அமெரிக்கா பயணம் சாதனைப் பயணமாக அமைந்தது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

அமெரிக்க அரசுமுறைப் பயணம் தொழில்துறையில் புதிய திருப்புமுனையாக அமைந்த நிலையில், சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அமெரிக்காவிற்குச் சென்று அரசு முறைப் பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பி இருக்கிறேன். இது வெற்றிகரமான பயணமாகவும், சாதனைக்குரிய பயணமாகவும் அமைந்திருந்தது. தனிப்பட்ட எனக்கு அல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கான ஒரு சாதனைப் பயணமாக இந்தப் பயணம் அமைந்திருக்கிறது. உலக நாடுகளில் இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்களுடைய தொழில்களை தொடங்குவதற்கு தொழில் முதலீடுகளை செய்ய வைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த 28 ஆம் தேதி அமெரிக்கா சென்றேன். செப்டம்பர் 12 ஆம் தேதி வரை அங்கே இருந்திருந்தேன். இந்த 14 நாட்களும் மிகப் பெரிய பயனுள்ளதாக இந்தப் பயணம் அமைந்தது. உலகின் புகழ் பெற்ற தலைசிறந்த 25 நிறுவனங்களுடன் நான்…

மத்திய நிதியமைச்சரின் செயல் வெட்கப்பட வேண்டிய ஒன்று: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அமெரிக்க அரசுமுறைப் பயணம் தொழில்துறையில் புதிய திருப்புமுனையாக அமைந்த நிலையில், சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அன்னபூர்ணா விவகாரம் தொடர்பான கேள்விக்கு, அன்னபூர்ணா உரிமையாளரை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று. ஜிஎஸ்டி குறித்த நியாயமான கோரிக்கையைதான் அவர் முன்வைத்தார். அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

அன்னபூர்ணா நிறுவனரை மன்னிப்பு கேட்கச் செய்த வீடியோ வைரல் நிர்மலா சீதாராமனுக்கு குவியும் கண்டனங்கள்

கோவையில் மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன் மன்னிப்புக் கேட்கும் விடியோ தற்போது அகில இந்திய அளவில் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. கோவையில் ஜிஎஸ்டி பற்றி நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன் கேள்வி எழுப்பிய விடியோ கடந்த இரு நாள்களாக டிரெண்ட் ஆனது. இந்த நிலையில், கேள்வி கேட்ட சீனிவாசனை அழைத்து நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்புக் கேட்கச் செய்ததுடன், அந்த விடியோவையும் பாரதிய ஜனதா தரப்பிலிருந்து வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த விடியோவுடன் இணைந்தே கேள்வி கேட்ட தொழிலதிபரை மன்னிப்பு கேட்க வைத்ததாக, நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கோவையில் மத்திய…

மன்னிப்பு கோரிய தொழிலதிபரின் வீடியோ வெளியானதுமன்னிப்பு கேட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை

ஜி.எஸ்.டி. குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்டது பதிவாகி உள்ளது. இந்நிலையில் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில்,தனிப்பட்ட இந்த சந்திப்பு குறித்த வீடியோவை எங்கள் நிர்வாகிகள் வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். தமிழக பாஜக சார்பில் மன்னிப்பு கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அயலக மண்ணிலும் அரசு பணி; கோப்புகள் தேங்காது தமிழக முதல்வர் ஸ்டாலின்

அயலக மண்ணிலும் அரசு பணி தொடர்கிறது’ என முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 17 நாட்கள் அரசு முறைப் பயணமாக முதல்வர் ஸ்டாலின், அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து ஸ்டாலின் அழைப்பு விடுத்து வருகிறார். பல நிறுவனங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசு அதிகாரிகள், அமைச்சர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து அரசுக் கோப்புகளுக்கு கையெழுத்து போடும் படத்தை முதல்வர் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அவர் ‘ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் e-office வழியே பணி தொடர்கிறது எனக் கூறியுள்ளார்.

ஒடுக்கப்பட்டோரின் உயர்வுக்கு இமானுவேல் சேகரனின் தொண்டு உரமாகட்டும்- தமிழக முதல்வர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- தீண்டாமையை ஒழிக்கவும் சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் இன்று. நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம். சமத்துவமும் சமூக நல்லிணக்கமும் மிளிர்ந்த சமூகத்தை நோக்கிய நமது பயணத்துக்கு அவரது தொண்டு உரமாகட்டும்! இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

விநாயகர் சதுர்த்திை யமுன்னிட்டு திருச்சி உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்

திருச்சி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் உள்ள உச்சி பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை, மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ கொழுக்கட்டை என மொத்தம் 150 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டு புத்தர்களும் கலந்து கொண்டனர். திருச்சி மலைக்கோட்டையின் நடுவே தென் கயிலாயம் என்று போற்றப்படும் தாயுமான சுவாமி கோயிலும், மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும், மலையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சன்னதியும் உள்ளன. இந்தக் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று தொடங்கி செப்.20ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி இன்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி காலை 7 மணியளவில் மலைக்கோட்டை கோயில் யானை லட்சுமிக்கு கஜபூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜையும்,…

மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு – 20 ஆம் தேதி வரை சிறை – நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

சர்ச்சை பேச்சு தொடர்பாக கைதான மகாவிஷ்ணுவை செப்டம்பர் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து மகா விஷ்ணு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை அசோக்நகா், சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மகா விஷ்ணு எனும் மேடைப் பேச்சாளா், மாற்றுத்திறனாளிகளின் குறைபாடுகளுக்கு அவா்கள் முற்பிறப்பில் செய்த பாவம்தான் காரணம் என்று அவா் பேசியது சமூக ஊடகங்களில் பரவி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சைக் குறுக்கீடு செய்த பாா்வை மாற்றுத்திறனாளி தமிழாசிரியா் சங்கரிடம் வாக்குவாதம் செய்து மகா விஷ்ணு பேசியதற்கும் கடும் கண்டனங்கள் எழுந்தன. அவா் மீது தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவா் வில்சன், சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அதில், மகா…

“மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும்” நிகழ்சச்சி முடிந்து தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சியை கண்டித்து, சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக நியமனம் செய்து பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இவ்விவகாரத்தில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் 21 கேள்விகளுக்கு பதில்தமிழக வெற்றிக் கழகம் வழங்கியது

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்தார். அதோடு கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தமிழகம் முழுவதும் பூத் வாரியாக விரைவுப்படுத்த அறிவுறுத்தி உள்ளார். ஒரு கோடி முதல் 1.50 கோடி உறுப்பினர்களை முதல் கட்டமாக சேர்க்க அவர் உத்தரவிட்டு இருக்கிறார். இதன் காரணமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை எந்த கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் கட்சியின் தொடக்கத்தை எழுச்சி ஏற்படுத்தும் வகையில் பிரமாண்டமான முதல் அரசியல் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார். திருச்சி, சேலம், மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சென்னை உள்பட பல இடங்களில் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். திருச்சியில் நடத்துவதற்கு முடிவு செய்த நிலையில் அங்கு அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம்…