புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் கவிஞர்கள் திருவிழா செம்மொழி நாள்விழா நடந்தது

புதுவை தமிழ்ச் சங்கம் சார்பில் கவிஞர்கள் திருவிழா செம்மொழி நாள் விழா நேற்று இரவு நடந்தது. புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவிற்கு சங்கத்தின் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலாளர் சீனு மோகன்தாஸ் வரவேற்றார். துணைத்தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, பொருளாளர் அருள் செல்வம், துணை செயலாளர் தினகரன் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் கண்ணதாசன் ஒரு மீல் பார்வை என்ற தலைப்பில் காருண்யா நடராசன், கவிஞர் மருதகாசி பாடல்களின் சிறப்புகள் என்ற தலைப்பில் தமிழ் சங்கத் தலைவர் முத்து, மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் என்ற தலைப்பில் சங்க செயலாளர் சீனு மோகன்தாசு ஆகியோர் உரையாற்றினர்.
தனித்தமிழ் இயக்க தலைவர் தமிழமல்லனுக்கு செம்மொழி விருது வழங்கப்பட்டது. செம்மொழி தமிழ் மொழி என்ற தலைப்பில் நடந்த பாவரங்கில் தாகூர் அரசு கலைக்கல்லூரி முன்னாள் தமிழ் துறை தலைவர் அவ்வை நிர்மலா பேசினார். விழாவில் கவிஞர்கள் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment