தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்வுக்கு அதிமுகதான் காரணம் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுகவினர் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மின் கட்டண உயர்வு குறித்து அதிமுக போராட்டம் நடத்தியது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மின்கட்டண உயர்வு தொடர்பாக, அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது, வேடிக்கையாக இருக்கிறது. பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் அவர்களது நடவடிக்கை இருக்கிறது. மின்கட்டண உயர்வுக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் அதிமுகவினர்தான். உதய் மின்திட்டத்தில் அனைத்து மாநிலமும் இணைய வேண்டும் என அப்போதைய ஒன்றிய அரசு சொன்னபோது, அப்போதைய தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக மறுத்தார். திமுகவும் எதிர்த்தது. ஆனால் அம்மையார் மருத்துவமனையில் இருந்த நிலையில், அன்றைய முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மேலே இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக உதய்மின் திட்டத்தில் இணைத்தார். கடந்த 2017-ம்…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்- சித்தராமை- நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்ததை தொடர்ந்து, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் சித்தராமையா பதிவிட்டுள்ளார். அதில், “கர்நாடகாவின் அத்தியாவசியத் தேவைகளைப் பற்றி விவாதிக்க டெல்லியில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதில் நான் தீவிரமாக முயற்சித்த போதிலும், மத்திய பட்ஜெட் நமது மாநிலத்தின் கோரிக்கைகளை புறக்கணித்துள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடக மக்களின் பிரச்சனைகளை புறக்கணித்துள்ளார். எனவே நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் அர்த்தமில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜூலை 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். மேகதாது, மகதாயிக்கு…

காலி பாட்டில்களை திரும்பப் பெறும் டெண்டர்… தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்நீதிமன்ற ஆணைப்படி, டாஸ்மாக் நிறுவனம் காலி பாட்டில்களை டெண்டர் விட்டு திரும்பப் பெற வேண்டும்; அதன்மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். ஆனால், இந்த விடியா திமுக அரசு பதவியேற்றது முதல் டாஸ்மாக்கில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால், தமிழ்நாடு அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 200 கோடி ரூபாய் வரை வருமான இழப்பு ஏற்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, ஆளும் கட்சியினர் சிண்டிகேட் அமைத்து முறைகேடாக டாஸ்மாக் பார் நடத்துவதால், அரசுக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. உயர்நீதிமன்ற ஆணைப்படி நீலகிரி, திண்டுக்கல், கோவை வடக்கு, கோவை தெற்கு, தேனி, நாகப்பட்டினம், நாகர்கோவில், தருமபுரி, பெரம்பலூர், அரியலூர் என்று சில குடோன்களில் படிப்படியாக காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை…

காஞ்சிபுரம் பரந்தூர் விமான நிலையத்துக்கு மத்திய அரசு அனுமதி- மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு அறிவிப்பு

சென்னையில் 2-வது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னை அருகே அமைய உள்ள இந்த விமான நிலையத்துக்காக பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகளை மாநில அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (டிட்கோ) மேற்கொண்டு வருகிறது. இந்த விமான நிலையத்துக்கான அனுமதி கேட்டு மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு டிட்கோ கடிதம் வழங்கி இருந்தது.மாநில அரசின் இந்த பரிந்துரையை ஏற்று பரந்தூர் விமான நிலையத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இந்த தகவலை மாநிலங்களவையில் நேற்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்…

தமிழகத்துக்கு காவிரியில் 30 டி.எம்.சி. நீர் திறப்பு- துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தகவல்

மாண்டியா மாவட்டத்தில் காவிரி நதியின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ண ராஜசாகர் அணையைப் பார்வையிட புறப்படுவதற்கு முன் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- காவிரியில் இருந்து தினமும் 51,000 கன அடி நீர் தமிழகத்துக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 30 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளோம். மேலும் 10 டி.எம்.சி. தண்ணீரை விடுவிப்போம். இந்த ஆண்டில் வழங்கப்படும் தண்ணீர் தமிழகத்துக்கு வழங்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காவிரி நதிப்படுகையில் உள்ள 1,657 ஏரிகளையும் நிரப்பிக்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிட வேளாண் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான விதைப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக 5.90 லட்சம் குவிண்டால் விதை, 27 லட்சம் டன் ரசாயன உரம், 30 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 25,000 கோடி கடனுதவியை விநியோகிக்க திட்டமிட்டுள்ளோம்.…

சிங்களஅரசு மீண்டும் அட்டகாசம் ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்தது

சிங்களஅரசு மீண்டும் அட்டகாசம் ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்தது பாக் ஜலசந்தி, மன்னார் குளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கடந்த 15-ந்தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து மீனவர்கள் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்திருந்தனர். இதற்கிடையே கடலில் காற்றின் வேகம் குறைந்ததையடுத்து மண்டபம் பகுதி மீனவர்கள் நேற்று முன்தினமும், நேற்று காலை ராமேசுவரம் மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 497 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.இன்று அதிகாலையில் பெரும்பாலான படகுகள் இந்திய கடல் எல்லையை ஒட்டிய கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு…

“தமிழில் பெயர் பலகை வைப்பீர்!” – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

“வணிகர்கள் கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க தாமாகவே முன்வரவேண்டும்” என்று வணிகர்கள் நலவாரிய முதல் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழக அரசின் சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக, வணிகர்கள் நலனுக்காக வணிகர்கள் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த வாரியத்தின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாரியத்தின் துணைத் தலைவரான அமைச்சர் பி.மூர்த்தி, வணிக வரித்துறை செயலர், வணிக வரித்துறை ஆணையர், நிதித்துறை செயலர், தொழிலாளர் நலத்துறை செயலர் மற்றும் பல்வேறு வணிகர் சங்கங்களைச் சேர்ந்த வணிகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “இந்த வாரியத்தை மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உருவாக்கினார். தற்போது வரை இந்த வாரியத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 88,210 ஆக உயர்ந்துள்ளது. அடுத்த வாரிய கூட்டத்துக்குள் இந்த…

எதற்கும் ரியாக்ஷன் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். – பாஜக தலைவர் அண்ணாமலை

கோவை குஜராத் சமாஜத்தில் இன்று தன்னார்வலர்கள் கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- கோவை பாராளுமன்ற தொகுதியில் தேர்தலுக்கு பணியாற்றியபோது பா.ஜ.க. களப்பணியாளர்கள் 28 நாட்கள் மக்களை நேரடியாக சந்தித்து பிரசாரம் மேற்கொண்டனர். மக்கள் அருகில் சென்று அவர்களின் மனநிலையை அறிந்து கொள்ள முடிந்தது. இதில் பல சம்பவங்களை அனைவரும் சந்தித்தீர்கள். பலமுறை பலர் போலீஸ் நிலையங்களில் அமர வைக்கப்பட்டனர். அதுபோன்ற நேரங்களில் எல்லாம் எனக்கு தகவல்கள் பலரிடம் இருந்து கொந்தளிப்பாக வந்து கொண்டிருந்தன. கோவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. தோல்வி என்று சொல்லக்கூடாது. நமது வெற்றி சிறிது தள்ளிப்போய் உள்ளது என்று தான் கூற வேண்டும். கோவை தொகுதியில் 33 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். 100 பூத்களில் 1 அல்லது 2-ம் இடத்துக்கு…

வனத்துறைக்கு பணியாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதிய பணியாளர்கள் நியமனம்- தமிழக அமைச்சர் மதிவேந்தன்

நெல்லை மாவட்ட வன அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் வனத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:- வனத்துறையில் பணியாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதிய பணியாளர்கள் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. யானைகளை கண்காணிக்க, பாதுகாக்க வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட பலர் இருக்கிறார்கள். இதற்காக கூடுதல் நிதியும் முதல்-அமைச்சர் ஒதுக்கி இருக்கிறார். இதற்காக தனியாக குழு அமைக்க முடியாது. காட்டுப் பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசி இருக்கிறேன். அரசாணை விரைவில் வெளியிடப்படும். அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. மாஞ்சோலை விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. ஆகையால் அதைப் பற்றி பேச முடியாது. வனத்துறை சார்பில் நீதிமன்றத்தில் நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மணிமுத்தாறு…

பல்லடம் அருகே கைதிகளை அழைத்து சென்ற வாகனம் நடுவரியில் பழுதானதால் பரபரப்பு

திருப்பூர் மாவட்ட சிறையில் இருந்து பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாநகர போலீசார் வாகனத்தில் இன்று அழைத்து சென்றனர். திருப்பூர் – பல்லடம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வாகனம் பழுதடைந்து நின்றது. இதனைத்தொடர்ந்து ஓட்டுநர் வாகனத்தை சரி செய்ய முயன்றார். இருப்பினும் வாகனம் சரியாகாத காரணத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் வாகனத்தில் இருந்ததால் போலீசார் வேனை சுற்றிலும் பாதுகாப்புக்கு நின்றனர். மேலும் அவ்வழியாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்டனர். மாடியில் இருந்து கீழே விழுந்த அரசு ஊழியர் பலி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் செங்குந்தர் 6-வது தெருவில் வசித்து வந்தவர் சுந்தர்ராஜன் (வயது 40). இவருக்கு நித்தியா என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். சுந்தர் ராஜன் கடந்த…