அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் நாடுமுழுவதும் உள்ள மாநிலங்களுக்கு கல்வி வளர்ச்சிக்காக நிதி வழங்கப்பட்டு வருகிறது. மோடி ஆட்சிக்கு பின்னர் இது புதிய கல்விக்கொள்கை என பெயர் மாற்றப்பட்டது. பெயர் மாற்றத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கல்வி வளர்ச்சிக்காக தமிழகத்திற்கு சரியாக நிதி ஒதுக்குவது இல்லை. இதற்கு காரணம், புதிய கல்விக்கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக மத்திய அரசு சொல்கிறது. புதிய கல்விக் கொள்கையின் மூலம் மத்திய அரசு சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக படிக்க வலியுறுத்துகிறது. இந்த புதிய கல்விக் கொள்கை சாமானிய மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் ‘கல்விக் கொள்கையில் இணைய மத்திய அரசு அழுத்தம் தருகிறது’ என திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- பிஎம் ஸ்ரீ…
Category: தமிழ்நாடு
பவானி ஊராட்சிகோட்டையில் மேக கூட்டங்களில் தோன்றிய சிவலிங்கம்-பொதுமக்கள் பரவசம்
ஈரோடு மாவட்டத்தில் காலை 6 மணிக்கு சூரிய உதயம் ஆரம்பித்து பின்னர் மாலை 6.30 மணிக்கு மேல் மறைகிறது. இதனால் சுமார் 7 மணி வரை வெளிச்சம் இருந்து கொண்டே உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் ஈரோடு மாவட்ட பகுதிகளில் சூரியன் மறையும் போது மேக கூட்டங்கள் சூழ்ந்து ரம்மியமாக காட்சி அளித்தது. ஒரு சில இடங்களில் சூரியன் மறையும் நேரத்தில் மேக கூட்டங்கள் சிவப்பு நிறம் மற்றும் பல்வேறு நிறங்களில் காட்சி அளித்தது. ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஊராட்சி கோட்டை மலைப்பகுதியில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்தோடு காணப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து மேக கூட்டங்களில் சிவலிங்கம் தோன்றுவது போன்று காட்சியளித்தது.நேரம் செல்ல, செல்ல சிவப்பு நிறத்தின் நடுவே சிவலிங்கம் இருப்பது போல் தனியாக தோன்றியது. இதனை கண்ட பொதுமக்கள் பலர்…
முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நேற்றிரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 10.16 மணிக்கு புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து வேறு விமானம் மூலம் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் 14-ந்தேதி வரை அதாவது 19 நாட்கள் அரசு முறை பயணம் மேற் கொள்கிறார். இன்றிரவு சான்பிரான்சிஸ்கோ சென்றடையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். 31-ந்தேதி சான்பிரான்சிஸ்கோவில் புலம் பெயர்ந்த தமிழர்களை சந்தித்து பேச உள்ளார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். செப்டம்பர் மாதம் 2-ந் தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து 12-ந்தேதி வரை தங்கி இருந்து பல்வேறு…
கல்விக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசு – எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
‘சமக்ரா சிக்ஷா அபியான்’ திட்டத்தின் கீழ் மத்திய அரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான முதல் தவணையாக ரூ. 573 கோடியை கடந்த ஜூன் மாதமே தமிழக அரசுக்கு விடுவித்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு தனது பங்குத் தொகையை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இதற்குக் காரணமாக புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு அமல்படுத்தவில்லை என்று மத்திய அரசு கூறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியா கல்வியில் சிறந்த நாடு. உலகிலேயே மனித வளம் அதிகமுள்ள நாடு. இந்த நாட்டில் தங்களுடைய கொள்கைகளை கல்வித் துறையில் திணித்து மனித வளத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் தற்போதைய மத்திய அரசு ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கதாகும். ஒரே வார்த்தையில் அழைத்தோம் – மத்திய ராணுவ அமைச்சர் நேரில் வந்து கருணாநிதியின் நாணயத்தை வெளியிட்டார்’ என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க.…
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்.பொதுமக்களுக்கு ஐயப்பன் எம்.எல்.ஏ நலத்திட்ட உதவி
கடலூர் ஒன்றியம் மதலப்பட்டு ஊராட்சி பெரியகாட்டுபாளையம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் பெரும் முகாம் நடைபெற்றது. புதுவையை அடுத்த மதலப்பட்டு உள்ளிட்ட 5 ஊரக மக்களுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய அரசால் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் மக்களுக்கு சென்றடையும் முறையில் முகாம்கள் அமைக்கப்பட்டு ஆட்சியர், அரசு அலுவலர்கள் நேரடியாக பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று மதலப்பட்டு ஊராட்சியில் பெரிய காட்டுபாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதில் மதலப்பட்டு, கிளிஞ்சிக்குப்பம், மேல் அழிஞ்சப்பட்டு, கீழ்…
உலகத்தின் கவனத்தை தமிழகத்தை நோக்கி ஈர்க்க வெளிநாட்டு பயணங்கள் மிக முக்கியமானவை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, முதலீடுகளை ஈர்க்க மகிழ்ச்சியுடன் அமெரிக்கா செல்கிறேன். திமுக ஆட்சியில் ரூ.9.99 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஒப்பந்தங்களால் 18.89 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். 3 ஆண்டுகளில் மட்டும் 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. போடப்பட்ட 872 ஒப்பந்தங்களில் 234 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 4 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. முதலீடுகள் மூலம் 2030-க்குள் ஒரு டிரில்லியன் பொருளாதார இலக்கை தமிழ்நாடு அடையும். தொழில் முதலீடுகள் முழுமையாக வந்தபிறகு அரசின் சார்பில் அறிக்கை வெளியிடப்படும். உலகத்தின் கவனத்தை தமிழகத்தை நோக்கி ஈர்க்க வெளிநாட்டு பயணங்கள் மிக முக்கியமானவையாக உள்ளது. முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டுப் பயணங்களை அதிகம்…
ஜீரோ ஆக்சிடேன்ட் டே(Zero Accident Day )- விழிப்புணர்வு ஏற்படுத்திய சென்னை போக்குவரத்து போலீசார்
சென்னையின் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், Zero accident day என்ற வாசகத்துடன் கூடிய ZAD விழிப்புணர்வு பிரசாரம், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் தொடங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பிரசாரமானது ஆகஸ்ட் 5 தொடங்கி ஆகஸ்ட் 25-ந்தேதி வரை 20 நாட்களுக்கு நடைபெற்றது. Zero accident day என்ற வாசகத்துடன் கூடிய ZAD விழிப்புணர்வு பிரசாரம் குறித்து வேப்பேரி டிராபிக் இன்ஸ்பெக்டர் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், சென்னை வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் 5.8.2024 முதல் இன்று வரைக்கும் 26.8.2024 வரை சென்னை பெருநகரத்தில் உயர் அதிகாரிகளின் உத்தரவுபடி பல நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நடத்தி இருக்கிறோம். ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவது விழிப்புணர்வு செய்து இருக்கிறோம். ஆகஸ்ட் 26-ந்தேதி ZAD (Zero accident day) 20 நாட்கள் விழிப்புணர்வு செய்து…
உழைக்காமல் பதவிக்கு வந்தவர் அண்ணாமலை- எடப்பாடி முன்னாள் முதல்வர் பழனிசாமி பேட்டி
சேலம் ஓமலூரில் கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. அரசு திட்டமிட்டு பழி வாங்கும் விதமாக பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்து வருகிறது. இவற்றை முறியடிக்கும் வகையில் அ.தி.மு.க. வக்கீல் அணி ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. அண்மையில் தி.மு.க. சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாணயம், சென்னையில் வெளியிடப்பட்டடது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மூத்த மத்திய மந்திரி கலந்து கொண்டார். மேலும் விழாவில் பா.ஜனதா மாநில தலைவர், தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரி மற்றும் பா.ஜனதாவினர் பலர் கலந்து கொண்டனர். ஆனால் தி.மு.க. இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. அவர்கள் அந்த கூட்டணியின் தேசிய தலைவர்களான சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அல்லது ராகுல்காந்தியை அழைக்கவில்லை. தி.மு.க. ஆட்சியை…
முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றி- அமைச்சர் சேகர்பாபு பேட்டி
தமிழ்க் கடவுள் முருக பெருமானின் 3-ம் படை வீடான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று தொடங்கியது. பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, மடாதிபதிகள், ஆதீனங்கள், நீதியரசர்கள், ஆன்மீக சொற்பொழிவாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் முப்பரிமாண பாடலரங்கம், சிறப்பு புகைப்பட கண்காட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தது. குடவரைக்கோவில் போன்ற அரங்கில் அமைக்கப்பட்டு இருந்த இதனை ஏராளமான பக்தர்கள் ரசித்தனர். முதல் அரங்கில் மாநாட்டு நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 2-ம் நாள் நிகழ்ச்சி முதல் நாள் மாநாட்டில் 300 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இன்று 800 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மொத்தம் 1300…
பல்லாயிரம் பேர் திரண்ட பழநி அனைத்துலக முருகன் மாநாடு
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வெளிநாட்டினர் உட்பட பல்லாயிரம் பேர் திரண்டனர். இம்மாநாட்டில் கலந்து கொண்ட நீதிபதி வி.சிவஞானம் பேசுகையில், ‘அவன் இன்றி நாம் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்த்துவதன் பயன்தான் இந்த முருகன் மாநாடு. இறைவனை எப்படி எல்லாம் பாடுவோம் என்று நம்முடைய முன்னோர்களும், அறிஞர்களும் பாடிக்காட்டி இருக்கிறார்கள்’ என்றார். நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் பேசுகையில், ‘தமிழ் அறிஞர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் அனைவரையும் ஒன்றிணைத்து இந்த மாநாட்டை நடத்துவது தமிழக அரசுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது’ என்றார். நீதிபதி பி.புகழேந்தி பேசுகையில், ‘தமிழ் மருத்துவத்தில் சித்த…
