கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில், 158 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் 2.94 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.5) திறந்து வைத்தார். மேலும், இக்கட்டிடத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஆணைகளையும் முதல்வர் வழங்கினார். இதன்மூலம் சுமார் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தகவல் தொழில்நுட்பத் துறையின் திறனை உணர்ந்து, விரைவான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உகந்த வணிகச் சூழலை தமிழக அரசு உருவாக்கி வருகிறது. இதன்மூலமாக பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவை நிறுவனங்கள் முதலீடு செய்வதற்குத் தமிழகம் விருப்பத் தேர்வாக உருவாகியுள்ளது. தகவல்…
Category: தமிழ்நாடு
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு: நடிகை கஸ்தூரி மீது வழக்குப் பதிவு
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு, தெலுங்கு மொழி பேசுபவர்கள் குறித்து சொன்ன கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில், தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில், ‘எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பொதுவெளியில் ஒட்டுமொத்த தெலுங்கு சமுதாயத்தில் உள்ள அனைத்து பெண்களையும்…
அமரன் படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரித்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ‘முகுந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியான இத்திரைப்படத்திற்கு மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இத்திரைப்படம் உலகமுழுவதும் முதல்நாள் மட்டும் 42.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களின் மிகப் பெரிய ஓப்பனிங் கொண்ட திரைப்படமாக அமைந்துள்ளது.இந்நிலையில், அமரன் படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து மகிழ்ந்துள்ளார். கமல்ஹாசன் அவர்களை தொலைபேசியில் அழைத்த ரஜினிகாந்த் இந்தப் படத்தை தயாரித்ததற்காக மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தார். அத்துடன், அமரன் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட அமரன் படக்குழுவினரை நேரில் சந்தித்து…
திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார். காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும், பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும் நடைபெறுகிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம்…
தமிழ்நாடு நாளுக்கு முதல்வர்,தலைவர்கள் வாழ்த்து
தமிழ் மொழி பேசும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட பெருமை மிகுந்த தினம் என தமிழ்நாடு நாளுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சென்னை மாகாணம் மொழிவாரி மாநிலங்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, தமிழக மாநிலமாக உருவாக்கப்பட்ட நாள் (நவ.1) தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு நாளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை நேற்று பகிர்ந்தனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின்: தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழகத்தின் எல்லையை காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள் நவ.1. தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளை தமிழகத்துடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன். முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: தமிழ் மண், தமிழ் மொழி என்று, நம் தமிழுக்கும் நம்…
சிவகாசி பட்டாசுகள் ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி, சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாமு முழுவதும் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்களால் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டன. மழை உள்ளிட்ட காரணங்களால் 75 சதவீத அளவுக்கு மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்பட்ட 95 சதவீத பட்டாசுகள் ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக பட்டாசு வணிகர்கள் தெரிவித்துள்ளனர். தயாரிப்பு குறைந்த நிலையில் கூட கடந்தாண்டை விட, நடப்பாண்டில் பட்டாசு விற்பனை சிறப்பாக இருந்ததாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.
மேஜர் முகுந்தனுக்கு மிகப்பெரிய சல்யூட்- தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பாராட்டு
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் ‘முகுந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.அமரன் படத்தை பார்த்த முதலமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:- நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்களது அன்பு அழைப்பை ஏற்று, நேற்று அமரன் திரைப்படம் பார்த்தேன். புத்தகங்களைப் போல்- திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் இயக்குநர் ராஜ்குமார் படமாக்கியுள்ளார்.அமரன் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு படக்குழுவினர்…
2026-ல் நம் இலக்கை அடைவோம். வெற்றி நிச்சயம்,”
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த 27 ஆம் தேதி விக்கிரவாண்டியை அடுத்த வி சாலையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாடு வெற்றி பெற்றதை அடுத்து த.வெ.க. தலைவர் விஜய் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே. : 29.10.2024 வணக்கம். மாநாடு குறித்து உங்களுடன் பேச, இது நான்காவது கடிதம். வாஞ்சையில் நனைந்த வார்த்தைகளில் ஒரு நன்றிக் கடிதம். அரசியலில், கடிதமுறை என்பது ஆகப்பெரும் ஆயுதம், பேரறிஞர் அண்ணா தந்த ஆயுதம். தமிழக மக்கள். நம் அனைவருக்கும் சொந்தமானது. அந்த உணர்வின் அடிப்படையில்தான் நாமும் அதைக் கையில் எடுத்தோம்.” “இந்தக் கடிதம் எழுதும்போது, என்னென்னவோ எண்ண அலைகள் இதயத்தில் அலைமோதுகின்றன. என் நெஞ்சம் நிறைந்ததில் எதைச் சொல்வது? எதை விடுப்பது?” “மாநாடு நடத்த, பல்வேறு…
பிரான்சில் வள்ளுவரையும், அன்னைத் தமிழையும் போற்றினோம்- அமைச்சர் அன்பில் மகேஷ்
எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுள் தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் ‘கனவு ஆசிரியர் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. 2024-25ஆம் ஆண்டுக்கான ஆன்லைன் தேர்வில் 10,305 ஆசிரியர்கள் பங்கேற்றனர். 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்வின் மூலம் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்ணுடன், 162 இடைநிலை ஆசிரியர்கள், 177 பட்டதாரி ஆசிரியர்கள், 41 முதுநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 380 பேர் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற 54 ஆசிரியர்கள் கடந்த 23-ந்தேதி பிரான்ஸ் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். 28-ந்தேதி வரை சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உடன்…
பள்ளி மாணவியை மிரட்டி பணம் பறித்த போலீஸ்காரர் கைது
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த கலைச்செல்வன் (வயது 35). இவர் ஏர்வாடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும், பாளையங்கோட்டையை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 17 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஆனந்த கலைச்செல்வன் அந்த மாணவியின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருடன் சகஜமாக பழகி வந்துள்ளார். மாணவி வீட்டில் தனியாக இருக்கும்போது அங்கு செல்லும் ஆனந்த கலைச் செல்வன், ஆபாசமாக பேசி வந்துள்ளார். பாலியல் ரீதியில் அந்த மாணவியிடம் பேசி, ஏமாற்றி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த மாணவி குறித்த வீடியோக்களை தனக்கு வாட்ஸ்-அப் மூலமாக அனுப்ப சொல்லி உள்ளார். மாணவியும் அந்தரங்க வீடியோக்களை போலீஸ்காரருக்கு அனுப்பி உள்ளார். அந்த மாணவி வசதியான…
