நாட்டை பாதுகாத்த நம் மண்ணின் மைந்தர்களும் அரசின் சலுகைகளைப் பெற தங்கள் அரசு கொள்கை முடிவெடுத்து நடப்பாண்டில் அரசாணை வெளியிட்டு அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேணுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்ப

Related posts

Leave a Comment