காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரிலான விருது கடந்த 2021-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியும், அரசியல்வாதியுமான குமரி அனந்தனுக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது. சுதந்திர தின விழாவின்போது குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். தகைசால் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட குமரி அனந்தனுக்கு ரூ.10 லட்சம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக தமிழத்திற்கு பணியாற்றியவர் குமரி அனந்தன். எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டு செம்மலாக விளங்கும் குமரி அனந்தன் தகைசால் விருதுக்கு தேர்வாகி உள்ளார்.

ஸ்ரீரங்கம் பள்ளியில் திடீர் ஆய்வில் இறங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்- மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்டார்

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் அல்லூர் பாரதி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி மாவணர்களுடன் அமர்ந்து காலை உணவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாப்பிட்டார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

பட்டியலின மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தமிழ்நாட்டில் பட்டியலினத்தவரில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கி கலைஞர் ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. பட்டியலினத்தவருக்குள் மிகவும் பின்தங்கிய அருந்ததியினருக்குஉள்ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் அப்போது முன்மொழிந்தார். இதனையடுத்து அருந்ததியினருக்கு 2009-ல் திமுக ஆட்சியில் வழங்கிய 3% உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. அருந்ததியினருக்கு 3% இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 2020 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது தமிழ்நாடு அரசின் அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லுபடி ஆகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனாலும், ஏற்கனவே உள் ஒதுக்கீடு அனுமதிக்க கூடாது என்று ஆந்திரா வழக்கில் 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருந்தனர். இதன் காரணமாக இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது.…

ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசையில் பக்தர்கள் காவிரி ஆற்றில் இறங்கி நீராட தடை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி தகவல்

காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் ஆற்றில் இறங்கி நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அ.தி.பரஞ்ஜோதி தகவல் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- ஈரோடு மாவட்டத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழுள்ள காவிரி ஆற்றங்கரை அருகில் அமைந்துள்ள கீழ்கண்ட திருக்கோயில்களில் வெள்ள அபாய எச்சரிக்கையினை தொடர்ந்து பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. பவானி. அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில். கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் திருக்கோயில், காங்கேயம்பாளையம், அருள்மிகு நட்டாட்ரீஸ்வரர் திருக்கோயில், நஞ்சைகாளமங்கலம், அருள்மிகு மத்தியபுரிஸ்வரர் கல்யாண வரதராஜ பெருமாள் அருள்மிகு குலவிளக்கம்மன் திருக்கோயில், அம்மாபேட்டை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோயில், ஊஞ்சலூர், அருள்மிகு மாரியம்மன், செல்லாண்டியம்மன், பாசூர் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நஞ்சை கிளாம்பாடி அருள்மிகு…

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க ஊட்டியில் இருந்து 2 மருத்துவ குழு சென்றுள்ளது-அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நீட்தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறை கேட்டால் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கால தாமதம் ஆகியுள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ஆவலுடன் காத்திருந்த நிலையில் கலந்தாய்வு தள்ளிப் போகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 1-ந் தேதி தொடங்கும் என்று மத்திய மருத்துவ ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து தமிழக அரசு, மாநில இடங்களுக்கான கலந்தாய்வை தொடங்க முடிவு செய்தது. அதன்படி ஆகஸ்ட் 21-ந் தேதி பொது கலந்தாய்வு தொடங்குகிறது. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தமிழகத்தில்…

ரெட்பிக்ஸ் சேனலை மூடவேண்டும்- ஃபெலிக்ஸ் பேட்டியளிக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு

காவல்துறை அதிகாரிகளையும் பெண் காவலர்களையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து ஜாமின் கோரி ஃபெலிக்ஸ் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “நீண்ட நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, ஒரே சம்பவம் தொடர்பாக பல வழக்குகள் தன்மீது தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 80 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளதாகவும், சாட்சிகளையும், ஆதாரங்களையும் நான் கலைக்கமாட்டேன் என்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என ஃபெலிக்ஸ் தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி…

சொந்த வீடு கனவில் மண் அள்ளிப் போட்ட தமிழக அரசு – எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியா திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற 38 மாதங்களில்… மூன்று முறை மின்கட்டண உயர்வு! இருமடங்கு வீட்டுவரி மற்றும் சொத்துவரி உயர்வு! பலமுறை பால் பொருட்கள் விலை உயர்வு! பல மடங்கு பதிவு கட்டணங்கள் உயர்வு! விண்ணை முட்டும் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு! உணவுப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்வு! என்று விடியா திமுக அரசு தமிழக மக்களை பல வகைகளில் சிரமப்படுத்தி வருகிறது. ‘காணி நிலம் வேண்டும்-பராசக்தி காணி நிலம் வேண்டும்’ என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளுக்கேற்ப, கால் காணி நிலத்தையாவது சொந்தமாக்கிக் கொள்ளலாமா என்று ஏங்கும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் தலையில், கடந்த ஆண்டே நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்வு, அனைத்து பதிவுக் கட்டணங்களும் பலமடங்கு உயர்வு என்ற இடியை…

வயநாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 தமிழர்கள் பலி! 30 பேர் மாயம்

வயநாட்டில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 தமிழர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மேம்பாடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் 163 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், முண்டக்கை கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அந்த குடும்பத்தினர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், புலம்பெயர்ந்து முண்டக்கை கிராமத்தில் தற்போது வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது. ஒரே வீட்டில் 11 பேர் வசித்து வந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட கிராமங்களில் இருந்த தமிழகத்தை சேர்ந்த 30 பேர் மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தமயிலாடுதுறை நீதிமன்றம்!

விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் 2003ஆம் ஆண்டில் மதமாற்ற தடைச் சட்டத்தைக் கண்டித்து பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. தற்போது, வழக்கில் ஆஜராகததாலும், வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, அவர் தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்யாததாலும், திருமாவளவனுக்கு மாவட்ட அமர்வு நீதிபதி ஆர். விஜயகுமாரி பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கு அடுத்த மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மூன்று பேரைக் கொன்ற மக்னா யானை வனத்துறையினர் பிடித்தனர்

ஒசூா் அருகே கா்நாடக மாநில எல்லையில் மூன்று பேரைக் கொன்ற மக்னா காட்டு யானையை 8 கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினா் போராடி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனா். ஒசூா் அருகே கா்நாடக மாநில எல்லையான ஆனேக்கல்லை அடுத்துள்ள பன்னா்கட்டா தேசிய பூங்காவை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் மக்னா காட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்து வந்தது. பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வந்த இந்த மக்னா காட்டு யானை, அந்தப் பகுதியில் அடுத்தடுத்து மூன்று பேரை தாக்கிக் கொன்றது. இதனையடுத்து, அப்பகுதி மக்கள் மக்னா காட்டு யானையைப் பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதனையடுத்து மக்னா யானையைப் பிடிக்க கா்நாடக மாநிலத்தின் துபாரே, மத்திகோடு ஆகிய முகாம்களில் இருந்து 8 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. அதனைத் தொடா்ந்து வனத்துறை ஊழியா்கள், கும்கி…