புதுச்சேரி அரசு கல்வித் துறை சார்பில், மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ், சுப்ரமணிய பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மடிக்கணினி மற்றும் மழைஅங்கி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பிளஸ்1 வகுப்பு பயிலும் 85 மாணவிகளுக்கு மடிக்கணினி, பத்தாம் வகுப்பு பயிலும் 64 மாணவிகளுக்கு மழைஅங்கி வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி துணை முதல்வர் புவனேஸ்வரி, தலைமை ஆசிரியை குளோதின் மேம்பொலின், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.