தெலுங்கானாவில் தெருநாயை கரண்ட் கம்பத்தில் கட்டிவைத்து அடித்தே கொன்ற நபர்

தெலுங்கானாவில் தெருநாயை ஒருவர் கரண்ட் கம்பத்தில் கட்டிவைத்து அடித்து துன்புறுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் ப்ரீத்தி அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ப்ரீத்தி தனது புகாரில், குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு தெருநாயை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். பின்பு நாய் இறந்த பிறகு, உடலை பக்கத்தில் உள்ள அவரது வயலில் புதைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment