முடா முறைகேட்டில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவுக்கு மாநில ஆளுநர் அனுமதி

முடா முறைகேட்டில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் அனுமதி வழங்கியுள்ளார்.

இதற்கு கர்நாடக மாநில மந்திரிகள் கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் தவறு ஏதும் செய்யவில்லை. இதனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் காங்கிஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜக நியமித்துள்ள பாஜக அரசு அல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மாநில அரசுகளுக்கு இடர்பாடுகளை ஏற்படுத்துகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

ஆளுநர் அனுப்பிய நோட்டீசில் என்ன உள்ளது? என்பதை பார்க்கவில்லை. அதுபோல் என்ன காரணத்திற்காக அனுமதி அளித்தார் என்பது குறித்து நான் இன்னும் பார்க்கவில்லை. என்னால் தற்போது நோட்டீஸ் சரியா அல்லது தவறா? எனக் கூற முடியாது.

ஆனால் ஒருவிசயம் என்னவென்றால், மேற்குவங்கம், கர்நாடகா, தமிழ்நாடு அல்லது வேறு எங்கெல்லாம் பாஜக அல்லாத அரசு ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை நியமித்துள்ளதோ, அங்கெல்லாம் அவர்கள் அதிகப்பட்டியான இடர்பாடுகளை ஏற்படுத்தி வருகின்றனர். வழக்கின் முழு விவரம், வழக்கறிஞர் ஆலோசனைக்குப் பிறகு இது தொடர்பாக பதில் அளிப்பேன். இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment