வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றவேண்டும்- பிரதமர் மோடி

சுதந்திர தினத்தையொட்டி அனைவரின் வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஹர் கர் திரங்கா(அனைவரின் வீடுகளிலும் தேசியக்கொடி) என்பது ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் (சுதந்திரத்தின் ஆற்றல் அமுதம்) மூலம் இந்திய மக்கள் நமது தேசியக் கொடியை அவர்களின் வீடுகளுக்கு கொண்டு வரவும், இந்தியாவின் 78-வது ஆண்டு சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் ஊக்குவிக்கும் ஒரு பிரசாரமாகும்.

தன்னுடைய எக்ஸ் தளத்தின் தன்னுடைய முகப்பு பக்கத்தில் தனது படத்தை நீக்கிவிட்டு தேசியக் கொடியை வைத்த பிரதமர் மோடி இதுகுறித்து எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “இந்தாண்டு சுதந்திரதினம் நெருங்கி வருவதால், மீண்டும் ஹர் கர் திரங்கா மறக்கமுடியாத மக்களுக்கான இயக்கமாக மாற்றுவோம்.

நான் எனது சுயவிவரப் படத்தை மாற்றுகிறேன். இதன்மூலம் நமது மூவர்ணக் கொடியைக் கொண்டாடுவதில் என்னுடன் இணையுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஆம், உங்கள் தற்படங்களை(செல்ஃபி) https://harghartiranga.com இல் பகிரவும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment