சட்டப்பேரவையில் இருந்து இன்றும் அதிமுக வெளிநடப்பு செய்தது. அதன் பின்னர், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, கள்ளச் சாராய மரணங்களுக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3-ம் நாள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் போலவே அதிமுக நிர்வாகிகள் இன்றும் கருப்பு உடை அணிந்தவாறு சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். தொடர்ந்து சட்டப்பேரவை தொடங்கிய நிலையில், கேள்வி நேரத்துக்கு முன்பாகவே அதிமுகவினர் கள்ளச் சாராய சம்பவத்துக்கு நீதி கேட்டு அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக பேச வேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கை வைத்த நிலையில், நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது என்றும், பேச வேண்டிய நேரத்தில் பேச அனுமதி தருகிறேன் என்றும் பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார். இதனால் அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு…
Category: தமிழ்நாடு
கடந்த ஆண்டில் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.46 ஆயிரம் கோடி வருமானம்
சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக அரசுக்கு மது விற்பனையில் ஆயத்தீர்வை மற்றும் விற்பனை வரி மூலம் கடந்த 2003ம் ஆண்டில் ரூ.3 ஆயிரத்து 639 கோடியே 93 லட்சம் வருவாய் கிடைத்தது. ஆனால் கடந்த 2023-24ம் நிதியாண்டில் ரூ.45 ஆயிரத்து 855 கோடியே 67 லட்சம் வருமானம் கிடைத்து உள்ளது. கடந்த 2022-23-ம் நிதியாண்டில் ரூ.44 லட்சத்து 121 கோடியே 13 லட்சம் வருவாய் வந்துள்ளது. அதன்படி முந்தைய ஆண்டினைவிட கடந்தாண்டு ரூ.1,734 கோடியே 54 லட்சம் வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து ஜம்மு-காஷ்மீர் ஏடிஜிபி ஆய்வு
அமர்நாத் இந்தியாவில் உள்ள புனித யாத்திரை தலங்களில் ஒன்றாகும். ஜம்மு-காஷ்மீரில் உள்ள 3,900 மீட்டர் உயரமுள்ள அமர்நாத் குகைக் கோவிலுக்கு ஆண்டுதோறும் யாத்ரீகர்கள் பயணம் மேற்கொள்வாரக்ள். 52 நாள் புனித யாத்திரையான இது, வருகிற ஜூன் 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19-ம் தேதி நிறைவடைகிறது. ஜம்மு-காஷ்மீரில் அவ்வப்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்து வருகிறது. பல அப்பாவி மக்களும் உயிரிழந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகளை ஏடிஜிபி ஆனந்த ஜெயின் ஆய்வு செய்தார். அவர் சந்தர்கோட் மற்றும் ரம்பன் ஆகிய இடங்களில் உள்ள லங்கார் தளங்களையும் ஆய்வு செய்தார்.மேலும், அமர்நாத் யாத்திரையை பாதுகாப்பாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க மூத்த காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுடன் ஏடிஜிபி ஆனந்த் ஆலோசனை நடத்தினார்.
சென்னை புறநகர் வழித்தடத்தில் ஏ.சி. ரெயில்
மும்பையில் ஏற்கனவே புறநகர் ரெயில்களில் ஏ.சி. வசதி உள்ளது.சென்னையில் சென்னை பீச் முதல் செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. ரெயில்கள் இயக்க தென்னக ரெயில்வே முயற்சி மேற்கொண்டது. இதற்கான பிரத்யேக ரெயிலை சென்னை ஐசிஎஃப் தயாரித்து வருகிறது. மொத்தம் 8 ரெயில்கள் தயாரித்து வருவதாகவும், அதில் இரண்டு சென்னை புறநகர் சேவைக்கு வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் ரெயில்வேத்துறை இரண்டு ரெயில்களை தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு புறநகர் வழித்தடத்தில் பயணிப்போர் ஏ.சி. பெட்டியில் பயணிக்கலாம். இதனால் வியர்வையின்றி, சோர்வின்றி வேலைக்கு செல்லலாம். வேலை முடிந்து வீட்டிற்கு செல்லலாம். இதில் பயணிப்பதற்கான கட்டணம் தொடர்பான தகவல் வெளியாகவில்லை.
விருப்ப ஓய்வு குறித்து வதந்தி பரப்பவேண்டாம் கள்ளக்குறிச்சி முன்னாள் எஸ்.பி. பரபரப்பு வீடியோ
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதில் கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த மோகன்ராஜ் உறுதியாக இருந்தார் என்றும் அரசியல் அழுத்தம் காரணமாக அவர் விருப்ப ஓய்வில் சென்றார் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் பதிவு சர்ச்சையானது.இந்நிலையில் அண்ணாமலையின் கருத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். தற்போது கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற துயரச் சம்பவத்தை தொடர்பு படுத்தி, சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். நான் பணி ஓய்வு பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள எனது மகள் மற்றும் மருமகனின் பிரசவத்தை கவனத்தில் கொள்வதன் கட்டாயத்தின் பேரில்…
தமிழகத்தில் 3,500 சதுர அடி வரை கட்டிடங்களுக்கு இனி அனுமதி தேவையில்லை
சட்டசபையில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் மானிய கோரிக்கையின் போது அமைச்சர் முத்துச்சாமி பேசியதாவது:- தமிழகத்தில் பொதுமக்கள் எளிதாக பயன் அடையும் வகையில் 2 ஆயிரத்து 500 சதுர அடி நிலத்தில் 3 ஆயிரத்து 500 சதுரடி வரை கட்டப்பட்டும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு இனி கட்டிட அனுமதி பெற தேவையில்லை என்று ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால் அவர்களுக்கு சுயசான்று மூலம் அனுமதி வழங்கப்படும். கட்டிட அனுமதி தேவையில்லை என்றாலும் அவர்கள் கட்டிட விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். அதே போல் 750 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் கட்டிடங்கள் 8 சமையலறைக்குள் இருந்தால் அவர்களுக்கு கட்டிட நிறைவு சான்றிதழ் தேவையில்லை என்று சொல்லப்பட்டு உள்ளது. ஆனால் அவர்கள் அதற்காக விதிகளை மீற கூடாது. கட்டிட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அமைச்சர்…
விக்கிரவாண்டி தொகுதியில் 56 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
இவர்களில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 3 மனுக்களும், பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா, சுயேச்சை வேட்பாளர்கள் காந்தியவாதி ரமேஷ், அக்னி ஆழ்வார், நூர்முகமது, ராஜேந்திரன் ஆகியோர் தலா 2 மனுக்களும் தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில் மொத்தம் 64 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெறுவதற்கு 26-ந்தேதி (புதன்கிழமை) கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று மட்டும் ஒரே நாளில் 32 சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். இதில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, விதவைக்கோலத்தில் ஆறுமுகம், எம்.ஜி.ஆர். வேடத்தில் நூர்முகமது உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள். இதன் காரணமாக விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அலுவலகமான தாலுகா…
பெண்களின் பாதுகாப்புக்காக இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு, துறை சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார். அப்போது கூறியதாவது:- சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி அரசு மானியமாக தலா ஒரு லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மானியம் வழங்கப்படும். 2 கோடி ரூபாய் செலவில் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை இயக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். பெண் குழந்தைகளுக்கான அரசு நலத்திட்டங்களில் பயன்பெறுவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்படும். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம் 200 பயனாளிகள் சுய தொழில் செய்ய ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும். 6 மாவட்டங்களில் மகளிர் விடுதிகள்…
கள்ளச்சாராய விவகாரம் கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர் தமிழக சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அனைவரும் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
தமிழக சட்டசபை இரண்டாவது நாள் அமர்வு கூடியது. கேள்வி நேரம் தொடங்கும் முன் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மானிய கோரிக்கையை தவிர்த்துவிட்டு கள்ளச்சாராய விவகாரத்தை விவாதிக்க அ.தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்தனர். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக கோரி எழுதிய காகிதங்களை தூக்கி காண்பித்து இருக்கையை முற்றுகையிட்டதால் சபாநாயகர் அப்பாவு கண்டித்தார். அமளியில் ஈடுபட வேண்டாம் என்றும் அமைதியாக இருக்குமாறும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயர் அப்பாவு அறிவுறுத்தினார். இருப்பினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அ.தி.மு.க.வினர் சட்டசபையில் இருந்து வெளியேற்றுமாறு காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. மற்றும் பாம.க. உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
முழு மதுவிலக்கை அமல்படுத்துவதே விஷ சாராய கொடுமைகளை தடுக்கும் தீர்வு – திருமாவளவன்
இது சம்பந்தமாக திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கள்ளக்குறிச்சியில் ‘மெத்தனால்’ என்னும் அடர் ஆல்கஹால் கலந்த சாராயம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனை குடித்த அப்பகுதிகளைச் சார்ந்த 140- க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரவலம் நாட்டைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தக் குரூரத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதுதான் இந்தக் கொடுமையைத் தடுக்கும் நிரந்தர தீர்வு என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம். மெத்தனால் என்னும் நஞ்சு கலந்த கள்ளச்சாராயம் கூடுதல் போதை அளிப்பதாகச் சொல்லி, சட்டத்துக்கு விரோதமாக ஒரு கும்பல் இந்த வணிகத்தில் ஈடுபட்டுவருகிறது. மீளமுடியாத போதைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் தாம் அந்த வகையான கள்ளமதுவுக்கு வாடிக்கையாளர்களாக மாறி வருகின்றனர். இத்தகைய கள்ளவணிகம்…
