திருவண்ணாமலை மாநகரில் மக்களின் பொதுப் போக்குவரத்து வசதிக்காக சுமார் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளை இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், அடி அண்ணாமலை கிராமத்தின் அருகே, 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன சுகாதார வளாகம், நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “தம்பி உதயநிதி ஸ்டாலின், நேற்று கிரிவலம் போயிருக்கிறார். பவன் கல்யாண் சொன்னது உதயநிதி மனதில் தைத்துவிட்டது என்று நினைக்கிறேன். அதனால் அதிகப்படியான மக்கள் கிரிவலம் வரும் நிலையில் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதில் மகிழ்ச்சி.…
Category: தமிழ்நாடு
த.வெ.க கொடியில் யானை சின்னத்தை நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை- பகுஜன் சமாஜ் நோட்டீஸ்
தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வேண்டும் என பகுஜன் சமாஸ் கட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 5 நாட்களுக்குள் கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்காவிட்டால் சட்ட ரீதியாக நவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. த.வெ.க தலைவர் விஜய்க்கு பகுஜபன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் அணி மாநில துணை தலைவர் சந்தீப், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். த.வெ.க. இன்னும் பதிவு செய்யப்படாத நிலையில், கட்சி கொடி விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சித்த மருத்துவர்கள் அலோபதி மருத்துவம் செய்யத் தடையில்லை! – உயர்நீதிமன்றம்
சித்த மருத்துவர்கள் அலோபதி மருத்துவம் செய்யத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையில் சித்த மருத்துவர் எஸ்.சிந்து என்பவர் தனது மருத்துவமனையில் அலோபதி மருந்துகளை பதுக்கி வைத்திருந்ததாக, ஆய்வு செய்ய வந்த மருந்து கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரி புகார் தெரிவித்து 2017ல் அவர் மீது வழக்கும் பதிவு செய்தார். இதனை எதிர்த்து, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, மருத்துவர் சிந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதன்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி போன்ற இந்திய மருத்துவம் படித்தவர்கள், அலோபதி மருந்துகளை பரிந்துரைக்கலாம் என தமிழக அரசு கடந்த 2010ல் அனுமதி அளித்த அரசாணையை சுட்டிக்காட்டினார். அதேநேரத்தில் அளவுக்கு அதிகமாக அலோபதி மருந்துகளை வைத்திருக்க முடியாது எனவும் தெரிவித்து, தமிழக அரசு…
தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி- மன்னிப்பு கேட்ட டிடி தமிழ் தொலைக்காட்சி
சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் ‘ஹிந்தி மாத’ நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் கண்டனங்களை பதிவு செய்து இருந்தனர். இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தில் ஏற்பட்ட குளறுபடிக்கு மன்னிப்பு கேட்பதாக டிடி தமிழ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிடி தமிழ் தொலைக்காட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்க வேண்டும் என்ற எந்த நோக்கமும் இல்லை. அசாதாரண சூழலை ஏற்படுத்தியதற்காக…
‘தமிழ்த்தாய் வாழ்த்து’ ஆளுநருக்கோ அல்லது ஆளுநர் மாளிகைக்கோ எந்த தொடர்பும் கிடையாது- ஆளுநரின் ஆலோசகர் விளக்கம்
சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் ‘ஹிந்தி மாத’ நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திராவிடம் குறித்து தொடர்ந்து கடும் விமர்சித்து வரும் சூழலில் தற்போது திராவிடம் என்று வார்த்தை இடம்பெற்ற வரி தற்செயலாக அல்லாமல் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் குறித்து கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து கவர்னரின் ஆலோசகர் திருஞானசம்பந்தம் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கவர்னர்…
தமிழர் பெரும்பாட்டன் ராவணன் அவமதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது: சீமான்
தமிழர் பெரும்பாட்டன் ராவணன் அவமதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழர் பெரும்பாட்டன் ராவணன் அவமதிக்கப்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது! ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் நகரங்களில் வருகின்ற அக்டோபர் 27 அன்று ராவண வதம் என்ற பெயரில் சிலர் நிகழ்வு ஏற்பாடு செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. கலை பத்தில் தலை சிறந்தவன் திசை எட்டும் புகழ்கொண்டவன் எங்கள் ராவணப் பெரும்பாட்டன். பத்து கலை என்பதை பத்து தலை எனத் திரித்து நம்பவியலாத ஆரிய புராண கதைகளை கட்டமைத்து அருவருக்கத்தக்க தோற்றத்தை உருவாக்கி அவமதித்ததோடு, தொல்தமிழ் மூதாதை ராவணப்பெரும்பாட்டன் உருவத்தை எரிப்பதை ஒவ்வொரு ஆண்டும் விழாவாகக் கொண்டாடுவதென்பது எவ்வகையிலும் ஏற்புடையதன்று. உலகின் எந்த மூலையில், எந்த வடிவில்…
ஈஷா அறக்கட்டளை: ஆள்கொணர்வு மனு தள்ளுபடி தமிழக அரசு விசாரணைகளுக்குத் தடையில்லை – உச்ச நீதிமன்றம்
ஆன்மிகத் தலைவர் என கூறப்படும் ஜக்கி வாசுதேவ் நிறுவிய ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஆள்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான பிற வழக்கு விசாரணைகளுக்கு தடையில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஈஷா அறக்கட்டளையில் இருக்கும் தனது இரண்டு மகள்களும் மூளைச்சலவை செய்யப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தந்தை ஒருவர் அளித்த புகார் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், புகார் தாரரின் இரண்டு மகள்களும், தங்களது சொந்த விருப்பத்தின் பேரிலேயே, ஈஷா யோகா மையத்தில் தங்கியிருப்பதாக தெரிவித்ததையடுத்து, உச்ச நீதிமன்றம் ஆள்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது, நாங்கள் ஆள்கொணர்வு மனு…
தேசிய கீதத்தில் திராவிடத்தை விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா ஆளுநர்? ஸ்டாலின் கேள்வி
தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார். டிடி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி தின விழா கொண்டாட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றபோது, இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் என்ற வரிகள் மட்டும் விடுபட்டு, பாடல் ஒலிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது, ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக்…
பெரியபாளையம் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- தரைப்பாலங்கள் முழுகியது
வங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதேபோல் ஆந்திரா பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பிச்சாட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி ஆற்றில் கலக்கும். இந்த நிலையில் ஆந்திரா பகுதி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்ய பலத்த மழையால் பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அஞ்சாத்தம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து புதுப்பாளையம் செல்ல ஆரணி ஆற்றில் குறுக்கே உள்ள தரைப்பாலம் மற்றும் ஆரணி சமுதாய கூடத்தில் இருந்து மங்களம் கிராமம் செல்லும் தரைப்பாலம் ஆகிய 2 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. தரைப்பாலங்களுக்கு மேல் சுமார் 3…
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா- மாணவ, மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் பட்டம் வழங்கினார்
சேலம் பெரியார் பல்கலைக்கழக 23-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்தார். அவரை சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வரவேற்றனர். இதனையடுத்து பேண்டு வாத்தியம் முழங்க கவர்னர் ஆர்.என்.ரவி, ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களுடன் விழா மேடைக்கு வந்தார். இதனையடுத்து நடந்த விழாவில் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகநாதன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். இந்தநிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழாவில் முதன்மை விருந்தினராக சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் க.ஜ.ஸ்ரீராம் பங்கேற்று பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி முனைவர்…
