பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலம் பதக்கம் வென்றது இந்தியா அணி

பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் அரை இறுதியில் தோல்வி அடைந்த இந்தியாவும், ஸ்பெயினும் இன்று வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் மோதியது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி அரைஇறுதியில் ஜெர்மனியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது.

கடந்த முறை வெண்கலம் வென்ற இந்தியா அந்த பதக்கத்தை தக்க வைக்குமா என்று எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கியது. இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தாலும் முதல் கால் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இதனையடுத்து நடந்த 2-வது கால் பாதியின் 18-வது நிமிடத்தில் ஸ்பெயின் தனது முதல் கோலை பதிவு செய்தது. 2-வது கால் பாதியின் இறுதி வரை போராடிய இந்திய அணி 30-வது நிமிடத்தில் ஒரு கோலை பதிவு செய்தது. இதனால் 1-1 என்ற கணக்கில் 2-வது கால் பாதி சமன் நிலையில் இருந்தது.

3-வது கால் பாதியின் 33-வது நிமிடத்தில் இந்திய அணி ஒரு கோல் அடித்தது. ஸ்பெயின் அணியால் கோல் போடமுடியவில்லை. இதனால் 3-வது கால் பாதியின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 4-வது மற்றும் கடைசி கால் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றனர். இறுதி வரை போராடிய நிலையில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றது.

Related posts

Leave a Comment