நாகப்பட்டினம்-இலங்கை இடையிலான கப்பல் சேவை 18-ஆம் தேதி வரை நிறுத்தம்

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி ‘செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23-ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு ‘சிவகங்கை’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் சேவையை தொடங்கியது. இரண்டு நாட்டு பயணிகளின் ஆர்வத்தால் சனிக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இருமார்க்கத்திலும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ…

மறைந்தார் கொல்லங்குடி கருப்பாயி!

கொல்லங்குடி கருப்பாயி தனது 99 -ஆவது வயதில் சொந்த ஊரான கொல்லங்குடியில் சனிக்கிழமை காலமானார். சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த கருப்பாயி என்பவரும் தனது பாடல்களால் கொல்லங்குடிக்கு பெருமை சேர்த்தார்.இவரது வயல் வெளியில் ஒலித்த கிராமிய பாட்டு அகில இந்திய வானொலி வாயிலாக ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஒலித்தது. பின்னர் இயக்குநர், நடிகர் பாண்டியராஜன் கண்ணில் பட்டதால் அவரது ஆண்பாவம் படத்தில் நடிக்க வைத்ததுடன், சில பாடல்களை பாடவும் வைத்தார். தொடர்ந்து அவருடன் ஆயுசு நூறு, கோபாலா கோபாலா ஆகிய திரைப்படங்களிலும் நடித்தார்.நாட்டுப்புறப்பாடல்களில் முன்னோடியாக கருதப்படும் இவருக்கு கடந்த 1993 -ல் தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. பாடல் ஒலிப்பதிவிற்கு சென்றபோது இவரது கணவர் இறந்ததால், திரைத்துறையிலிருந்து விலகினார். தன் மகளின் இறப்பினாலும் ஒடுங்கிப்போனார். கொல்லங்குடியில் தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து…

ஆடி மாதம் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பம்- அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவிப்பு

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம் செல்ல தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் மக்கள் தாய் தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டுப் போற்றி வருகின்றனா். பல்வேறு திருக்கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று வழிபடுவதை பெரும் விருப்பமாகவும் கொண்டுள்ளனா். இதைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு 1,003 பக்தா்களும், புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு 1,008 பக்தா்களும் ஆன்மிகப் பயணமாக அழைத்து செல்லப்பட்டனா். தொடா்ந்து, 2025-2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு இந்த ஆண்டு 2,000 பக்தா்கள் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவா்”என அறிவிக்கப்பட்டது. அதைச் செயல்படுத்தும் வகையில் இந்த ஆண்டு…

விபத்தில் சிக்கி மூலச் சாவடைந்த இளம் பெண்ணின்உடல் உறுப்பு தானம் 7 பேர் பயன்பெற்றனர்

விபத்தில் சிக்கி மூலச் சாவடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில் அதன் மூலம் 7 பேர் பயன் அடைந்துள்ளதாக மருத்துவர் முருகேசன் தெரிவித்தார் தனது சகோதரி இல்லையென்றாலும் அவருடைய இதயம் எங்கோ ஓரிடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது மனதுக்கு ஆறுதலாக இருப்பதாக உறவினர்கள் கண்ணீர் மல்க பேட்டி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சேர்ந்தவர் செல்வ கணபதி -சீதா தம்பதியினர், இவர்கள் கடந்த 11-ம் தேதி தனது இரண்டு குழந்தைகளுடன் குறிஞ்சிப்பாடியில் இருந்து கடலூரில் உள்ள கோவிலுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது குறிஞ்சிப்பாடி அடுத்த தம்பி பேட்டை பாலத்தின் அருகே வரும் பொழுது திடீரென ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் செல்வ கணபதி, மற்றும் அவருடைய 3 வயது குழந்தை சம்பவ…

அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் ஏறுகிறது- ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, 2026 தேர்தல் வரை நான்தான் தலைவராக இருப்பேன். அதன் பிறகு எல்லாம் அன்புமணிதான் என கூறினார். இந்த நிலையில் இன்று அவர் தைலாபுரம் தோட்டத்தில் திடீரென நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, என் மூச்சு உள்ளவரை நான்தான் தலைவராக இருப்பேன் என கூறினார். தொடர்ந்து அவர் கூறியதாவது:- அன்புமணியின் செயல்பாடுகளால் அவருக்கு தலைவர் பதவி வழங்க மாட்டேன். குடும்பத்தினர் அரசியலுக்கு வரக்கூடாது என கூறியதை காப்பாற்ற முடியவில்லை. பா.ம.க.வை தொய்வின்றி நடத்த எனக்கு ஆதரவு உள்ளது.கட்சியின் முக்கிய தலைவர்கள் கூறியதால்தான் அன்புமணிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பெற்றோரை மகிழ்ச்சியாக வைக்க வேண்டும். தாய்-தந்தையை மதிக்க வேண்டும். ஆனால், அன்புமணி மைக்கை தூக்கி வீசுவதும்,…

தி.மு.க. நிர்வாகிகளுடன் நேருக்கு நேர் சந்திப்பு:தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்படும்படி முதலமைச்சர் அறிவுறுத்தல்

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை முன்வைத்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு நிலவரம் எப்படி உள்ளது என்பதையும் அவர்களிடம் கேட்டறிந்து வருகிறார். இந்த நிலையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினராக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார்.இதற்காக உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 20-ந்தேதி முதல் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை தொடங்க உள்ளது. இதற்கிடையே மதுரையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில்,” ஜூன் முதல் வாரத்தில் இருந்து, என்னுடைய பணி என்னவென்றால், ”உடன்பிறப்பே…

விவசாயிகளால் தான் இந்த மண்ணும் மக்களும் மகிழ்ச்சியாக மன நிறைவோடு இருக்கிறார்கள்-தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்பேச்சு

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே வேளாண் உழவர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தும், விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: டெல்டா பாசனத்ததுக்கான தண்ணீரை நாளை மேட்டூர் அணையில் இருந்து திறந்து நான் வைப்பதற்கு முன், இன்று மேற்கு மண்டல வேளாண் குடி மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம் வேளாண் துறையினர் ஈரோட்டில் மிக சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். அதற்காக முதலில் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த பிரமாண்ட கண்காட்சி அரங்கை பார்வையிட்டபோது என் மகனதில் அளவில்லாத மகிழ்ச்சி உண்டாகியது. அதற்காக எனது வணக்கத்தையும் நன்றியும் தெரிவிக்க விரும்புகிறேன். விவசாயிகளால் தான் இந்த மண்ணும் மக்களும் மகிழ்ச்சியாக மன நிறைவோடு இருக்கிறார்கள் தமிழ்நாட்டின் வேளாண் துறை மக்கள்…

சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமியின் புகாரை ரத்து செய்ய முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யமுடியாது எனக்கூறி சீமான் தொடர்ந்த…

முதலமைச்சர், கவர்னர் குறித்து வரம்பு மீறி டுவிட் செய்துள்ளார்.தமிழிசை சவுந்தரராஜன்

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை மறைக்கவே போராட்டம் நடத்துகின்றனர்- தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுக்க சொன்னால், கவர்னர் பிரிவினை வாதம் பேசுவதாக தி.மு.க.வினர் சொல்கிறார்கள். கவர்னர் தேசிய கீதம் பாட வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு அனுமதிக்கவில்லை. மாறாக அவருக்கு எதிராக தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி கொண்டிருக்கின்றனர். ஆளுங்கட்சியான தி.மு.க. போராட்டம் செய்வதற்கு அனுமதி இருக்கிறது. ஆனால் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் மட்டும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இப்போது இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இவர்களது ஆர்ப்பாட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படவில்லையா? கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் போராட்டம்…

ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு!

ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும்வகையில் யுஜிசி விதிகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது அரசியலமைப்புக்கு எதிரானது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என யுஜிசி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆளுநர் பரிந்துரைப்பவரே தலைவராகவும், யுஜிசி பரிந்துரைப்பவர் உறுப்பினராகவும் இருப்பார்கள், பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவரே மற்றொரு உறுப்பினராக இருப்பார், இதனால் மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் விதிகளை மாற்றியுள்ள யுஜிசி-க்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘பல்கலைக்கழக வேந்தர் நியமனத்தில் ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவது மற்றும் கல்வியாளர்கள் அல்லாதவர்கள் இந்தப் பதவிகளை வகிக்க அனுமதிப்பது உள்ளிட்ட புதிய யுஜிசி விதிமுறைகள், கூட்டாட்சி மற்றும் மாநில…