ஒடிசாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர்!

ஒடிசா அரசின் பெண்களை மையமாகக் கொண்ட சுபத்ரா யோஜனா திட்டத்தையும், மாநிலத்தில் ரூ.3,800 கோடி மதிப்பிலான ரயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

மாநிலத்தில் 2,871 கோடி மதிப்பிலான தேசிய ரயில்வே திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.

மேலும் ஜனதா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1000 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தா

சுபத்ரா திட்டத்தின் கீழ் 2024-25 முதல் 2028-29 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 21-60 வயதுக்குள்பட்ட அனைத்து தகுதியான பயனாளிகளும் ரூ.50 ஆயிரம் வரை பெறுவார்கள்.

இரண்டு தவணைகளில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் இதுவரை 76 லட்சம் பெண்கள் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் போது, ​​சுபத்ரா திட்டத்தின் கீழ் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.1,250 கோடிக்கு மேல் பணம் மாற்றப்பட்டது.

Related posts

Leave a Comment