திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பந்தக்கால்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. 4-ந்தேதி அதிகாலை அருணாசலேஸ்வரர் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. அன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு காலை மற்றும் இரவில் பஞ்ச மூர்த்திகள் மாடவீதி உலா நடைபெறும். 13-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழா பூர்வாங்க பணிகள் செய்வதற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடந்தது. அருணாசலேஸ்வரர் கோவில் சன்னதியில் உள்ள சம்பந்த விநாயகர் மற்றும் பந்தக் காலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து கோவிலில் இருந்து பந்தக்கால் எடுத்து வரப்பட்டு ராஜகோபுரம் முன்பு…

எல்லைதாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேர் கைது மீண்டும் இலங்கை அத்துமீறல்

இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை, படகுகளை பறிமுதல் செய்தல், ரோந்து கப்பலால் விசைப்படகுகள் மீது மோத செய்வது, நடுக்கடலில் தாக்குதல், வலைகளை அறுத்து சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களால் தமிழக மீனவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் தமிழக மீனவர்கள் 5 பேர் கைது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. மீனவர்களின் படகு ஒன்றையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. கைதான மீனவர்கள் 5 பேரும் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை கடற்படையினரின் பல்வேறு அச்சுறுத்தல்களால் தமிழக மீனவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

நேற்று கைதான ரவுடி சீசிங் ராஜா சுட்டுக்கொலை

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டி வந்த வீடு முன்பு அவரை ரவுடிக் கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றது. தமிழகம் முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வேலூர் சிறையில் இருந்த பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகனும் காங்கிரஸ் பிரமு கருமான அஸ்வத்தாமன், பெண் தாதா அஞ்சலை உள்பட 28 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்தனர். தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா.வை சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களில் 25 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.ஆம்ஸ்ட்ராங் கொலையில் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவுக்கும் தொடர்பு…

பேராயர் எஸ்றா சற்குணம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியாவின் பேராயருமான எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 85 ஆகும். இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, திமுக தலைவர் முக ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என பல அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். தேர்தல் சமயங்களில் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு தூதுவராகவும் இவர் செயல்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் கடந்த காலங்களில் ஈடுபட்டவர். இது ஒருபுறம் இருக்க தனது கருத்துகளுக்காக எஸ்றா சற்குணம் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடி சீசிங் ராஜா கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபராகன ரவுடி சீசிங் ராஜா கைதாகியுள்ளார்.தலைமறைவாக இருந்த ரவுடி சீசிங் ராஜாவை ஆந்திர மாநிலம் கடப்பாவில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.அண்மையில் சீரிங் ராஜாவை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்திருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.இதற்கு முன்பாக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்புவை நேற்று டெல்லியில் வைத்து தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்ததாக ரவுடி புதூர் அப்பு மீது குற்றச்சாட்டு எழுந்தது.

பிரதமர் மோடியை சந்திக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24-ஆம்தேதி டெல்லி பயணம்

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 118.09 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமையும் இந்த மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக அரசு பல தடவை கேட்டது. ஆனால் இதுவரை மத்திய அரசு எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளை மாநில அரசே செய்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. இதன் காரணமாக புதிய கல்வி கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதி ஒதுக்கீட்டை தமிழகத்துக்கு தராமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிதியை உடனே விடுவிக்குமாறு தமிழக…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- மேலும் 15 பேர் மீது பேர் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 10 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் மேலும் 15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஹரிஹரன், மலர்க்கொடி, சதீஷ்குமார், கோ.ஹரிஹரன், அஞ்சலை, சிவா, பிரதீப், முகிலன், விஜயகுமார், விக்னேஷ், அஸ்வத்தாமன், பொற்கொடி, ராஜேஷ், செந்தில்குமார், கோபி ஆகியோர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுவை பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை நாளை தொடங்குகிறது

மத்திய திருப்பதி என்றழைக்கப்படும்‌ பஞ்சவடி தலத்தில் எழுந்தருளியுள்ளஸ்ரீ வாரி வெங்கடாஜலபதி சன்னதியில்‌ புரட்டாசி சனிக்‌ கிழமைகளில்‌ கோலாகலவைபவங்கள்‌ தொடர்பாக தலைவர்‌ மற்றும்‌ நிர்வாக அறங்காவலர்‌ .கோதண்டராமன்‌ தெரிவித்திருப்பதாவது: திண்டிவனம் -புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள ஸ்ரீவாரி வேங்கடாஜலபதிக்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு சேவைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வழக்கம்போல்‌ இவ்வாண்டு மிகவும்‌ கோலாகலமாக நடைபெற சிறப்பான ஏற்பாடுகள்‌செய்யப்பட்டுள்ளன. இதன்படி ஸ்ரீவாரி வேங்கடாஜலபதி 21.09.2024 முதல்‌ சனிக்‌ கிழமை விசேஷ பழங்களினால்‌ அலங்காரம்‌28.09.2024 இரண்டாம்‌ சனிக்கிழமை சந்தனக்‌ காப்பு அலங்காரம்‌03.10.2024 வியாழக்‌ கிழமை விசேஷ திருப்பாவாடை ஸேவை 05.10.2024 மூன்றாம்‌ சனிக்கிழமை முத்தங்கி சேவை12.10.2024 நான்காம்‌ சனிக்கிழனை பூவங்கி சேவை ஆகியவை நடைபெறும்.புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகளிலும்‌ விசேஜா அலங்காரப்‌ பந்தலில்‌ உற்சவர்‌ ஸ்ரீ…

நிச்சயம் தங்கம் வெல்வது உறுதி – மாரியப்பன் தங்கவேலு

பாரீஸில் நடைபெற்ற 2024 பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்றவர் தமிழக தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு. ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இது பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் வென்ற மூன்றாது பதக்கம் ஆகும். பாராலிம்பிக்ஸில் பங்கேற்று சொந்த ஊர் திரும்பிய மாரியப்பனுக்கு மேளதாளங்கள் முழங்க உற்பசாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சொந்த ஊரில் மாரியப்பனை வரவேற்ற மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். இதைத் தொர்ந்து அவர் மக்கள் புடைசூழ அழைத்து செல்லப்பட்டார். இந்த முறை வெண்கலம் வென்றிருந்த நிலையில், அடுத்த பாராலிம்பிக்ஸில் நிச்சயம் தங்கம் வெல்வது உறுதி என மாரியப்பன் தங்கவேலு தெரிவித்தார். உடல்நிலை மற்றும் தட்ப வெப்பநிலை காரணமாக இந்த முறை தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்ததாக அவர் தெரிவித்தார்.

தவெக மாநில மாநாடு தேதி விஜய் அறிவிப்பு

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள செய்தியில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே… தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது. நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி (27.10.2024). மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம். விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது…