சட்டசபை நிகழ்வுகளைபள்ளி மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் 20அரசு பள்ளி மாணவர்கள் பார்வையாளர் மாடத்தில்அமர்ந்து சட்டசபைநிகழ்வுகளை தெரிந்து
கொண்டனர். 15-வது தொடரின் 2 வதுகூட்டத்தொடர் நேற்று காலைகூடியது. சட்டபேரவைதலைவர் செல்வம் திருக்குறள் வாசிக்க அவை
தொடங்கியது. 2017-ஆண்டுபுதுச்சேரி சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஆண்டு அறிக்கை மற்றும்2023 ஆம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. அறிக்கைவெளியிடப்பட்டது.தொடர்ந்து துணை நிலைஆளுநர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் விவாதமும்,2024-2025-ஆம் ஆண்டிற்கானநிதிநிலைஅறிக்கைமீதானவிவாதம்நடைபெற்றது..இந்நிலையில் சட்டசபைநிகழ்வுகளை பள்ளிமாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில்பள்ளி மாணவர்கள் சபைநிகழ்வுகளை காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.அதன்படி வ.௨.சி, சுசிலாபாய், உள்ளிட்ட அரசு
பள்ளியை சேர்ந்த 20-க்கும்மேற்பட்ட மாணவர்கள்சட்டசபைக்கு வந்தனர்.அவர்கள் சட்டசபை மையமண்டபத்தின் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்துசட்டசபை நிகழ்வுகளைதெரிந்து கொண்டனர்.
சட்டசபை நிகழ்ச்சிகளை பார்யிட வந்த மாணவர்களுக்கு பேரவை தலைவர் நினைவு பரிசாக புத்தகங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். அருகில் சட்டமன்ற உறுப்பினர் நேரு (எ) குப்புசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆகியோர்.