விண்வெளியில் ஒரு பிறந்தநாள்

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ந்தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் திட்டமிட்டபடி கடந்த மாதம் 22-ந்தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது. தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்து இவர்கள் பூமி திரும்ப அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆகும் என தெரியந்துள்ளது. இதற்கிடையே, சுனிதான வில்லியம்ஸ் 2வது முறையாக விண்வெளியில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதன்படி, சுனிதா வில்லியம்ஸ் செப்டம்பர் 19 ஆம் தேதி (இன்று) தனது…

ராஜஸ்தானின் புதிதாக போட்ட சாலையில் எலி போட்ட பெரிய பள்ளம்- காரணம் சொன்ன ஊழியர் பணி நீக்கம்

டெல்லி-மும்பைக்கு இடையே 1,386 கிலோமீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நெடுஞ்சாலை போடப்பட்டால் டெல்லி-மும்பைக்கு இடையேயான பயண நேரம் 24 மணி நேரத்திலிருந்து 12-13 மணிநேரமாக குறையும் என்று சொல்லப்படுகிறது. ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் இந்த விரைவுச் சாலை பயணிக்கிறது. இந்த நெடுஞ்சாலை அமைப்பதற்கான 80% பணிகள் முடிந்து விட்டதாகவும் இன்னும் 1 வருடத்தில் அனைத்து பணிகளும் முடிந்து சாலை பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் அமைக்கபட்டுள்ள சாலையின் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டது. இந்த பள்ளங்கள் குறித்து பேசிய ஊழியர் ஒருவர், எலிகள் ஓட்டை போட்டதால் தான் இந்த பள்ளம் உருவானது என்று தெரிவித்தார். ஊழியரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.…

பீகாரில் 21 தலித் வீடுகள் தீ வைத்து எரிப்பு-15 பேர் கைது- தலைவர்கள் கண்டனம்

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள 2 சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக நில தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நிலத்தகராறு தொடர்பாக மஞ்ஹி தோலா எனப்படும் பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் உள்ள 21 குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தில் இத்தகைய அராஜகங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில்தான் நடக்கின்றன. இந்தக் கொடூரச் சம்பவம், பீகாரில் நடக்கும் காட்டு தர்பாருக்கு மற்றுமொரு சான்று என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. தலித்துகளின் குடிசை எரிக்கப்பட்டதற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் எம்எல்ஏ திறந்தார்

ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, வினாடிக்கு 1,600 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், படிப்படியாக 2,000 கன அடியாக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணா நீரை, நெல்லூர் மாவட்டம் வெங்கடகிரி சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணா திறந்து வைத்தார். சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி கொழுப்புஆய்வில் உறுதியானது

திருப்பதி லட்டில் மாட்டிறைச்சியின் கொழுப்பு உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டு இருப்பது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் அங்கு கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாத்தியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பேசிய சந்திரபாபு நாயுடு, “கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் வெட்கப்பட வேண்டும். திருமலையின் ஒவ்வொரு அம்சமும் ஜெகன் அரசால் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. திருப்பதி லட்டுவின் தரம் முற்றிலுமாக கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக சுத்தமான நெய்யை பயன்படுத்த உத்தரவிட்டோம்” என்று தெரிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இதுப தொடர்பாக பேசிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்.பி சுப்பா…

டில்லியில் 2 அடுக்கு வீடு இடிந்து 3 பேர் பலி

தில்லியில் இரண்டு அடுக்கு கொண்ட வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகியுள்ளனர். தில்லியின் கரோல் பாக் பகுதியில் உள்ள இரண்டு அடுக்கு கொண்ட வீட்டின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்தது. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தன் பேரில் அவர்கள் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியானதாகவும், 14 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தில்லி காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்களுக்கு மாதம் ரூ.2000 இலவச மின்சாரம் – அரியானா தேர்தலுக்கான காங்கிரசின் வாக்குறுதிகள்

அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி அரியானா சட்டசபைத் தேர்தல் அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அரியானாவில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடை பெற உள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் பாஜகவும் நாற்காலியை கைப்பற்ற வியூகம் வகுத்து வருகிறது. மேலும் அண்டை மாநிலமான பஞ்சாபில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மியும் தனியாக களமிறங்கியுள்ள நிலையில் கடுமையான போட்டியாக மாறி உள்ளது. இந்தநிலையில் மக்களைக் கவரும் அம்சங்கள் அடங்கிய தனது தேர்தல் வாக்குறுதிகளைக் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. டெல்லியில் உள்ள…

ஒடிசாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர்!

ஒடிசா அரசின் பெண்களை மையமாகக் கொண்ட சுபத்ரா யோஜனா திட்டத்தையும், மாநிலத்தில் ரூ.3,800 கோடி மதிப்பிலான ரயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மாநிலத்தில் 2,871 கோடி மதிப்பிலான தேசிய ரயில்வே திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் ஜனதா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1000 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தா சுபத்ரா திட்டத்தின் கீழ் 2024-25 முதல் 2028-29 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 21-60 வயதுக்குள்பட்ட அனைத்து தகுதியான பயனாளிகளும் ரூ.50 ஆயிரம் வரை பெறுவார்கள். இரண்டு தவணைகளில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் இதுவரை 76 லட்சம் பெண்கள் பதிவு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின் போது, ​​சுபத்ரா திட்டத்தின் கீழ் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட…

இந்தியாவில் முடங்கியது ஜியோ-சிக்கித் திணறிய பயனர்கள்

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் முடங்கியுள்ளன. நாட்டின் சில பகுதிகளில் மட்டும் ஜியோ சேவைகள் இயங்குவதாக கூறப்படும் நிலையில், மும்பையில் ஜியோ சேவைகள் இயங்கவில்லை என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக டவுன் டிடெக்டர் வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஜியோ நெட்வொர்க் கோளாறு காரணமாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் 12.15 மணி முதல் ஜியோ சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 65 சதவீதம் பேருக்கு சிக்னல் கிடைக்கவில்லை என்று பிரச்சினையும், 19 சதவீதம் பேருக்கு மொபைல் இண்டர்நெட் பயன்படுத்த முடியாத சூழலும் உருவாகி இருக்கிறது. மேலும் 16 சதவீதம் பேருக்கு ஜியோஃபைபர் நெட்வொர்க் சரியாக இயங்கவில்லை. நெட்வொர்க் கோளாறு தவிர்த்து மைஜியோ செயலி கூட இயங்கவில்லை என்று சிலர் குற்றம்சாட்டினர். நெட்வொர்க் கோளாறு தொடர்பாக ஜியோ…

இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள் நடிகர் விஜய் வாழ்த்து

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா மக்களுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், “மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். இந்த எக்ஸ் பதிவை தமிழ் மற்றும் மலையாளம் என 2 மொழிகளிலும் விஜய் பதிவிட்டுள்ளார்.