புனித ஆரோக்கியமேரி அன்னை ஆலயத்திற்கு எம்.எல்.ஏ. பாஸ்கர்(எ)தட்சணாமூர்த்தி 1லட்சம் நிதி

அரியாங்குப்பம், புனித ஆரோக்கியமேரி அன்னை ஆலயத்தில் தரை அமைக்கும் பணிக்கு எம்.எல்.ஏ., பாஸ்கர்(ஏ) தடசணாமூர்த்தி ரூ. 1 லட்சம் நிதி வழங்கினார்.

முதல்வர் ரங்கசாமி 75வது பிறந்த நாள் விழா அரியாங்குப்பத்தில் கொண்டாடப்பட்டது. அரியாங்குப்பம் புனித ஆரோக்கியமேரி அன்னை ஆலயத்தில் முதல்வருக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் ஆலயத்தின் தரை அமைக்கும் பணிக்காக தனது சொந்த செலவில் இருந்து எம்.எல்.ஏ., பாஸ்கர்(எ)தட்சணாமூர்த்திரு். 1 லட்சம்நிதியை ஆலயத்தின் பங்கு தந்தை அருள்தாசிடம் வழங்கினார்.

அதனை தொடர்ந்து, அரியாங்குப்பம் பிரம்மன் சிலை அருகே, பொதுமக்களுக்கு சர்க்கரை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தனியார் குழந்தைகள் காப்பகத்தில் எம்.எல்.ஏ., அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், என்.ஆர்., காங்., பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment