பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 97 அடியை கடந்ததால் இன்று (ஜூலை 16) காலையில் அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக தண்ணீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, பில்லூர் வனப்பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. கோவையின் முக்கிய நீராதாரமாக உள்ள இந்த அணையை மையப்படுத்தி பில்லூர் 1 மற்றும் 2-வது கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பவானி ஆற்றை மையப்படுத்தி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்துக்கு தேவையான 15-க்கும் மேற்பட்ட கூட்டுக்குடி நீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மற்றும் கேரளா மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பில்லூர் அணையின் மொத்த…

மதுரை வடக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி துணைச் செயலாளர் வெட்டிக் கொலை

மதுரையில் இன்று காலையில், மதுரை வடக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியனை கும்பல் ஒன்று ஓட ஓட துரத்தி வெட்டிக் கொலை செய்தது. மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணை செயலாளராக இருந்தார். இன்று (ஜூலை 16) காலை இவர் தல்லாகுளம் பகுதியில் உள்ள வல்லபாய் ரோட்டில் சென்றபோது கும்பல் ஒன்று வழிமறித்து அவரிடம் தகராறு செய்து சரமாரியாக வெட்டியது. அந்தக் கும்பலிடமிருந்து தம்பித்து ஓடிய அவரை விடாமல் துரத்திய அந்தக் கும்பல், ஓட ஓட விரட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தல்லாகுளம் போலீஸார், பாலசுப்பிரமணியனின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில்,…

ரவுடிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக காவல் ஆய்வாளர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தல்

சென்னை காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றுக் கொண்டார். ரவுடிகளை ஒழிக்க ரவுடிகளின் மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் காவல் ஆணையர் அருண் காவல் துறையினருக்கு உத்தரவு ஒன்றை விடுத்துள்ளார் அதில்,

ஜூலை – 16 பாட்டாளி மக்கள் கட்சி தொடக்க நாள் – கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடுவோம் – ஜி.கே.மணி அறிவிப்பு

ஜூலை – 16 பாட்டாளி மக்கள் கட்சி தொடக்க நாள் – எல்லா இடங்களிலும் ஆங்காங்கே கொடியேற்றி இனிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் பெருமிதத்துடன் கொண்டாடுவோம் – ஜி.கே.மணி தமிழ்நாட்டில் மண் செழிக்க, மக்கள் மேம்பட, மொழிகாக்க, அனைவரின் உரிமைக்காகவும், மேம்பாட்டுக்காகவும் மகத்தான மாபெரும் சக்தி சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்டது பாட்டாளி மக்கள் கட்சி. சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்று அடுத்த நாள் விடியற் காலை வரை நடைபெற்ற பா.ம.க தொடக்க நிகழ்ச்சி தமிழ்நாடு வரலாற்றின் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சமூகநீதியை உயிர் மூச்சுக் கொள்கையாகவும், உண்மை ஜனநாயகம் நிலைக்கவும், ஏற்றத்தாழ்வற்ற சமத்துவம் மலரவும், சகோதர நல்லிணக்க மனித நேயம் பிறக்கவும், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவும், பிறப்புரிமை பெற்றிடவும், வேறுபாடு இல்லாத சமச்சீர் வளர்ச்சி கண்டிட போன்ற உன்னத…

சித்தா படிப்பு தொடர்பாக – உயர்நீதிமன்ற மதுரை கிளை தஞ்சை பலகலைகழகத்திற்கு கேள்வி

தஞ்சை மாவட்டம் வல்லத்தில் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வரும் ஜெயக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, “தான் சித்த மருத்துவம் கிளினிக் நடத்துவதில் தலையிடக் கூடாது என தஞ்சாவூர் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழ் பல்கலைக்கழகம் வழங்கும், சித்தா படிப்பு சான்றிதழை வைத்து சித்த மருத்துவம் பார்க்க முடியாது என சான்றிதழில் சிறிய அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது என பல்கலை தரப்பில் கூறப்பட்டது. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் எதன் அடிப்படையில் சித்தா சான்றிதழ் படிப்பு வழங்குகிறது என்றும் சிகரெட் கம்பெனிக்கும், தமிழ் பல்கலைக்கழகத்திற்கும் வித்தியாசம் இல்லையா ? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், யுஜிசியிடம் உரிய அனுமதி பெற்று உள்ளதா என்றும்…

மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி நீரை தராத கர்நாடகா அரசு- தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் முதல்வர் அறிவிப்பு

முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு அளித்த இறுதி தீர்ப்பையும், உச்ச நீதிமன்றத்தின் கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பையும் செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அந்த அமைப்புகள் 2018 ஜூன் முதல் செயல்பட்டு வருகின்றன. தற்போதைய தென்மேற்கு பருவமழைக் காலத்தில், கர்நாடக அணைகளின் நிலவரத்தை கருத்தில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர்மேலாண்மை ஆணையம் ஆகியவை தமிழகத்துக்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரை கணக்கிட்டு, ஜூலை 12 முதல் 31-ம் தேதி வரை தினசரி ஒரு டிஎம்சி விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த ஆணையை செயல்படுத்த…

தமிழகத்தில் 1.48 லட்சம் மகளிருக்கு இம்மாதம் முதல் ரூ.1,000 உரிமைத் தொகை விடுவிக்கப்பட்டது

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், மேல்முறையீடு அடிப்படையில் சேர்க்கப்பட்ட 1.48 லட்சம் மகளிருக்கு இம்மாதம் முதல் ரூ.1,000 உரிமைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது திமுகவின் தேர்தல் அறிக்கை அறிவிப்புகளில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதும் ஒன்றாகும். இந்த அறிவிப்பை செயல்படுத்த, கடந்தாண்டு மார்ச் 27-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்றும் பெயரிட்டார். இதையடுத்து, உரிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. இந்த வழிமுறைகளை பின்பற்றி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 அவர்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது. இத்திட்டத்தில், தமிழகத்தில் 106 முகாம்களில் உள்ள 19,487 முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவிகளும் இணைக்கப்பட்டனர். இத்திட்டத்தை பொறுத்தவரை, கடந்த…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான கணவருக்கு பாதுகாப்பு கொடுங்கள் காவல் ஆணையரிடம் மனைவி மனு

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். சென்னையில் கடந்த 5 ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை வழக்கில் கைதான 11 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஒருவரான திருவேங்கடம் நேற்று காலை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். விசாரணையின் போது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திருவேங்கடம் காவலர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதற்கு போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் திருவேங்கடம் சம்பவ இடத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்த ஒரு வார காலத்திற்குள் அதில் தொடர்புடனைய கைதி…

திமுக பெற்ற வெற்றி தற்காலிகமானது. மருத்துவர் ராமதாஸ் பேட்டி

அடக்குமுறைகளை மீறி பாமக வேட்பாளர் 56 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது, உண்மையான வெற்றி பாமகவுக்கு கிடைத்துள்ளது. பாமகவுக்காக பிரசாரம் மேற்கொண்ட கூட்டணி கட்சி தலைவர்கள், அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவின் வெற்றி தற்காலிகமானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.விக்ரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கே உண்மையான வெற்றி கிடைத்துள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளுங்கட்சி சார்பில் பணமும், பரிசுகளும் வாரி இறைக்கப்பட்ட போதிலும், அவற்றை புறக்கணித்து விட்டு 56,261 வாக்காளர்கள் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்திருப்பது ஜனநாயகத்திற்கும், பாமக.வின் மக்கள் பணிக்கும் கிடைத்த வெற்றி ஆகும். அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் உண்மையான வெற்றி பாட்டாளி மக்கள் கட்சிக்கு தான் கிடைத்திருக்கிறது. பணத்தை வாரி…

பணம், பொருள் என ஒரு ஓட்டுக்கு ரூ. 10 ஆயிரம் திமுக செலவு செய்துள்ளது- அன்புமணி ராமதாஸ் பேட்டி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது, வேட்பாளர் அன்புமணியை எங்களுக்கு தந்த நிறுவனர் ராமதாஸ்க்கும், எங்களுக்காக பிரசாரம் செய்த அனைத்து கூட்டணி கட்சி தலைவர்கள், குறிப்பாக நண்பர் அண்ணாமலைக்கும், முன்னால் முதல்வர் ஓபிஎஸ்க்கும், டிடிவி தினகரனுக்கும், ஜி.கே வாசன், பாரிவேந்தர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். விக்கிரவாண்டி தொகுதியில் நேர்மையான முறையில் பாமக வாக்குகள் பெற்றுள்ளது. ரூ. 250 கோடி செலவு செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது. மொத்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் குவிந்து 3 தவணையாக பணம் கொடுத்தனர். அரிசி, பருப்பு, பணம் மூக்குதி என பலவற்றை கொடுத்தார்கள். தேர்தல் ஆணையம் என்று ஒன்று இருக்கிறதா? அவர்களுக்கு எதற்கு சம்பளம்? பணம் பொருள் கொடுத்ததை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தவில்லை. திமுக வேட்பாளரை தேர்தல் ஆணையம் தகுதி…