யமுனை ஆற்றில் ரசாயன நுரையில் நீராடும் பக்தர்கள்

காற்று மாசு பிரச்னையால் திணறி வரும் தலைநகர் டெல்லியின் சூழல் நாளுக்குநாள் கடுமையாகி வருகிறது. இன்றைய தினம் [வெள்ளிக்கிழமை] டெல்லியின் காற்று மாசு அளவு 293 என்ற மோசமான நிலைக்கு வந்துள்ளது. டெல்லியில் பாயும் யமுனை நதியில் பனிப்படலம் போன்று ரசாயனங்கள் நுரைகளாக உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. காலிந்தி கஞ்ச் பகுதியில் உள்ள யமுனை ஆற்றில் காணப்பட்ட இந்த காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

உங்களுக்கு ஓட்டு போட்டேன்.எம்.எல்.ஏ.விடம் தனக்கு பெண்பார்க்க கோரிக்கை வைத்த பெட்ரோல் பங்க் ஊழியர்

உத்தர பிரதேச மாநிலம் சர்க்காரி தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருப்பவர் பிரிஜ்பூஷண் ராஜ்புட். இவர் தனது காரில் பயணம் மேற்கொண்டபோது, மஹோபா என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வாகனத்தை நிறுத்தி எரிபொருள் நிரப்பினார். அப்போது பெட்டோல் நிரப்பும் ஊழியர் எம்.எல்.ஏ.-விடம் தனக்கு பெண் பார்க்க உதவும்படி கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக இருவரிடையே நடைபெற்ற உரையாடல் வைரலாகி வருகிறது. சர்க்காரி என்ற இடத்தில் வசித்து வரும் பெட்ரோல் நிரப்பும் ஊழியரான அகிலேந்திர கரே, எம்.எல்.ஏ.விடம் “தனக்கு பெண் பார்க்க உதவுங்கள்” எனக் கேட்கிறார். அதற்கு எம்.எல்.ஏ. பிரஜ்பூஷண் ராஜ்புட் “உங்களுக்கு என்ன வயது ஆகிறது” எனக் கேட்க, அந்த ஊழியர் “44 வயது ஆகிறது” எனக் கேட்கிறார். “உங்களுக்கு பெண் தேடுவதற்காக என்னை தேர்ந்தெடுத்தது ஏன்?” என எம்.எல்.ஏ. கேட்க, அந்த ஊழியர், “நான் உங்களுக்கு வாக்களித்துள்ளேன்”…

மகாராஷ்டிராவில் பரபரப்பு: தேசியவாத காங்கிரஸ் தலைவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் (66) மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள கேர் நகரில் அவரது எம்எல்ஏ மகன் ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்திற்கு வெளியே சனிக்கிழமை இரவு மூன்று நபர்களால் வழிமறித்து சுட்டுக் கொல்லப்பட்டார். உடனடியாக லீலாவதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சம்பவத்திற்குப் பிறகு, தடயவியல் குழு குற்றம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு மாதிரிகளைச் சேகரித்தது. மேலும் தாக்குதல் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறுவதற்கு அருகிலுள்ள இடங்களின் சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு குற்றவாளி தலைமறைவாக உள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்…

திருப்பதியில் 8 நாட்களில் 30 லட்சம் லட்டுகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியின் போது விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டுகள் தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து ஏழுமலையான் கோவிலில் மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து லட்டு மீதான தோஷம் நீங்கியதாக தேவஸ்தானம் அறிவித்தது. பக்தர்கள் எந்தவித சந்தேகமும் இல்லாமல் வழக்கம் போல் லட்டு பிரசாதம் வாங்கிச் செல்லலாம் என அறிவித்தனர். லட்டு சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தினாலும் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எந்தவித தயக்கமும் இன்றி லட்டுக்களை வாங்கி சென்று வருகின்றனர். இந்நிலையில், திருப்பதி கோயிலில் பிரம்மோற்சவத்தை ஒட்டி, கடந்த 4 ஆம் தேதி முதல் 11ம் தேதி வரை 8 நாட்களில் 30 லட்சம் லட்டுகள் விற்பனையாகி உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இக்காலகட்டத்தில் ரூ.26 கோடி உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளது. இது…

அரியானாவில் அக்.15ம் தேதி பாஜக ஆட்சியமைப்பு

அரியானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகின. முதலில் காங்கிரஸ் 50 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சுமார் ஒரு மணி நேரம் கழித்து பா.ஜ.க முன்னிலை விகித்து இறுதியாக 90 இடங்களில் 48 இடங்களில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. பெரும்பாலான தொகுதியில் இழுபறி நிலவியது. முன்னணி வகித்தவர்கள் பின்தங்குவதும், பின் தங்கியவர்கள் முன்னணி வகிப்பதுமாக இருந்தது. இதனால் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி வாக்குகள் வித்தியாசம் மிகவும் குறைவாக இருந்தது. இறுதியாக, அரியானா மாநிலத்தில் பாஜக 3 ஆவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், அரியானா மாநிலத்தில் பாஜக அரசின் பதவி ஏற்பு விழா அக்டோபர் 15ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய முதல்வராக இருக்கும் நயாப் சிங் சயானியே மீண்டும் முதல்வராவார் என…

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா. கடந்த திங்கட்கிழமை அன்று ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவான ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதுதொடர்பாக, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் எக்ஸ் வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். ரத்தன் டாடா மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் நலனுக்காகத் தொடர்ந்து உழைப்பேன்: மோடி

ஜம்மு-காஷ்மீர் மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபடுவேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இக்கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களில் வென்றுள்ளது. இதன் மூலம், ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. பாஜக 29 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தனித்துப் போட்டியிட்ட மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களில் வென்றுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி ஆகியவை தலா ஒரு தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கின்றன. இந்நிலையில், ஜம்மு – காஷ்மீர் மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து உழைப்பேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ஜம்மு-காஷ்மீர் மக்களின்…

அரியானா தேர்தல் முடிவுகளை ஏற்கமாட்டோம்: காங்கிரஸ் அறிவிப்பு

அரியானாவில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. அங்கு காங்கிரஸ் 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான பவன் கெரா, அரியானா மாநில தேர்தல் பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: தேர்தல் முடிவு எதிர்பார்க்காதது. ஆச்சர்யமாக உள்ளது. கள நிலவரத்திற்கு எதிராக உள்ளது. அரியானா மக்களின் எண்ணங்களுக்கு மாறாகவும், ஆட்சி மாற்றம் என்ற விருப்பத்திற்கு எதிராகவும் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் தேர்தல் முடிவுகளை ஏற்கமுடியாது என்பதை நாங்கள் அறிவிக்கிறோம். ஓட்டு எண்ணிக்கை குறித்தும், மின்னணு ஓட்டு எந்திரம் செயல்பாடு குறித்தும் 3 மாவட்டங்களில் இருந்து தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கட்சி நிர்வாகிகளுடன் பேசி உள்ளோம். புகார்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க உள்ளோம்.…

அரியானா சட்டசபை தேர்தல்:வினேஷ் போகத்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து!

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், மல்யுத்த வீராங்கனையுமான வினேஷ் போகத் தனது வெற்றியைப் பதிவு செய்தார். இதுகுறித்து தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வினேஷ் போகத்தை வாழ்த்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வினேஷ் போகத் ஹரியாணாவில் ஜூலானா சட்டபேரவைத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றுள்ளார். மக்களுக்கான பிரதிநிதியாக மக்கள் சேவையின் இந்த புதிய அத்தியாயத்தில் அவர் சிறப்பான வெற்றிபெற வாழ்த்துகிறேன். பாசிச சக்திகளுக்கு எதிராக அவரது ஆற்றல் தொடரட்டும்” எனப் பதிவிட்டுள்ளார். முன்னதாக, ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாஜகவின் யோகேஷ் குமாரைவிட 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வினேஷ் போகத்…

ஜம்மு காஷ்மீர் தேர்தல் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டடு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பின்னர் தற்போது முதல் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மூன்று கட்டங்களாக நடந்த தேர்தலில் 63.45 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன் வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாகி நடந்து வருகிறது. முன்னதாக யாருக்கும் பெரும்பான்மைக்குத் தேவையான 46 இடங்கள் கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வந்தன. ஆனால் தற்போது அதை பொய்யாகும் விதமாக காங்கிரஸ் – என்.சி.பி கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 48 இடங்களில் காங்கிரஸ்-என்சிபி கூட்டணி முன்னிலையில் உள்ளது. தனித்து போட்டியிட்ட பாஜக 16 இடங்களில் முன்னிலையில் உள்ளது . அதேவேளையில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி [பிடிபி] 2 இடங்களில் மட்டுமே…