கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மதிமுக எம்.பி. துரை வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
Category: தமிழ்நாடு
கள்ளச்சாராய உயிரிழப்பு 47 ஆக உயர்வு-ஆட்சியர் அதிர்ச்சி தகவல்
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜிப்மர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ள 16 பேரும் கவலைக்கிடம் மருத்துவமனை அறிக்கை
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீதமுள்ள 16 பேர் நிலை குறித்து ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- ஜிப்மர் மருத்துவமனையில் ஜூன் 19, 2024 அன்று விஷச்சாராயம் அருந்திய 19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள அனைவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இதில், 10 நோயாளிகளுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட சிரமம் இருந்ததால் அவர்களுக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு, உயர்தர உயிர்காக்கும் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மீதமுள்ள 6 நோயாளிகளும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அனைத்து நோயாளிகளுக்கும் பலதரப்பட்ட மருத்துவ குழுக்களால் மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும்…
கள்ளச்சாராய மரணங்களுக்கு தமிழக அரசின் அலட்சியப் போக்கே காரணம் -இயக்குனர் பா ரஞ்சித்கண்டனம்
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக்கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்கள்.
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார். மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார். உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர். இதைதொடர்ந்து, பாதிக்கப்பட்ட கருணாபுரம் கிராமத்திற்கும் உதயநிதி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள உடல்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்களுக்கு ரூ.10 லட்சம் காசோலையை வழங்கினார்.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் புழக்கம் அதிகரித்து விட்டது- பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி
சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழகத்தில் கள்ளச்சாராயம் புழக்கம் அதிகரித்துவிட்டது. சம்பந்தப்பட்ட அமைச்சர் கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலக வேண்டும். மணல் கடத்தும் கும்பல் அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், சாமானிய மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு இருக்கும்.நீதியரசர் சந்துரு அளித்துள்ள அறிக்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத பல அம்சங்கள் உள்ளது.பள்ளிக் கூடத்தில் சாதி இருக்க கூடாது என்பதில், பாஜகவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கள்ளர் சீர்மரபு பள்ளிகளை ஆதிதிராவிட பள்ளிகளுக்கு கீழ் கொண்டு வரும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆல்பாபெட் ஆர்டரில் மாணவர்களை வகுப்பறையில் உட்கார வைக்க…
கள்ளச்சாராயம் விவகாரம்- பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அதிரடி மாற்றம்- எஸ்.பி., சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதில் பிரவீவன், சேகர், மணிகண்டன், சுரேஷ் மற்றும் தனக்கோடி என்ற மூதாட்டி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் விரைந்துள்ளனர்.மேலும், உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அப்பகுதியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது.பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.மேலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 17 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 10க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்வரன் குமார் ஜடாவத் பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மாவட்ட எஸ்.பி., சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, புதிய…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை
“கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததுடன், 10க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். கஞ்சா, குட்கா, அரசு விற்கும் மதுவினைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையும் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கவே நல்ல சாராயம் விற்பதாகக் காரணம் கூறிய திமுக அரசு, தற்போது கள்ளச்சாராய விற்பனையையும் தடுக்கத்தவறி 5 உயிர்களைப் பலிகொண்டுள்ளது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்குச் சீர்கெட்டுள்ளது என்பதையுமே காட்டுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு மே மாதம் விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட…
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற கூடாது- ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து போன்ற இடங்களில் தனியார் நிறுவனம் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் நிலங்களை 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்று தேயிலை தோட்டங்களை நடத்தி வருகிறது. அங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிகின்றனர். தனியார் நிறுவனத்தின் குத்தகை காலம் வருகிற 2028-ம் ஆண்டுடன் முடிவடையும் நிலையில், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வை அறிவித்தது. அதன்படி தனியார் நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிய விரும்புகிறவர்களுக்கு வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்யவும், தொடர்ந்து பணியாற்ற விருப்பமில்லாதவர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்குவதாகவும் அறிவித்தது. விருப்ப ஓய்வுபெறும் தொழிலாளர்கள் நேற்று வரை விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்களுக்கு 25 சதவீத நிவாரணத்தொகையும், வருகிற ஆகஸ்டு மாதம் 7-ந் தேதிக்குள் குடியிருப்புகளை காலி செய்து உடைமைகளை திருப்பி ஒப்படைத்தவுடன் மீதி 75…
பாஸ்போர்ட், விசா இல்லாமல் தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 9 பேரிடம் தீவிர விசாரணை
பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் தங்கி சிப்காட்டில் பணி புரிந்து வந்த வங்காளதேசத்தை 9 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதன் முதற்கட்ட விசாரணையில் இந்திய நாட்டில் வசிப்பதற்கான பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லாத 5 பேர் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.
