மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 24 மணி நேரத்தில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கின்னஸ் புத்தகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ சான்றிதழை பெற்றுக்கொண்டார். இந்த சாதனை குறித்து மோகன் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தூய்மையான நகரம் என்ற சாதனையை தொடர்ந்து ஒரே நாளில் அதிக மரக்கன்றுகள் நடப்பட்ட நகரம் என்ற சாதனையையும் படைத்த இந்தூரின் சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தூர் நகரம் ஒரே நாளில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பு ஒரே நாளில் 9,26,000 மரக்கன்றுகளை நட்டு அசாம் மாநிலம் கின்னஸ் சாதனை புடைத்திருந்தது. அச்சாதனையை தற்போது இந்தூர் முறியடித்து புதிய சாதனையை
Category: பொது செய்தி
காட்பாடி அருகே ஏ.டி.எம் எந்திரம் உடைத்து ரூ. 25 லட்சம் கொள்ளை
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குடிபாலா வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அமைந்துள்ளது. இங்குள்ள ஏடிஎம் மையத்தில் நேற்று இரவு முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் புகுந்தனர். அவர்கள் வெல்டிங் எந்திரம் மூலம் ஏடிஎம் எந்திரத்தை உடைத்தனர். அதிலிருந்து ரூ.25 லட்சத்து 98,400 பணத்தை கும்பல் கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று காலையில் ஏடிஎம் மையத்திற்கு சென்ற பொதுமக்கள் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் முகமூடி அணிந்த கும்பல் ஏடிஎம் உடைத்து பணத்தை அள்ளிய காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனையடுத்து சித்தூர் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சித்தூர் மாவட்ட எல்லையில் உள்ள வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கும்…
புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலக ஊழியருக்கு பணிநிறைவு பாராட்டு விழா
புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலகத்தில் பணியாற்றிய ஊழியருக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடைப்பெற்றது சட்டசபைச் செயலகத்தின் செயலர் தயாளன் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில் சட்டசபை பல்நோக்கு பணியாளர் முகமது ஆரிப்க்கு பணிநிறைவைப் பெற்றதை பாராட்டி பேசினார்.37 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்றத்திலேயே பணியாற்றியவர் கடமையுணர்வோடு பணியிற்றியவர் என குறிப்பிட்டார். கண்காணிப்பாளர் முருகன் அவரின் சிறப்புகளை எடுத்துரைத்தார். செயலர் தயாளன் நினைவு பரிசினை வழங்கினார் இவ்விழாவில் விவாதப்பதிவாளர் அலமேலு கண்காணிப்பாளர்கள் முருகன் , சுகுமாரன் மற்றும் செயலக ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்
டி20 உலகக்கோப்பை தொடரை 7 ரன்கள் வித்தியாசத்தில் கைப்பற்றிய இந்தியா
பரபரப்பாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த போட்டி முடிந்த பிறகு உலகக் கோப்பையை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஸ்டைலாக வாங்கினார். இதை தொடர்ந்து அனைவரும் உலகக் கோப்பையை கையில் ஏந்தி கொண்டாடினர். அப்போது ஒரு ஓரமாக இருந்த இந்திய அணியின் பயிற்சியாளரை விராட் கோலி அழைத்து வந்து அவரிடம் கோப்பை வழங்கினார். இதனால் உணர்ச்சிவசப்பட்ட ராகுல் டிராவிட், கோப்பை கையில் ஏந்தி ஆக்ரோஷமாக ஆர்பரித்தார். அவருடன் சேர்ந்து அனைத்து வீரர்களும் இதனை கொண்டாடினர். இந்திய அணியின் கேப்டனாகவோ, ஒரு வீரராகவோ உலகக்கோப்பையை கையில் ஏந்தி சாதிக்க முடியாத ராகுல் டிராவிட், ஒரு பயிற்சியாளராக உலகக்கோப்பையை கைகளில் ஏந்தி…
புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் கவிஞர்கள் திருவிழா செம்மொழி நாள்விழா நடந்தது
புதுவை தமிழ்ச் சங்கம் சார்பில் கவிஞர்கள் திருவிழா செம்மொழி நாள் விழா நேற்று இரவு நடந்தது. புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவிற்கு சங்கத்தின் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலாளர் சீனு மோகன்தாஸ் வரவேற்றார். துணைத்தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, பொருளாளர் அருள் செல்வம், துணை செயலாளர் தினகரன் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் கண்ணதாசன் ஒரு மீல் பார்வை என்ற தலைப்பில் காருண்யா நடராசன், கவிஞர் மருதகாசி பாடல்களின் சிறப்புகள் என்ற தலைப்பில் தமிழ் சங்கத் தலைவர் முத்து, மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் என்ற தலைப்பில் சங்க செயலாளர் சீனு மோகன்தாசு ஆகியோர் உரையாற்றினர்.தனித்தமிழ் இயக்க தலைவர் தமிழமல்லனுக்கு செம்மொழி விருது வழங்கப்பட்டது. செம்மொழி தமிழ் மொழி என்ற தலைப்பில் நடந்த பாவரங்கில் தாகூர் அரசு கலைக்கல்லூரி முன்னாள் தமிழ் துறை தலைவர் அவ்வை நிர்மலா பேசினார்.…
நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு
நேபாள நாட்டில் பருவமழை தொடங்கியதில் இருந்து அங்கு கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. கனமழை மற்றும் மின்னல் தாக்குதலும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. இதில் 3 குழந்தைகளும் அடங்குவர். மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நிலச்சரிவில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. கனமழையால் ஏற்படும் நிலச்சரிவுகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பல லட்சம் பேர் பருவகாலத்தின்போது ஏற்படும் மழை தொடர்பான சம்பவங்களால் பாதிக்கப்படுகின்றனர் என தேசிய பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
மதுபானக் கொள்கை முறைகேடு சிபிஐ வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 நாட்கள் சிபிஐ காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜூலை 3ம் தேதிக்குள் புலன் விசாரணை நிறைவு பெறும் என அமலாக்கத் துறை தகவல் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் திகார் சிறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைத்துச் செல்லப்பட்டார்.
புதுச்சேரி கழிவறையில் மயங்கி விழுந்து 3 பேர் பலியான ரெட்டியார்பாளையத்தில் மீண்டும் வாயு கசி மக்கள் பீதி
ரெட்டியார்பாளையம், புதுநகர் பகுதியில் சமீபத்தில் பாதாள சாக்கடை கழிவுநீரில் இருந்து விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், ரெட்டியார்பாளையம், கம்பன் நகர் பகுதியில் வீடுகளில் துர்நாற்றம் வீசுவதாக, நேற்று இரவு 7 மணிக்கு குடியிருப்பு வாசிகள் பொதுப்பணி துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வீரச்செல்வன், உதவி பொறியாளர் வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள், அந்த பகுதிக்கு விரைந்தனர். கம்பன் நகர், 3-வது குறுக்கு தெரு முதல், 7-வது குறுக்கு தெரு வரை உள்ள குடியிருப்பு பகுதிகளில், சோதனையில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடை செல்லும் மேன்ஹோல்களை திறந்து, வாயுக்களை அளவிடும் கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர். அதில் இருந்து மீத்தேன் வாயு வெளிவருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு உறுப்பினர்…
ராஜ் பவன் செல்லவே பெண்களுக்கு பயம்’ – மேற்க வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது அம்மாநில ஆளுநர் அவதூறு வழக்கு
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்க வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி மீது அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்தா போஸ் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மீதும் ஆனந்தா போஸ் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த மே 2 ஆம் தேதி மேற்கு வங்க கவர்னர் மாளிகையான ராஜ் பவனில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆளுநர் ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக கல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் மெல்ல புகைந்து கொண்டிருந்த நிலையில் நேற்று முன் தினம் தலைமைச் செயலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ‘சமீப காலங்களாக எழுந்துள்ள…
கொள்ளிடம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் மறியல்
ஸ்ரீரங்கம் செக்போஸ்ட் பகுதி கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீர் தேக்க தடுப்பணையில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஸ்ரீரங்கம் செக்போஸ்ட் பகுதி கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலத்தின் அடி பகுதியில் மண் அரிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக ஆற்றில் சிறிய அளவிலான தடுப்பணை கட்டப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தடுப்பணையில் நீர் வழிந்து ஓடுகிறது. இதில் குளிப்பதற்காக ஏராளமான மக்கள் இங்கு வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் இந்த தடுப்பணையின் கிழக்கு பகுதியில் தேங்கிய தண்ணீரில் குளித்த சிறுவன் ஒருவன் அதில் மூழ்கி உயிரிழந்தான். அத்துடன் இந்த தடுப்பணையில் கழிவு நீர் கலக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கழிவு நீர் கலப்பதை தடுக்க…