அரியாணா சட்டப்பேரவைக்கு இளைஞர்கள் வாக்களிப்பு சாதனையை படைக்க மோடி வேண்டுகோள்

அரியாணா சட்டப்பேரவைக்கு,இன்று 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தலில் இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் என அதிக எண்ணிக்கையிலானவர்கள் வாக்களித்து புதிய வாக்களிப்பு சாதனையை படைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரியாணாவில் ஒரே கட்டமாக மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் சனிக்கிழமை (அக். 5) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 2 கோடிக்கும் மேற்பட்டோா் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இவா்களுக்காக 20,629 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது. 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 101 பேர் பெண் வேட்பாளர்கள்.

வாக்குப்பதிவு தொடங்கிய முக்கிய தொகுதிகளில், முதல்வா் நாயப் சிங் சைனி (லாட்வா), எதிா்க்கட்சித் தலைவா் பூபிந்தா் சிங் ஹூடா (கா்ஹி சம்பலா-கிலோய்), இந்திய தேசிய லோக் தளத்தின் அஜய் சிங் செளதாலா (எல்லேனாபாத்), ஜனநாயக ஜனதா கட்சியின் துஷ்யந்த் செளதாலா (உசனா காலன்), பாஜகவின் அனில் விஜ் (அம்பாலா கண்டோன்மென்ட்), ஆம் ஆத்மியின் அனுராக் தாண்டா (கலயாத்), காங்கிரஸின் வினேஷ் போகாட் (ஜூலானா), சுயேச்சை வேட்பாளா் சாவித்ரி ஜிண்டால் (ஹிசாா்) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.

அரியாணாவில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்குவரும் முனைப்பில் பாஜக தீவிர பிரசாரம் மேற்கொண்டது. அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ் 89 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான மாா்க்சிஸ்ட் ஓரிடத்திலும் களத்தில் உள்ளன. இதுதவிர, ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக் தளம், ஜனநாயக ஜனதா கட்சி ஆகியவையும் களத்தில் உள்ளன.இருப்பினும், பாஜக, காங்கிரஸ் இடையேதான் போட்டி நிலவுவதாக தேர்தல் கள நிலவரம் கூறுகின்றன.

இந்நிலையில், வாக்குப்பதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அரியாணா மாநில மக்கள் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்க பதிவில், ” ஜனநாயகத்தின் இந்த புனிதமான தேர்தல் திருவிழாவில் இன்று வாக்களிக்க தகுதியுடைய மக்கள் அதிக எண்ணிக்கையில், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் என அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வாக்களித்து புதிய வாக்களிப்பு சாதனையை படைக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி,”முதல் முறையாக தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தும் இளம் வாக்காளர்களுக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்க்கிறது, அதே நேரத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மக்கள் தங்களுக்கு வாய்ப்பளிப்பா் என்று நம்பிக்கையாக உள்ளது.

கடந்த 2019, அரியாணா பேரவைத் தோ்தலில் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும் வெற்றி பெற்றன. பின்னா், ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.

அரியாணாவில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

Related posts

Leave a Comment