கேரளாவின் கஞ்சிக்கோடு பகுதியில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடந்த இட்லி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சட்னி சாம்பார் எதுவும் இன்று வெறும் இட்லி மட்டும் சாப்பிட வேண்டும். இப்போட்டியில் 60 பேர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற 50 வயது முதியவர் ஒரே நேரத்தில் 3 இட்லிகளை வாயின் உள்ளே திணித்துள்ளார். அப்போது இட்லி தொண்டையில் சிக்கியதால் அவர் மூச்சு திணறி மயங்கி விழுந்தார். பின்னர் சுற்றி இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் ஓணம் வாழ்த்துகள் – தவெக தலைவர் விஜய் கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழாவான ஓணம் பண்டிகை ஒன்று கொண்டாடப்படுகிறது. சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை…
Category: இந்தியா
கொல்கத்தா ஏர்போர்ட்டில் ஒரு டீயின் விலை 340 ரூபாயா? – ப.சிதம்பரம் கேள்வி
கொல்கத்தா விமான நிலையத்தில் விற்கப்படும் தேநீரின் விலை குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவு பேசுபொருளானது. அவரது பதிவில், “கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள The Coffee Bean and Tea Leaf உணவகத்தில் பால் சேர்க்கப்படாத ஒரு சாதாரண தேநீர் ரூ.340க்கு விற்கப்படுகிறது. சில வருடங்களுக்கு பிறகு சென்னை விமான நிலையத்தில் ஒரு சாதாரண தேநீர் 80 ரூபாய்க்கு விற்கப்பட்டதை குறித்து நான் பதிவிட்டுள்ளேன். தமிழ்நாட்டை விட மேற்குவங்கத்தில் பணவீக்கம் அதிகமாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார். ப. சிதம்பரத்தின் பதிவிற்கு பதிலளித்த கொல்கத்தா விமான நிலையம், “நீங்கள் குறிப்பிட்டுள்ள விலை வித்தியாசத்தை குறித்து விசாரித்து விரைவில் உங்களுக்கு தெரிவிக்கிறோம். இதை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளது.
உத்தராகண்ட் சிதம்பரத்தை சேர்ந்த 30 பேர் பாதுகாப்பாக உள்ளனர் – கடலூர் ஆட்சியர் தகவல்
உத்தராகண்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச் சரிவுகளில் சிக்கி நேற்று 4 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள ஆதிகைலாஷ் கோயி லுக்குச் சென்ற போது, ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள சிதம்பரத்தைச் சேர்ந்த 30 யாத்ரீகர்கள் பாதுகாப்பாக உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து 18 ஆண்கள், 12 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் உத்தரகண்ட் மாநிலம், ஆதிகைலாஷ் கோயிலுக்கு கடந்த 1-ம் தேதி சுற்றுலா புறப்பட்டுச் சென்றனர். ஆந்திரத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளம் காரணமாக, இவர்கள் உத்தராகண்ட் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர்கள் ஆதிகைலாஷ் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, வழியில் ஆதிகைலாஷிலிருந்து 18 கி.மீ.தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அங்குள்ள ஒரு ஆசிரமப் பகுதியில் 30 பேரும்…
மகாராஷ்டிரா மாநில ஆளுநருடன் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் சந்திப்பு
இந்த சந்திப்பின்போது இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டை போற்றும் வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் தாங்கிய தியாகச் சுவர்கள் 8 இடங்களில் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது புதுச்சேரி மாநில பாஜக செயலாளர் ஜெயக்குமார் ரெட்டியார் சக்கரா பவுண்டேஷன் நிறுவனர் ராஜசேகரன் மற்றும் மகாராஷ்டிரா மாநில ஆர்எஸ்எஸ் நிர்வாகி . கஹன் மகோத்ரா ஆகியோர் உடன் இருந்தனர்.தொழிலாளர் விரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தொழிலாளர் துறை சமரச அதிகாரி மீது புதுச்சேரி அரசு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தி உள்ளார்.
மத்திய நிதியமைச்சரின் செயல் வெட்கப்பட வேண்டிய ஒன்று: முதல்வர் மு.க.ஸ்டாலின்
அமெரிக்க அரசுமுறைப் பயணம் தொழில்துறையில் புதிய திருப்புமுனையாக அமைந்த நிலையில், சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அன்னபூர்ணா விவகாரம் தொடர்பான கேள்விக்கு, அன்னபூர்ணா உரிமையாளரை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று. ஜிஎஸ்டி குறித்த நியாயமான கோரிக்கையைதான் அவர் முன்வைத்தார். அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.
“ஆணவம் மிக்க பாஜ அரசு”மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்
கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட விவகாரத்தை சுட்டிக்காடி ‘ஆணவம் மிக்க பாஜ அரசு’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான தனிப்பட்ட சந்திப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியான நிலையில் அதனை காங்கிரஸ் கட்சியினர் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், அந்த வீடியோக்களை மேற்கோள் காட்டி அது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “கோவை அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர், நமது மக்கள் பணியாளர்களிடம் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை குறித்து ஒரு கேள்வியை முன்வைக்கிறார். ஆனால் இந்த அரசு அவரது கோரிக்கையை ஆணவத்தோடு அணுகியுள்ளது. அவரை அவமரியாதை செய்துள்ளது. ஆனால், அவரைப் போன்ற சிறு முதலாளியாக இல்லாமல்…
ஆந்திராவில் லாரி பேருந்து மோதல்- 8 பேர் உயிரிழப்பு
ஆந்திரா மாநிலம் சித்தூரில் லாரி மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், மொகிலி காட் அருகே சித்தூர்-பெங்களூரு நெடுஞ்சாலையில், திருப்பதியில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆந்திர மாநில அரசுப் பேருந்து, லாரி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார். நாயுடு சம்பவத்தை பார்வையிட்டார் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ உதவிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மன்னிப்பு கோரிய தொழிலதிபரின் வீடியோ வெளியானதுமன்னிப்பு கேட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை
ஜி.எஸ்.டி. குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்டது பதிவாகி உள்ளது. இந்நிலையில் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில்,தனிப்பட்ட இந்த சந்திப்பு குறித்த வீடியோவை எங்கள் நிர்வாகிகள் வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். தமிழக பாஜக சார்பில் மன்னிப்பு கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சீத்தாராம் யெச்சூரி மறைவு முதல்வர் ரங்கசாமி இரங்கல்
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மா.கம்யூ., தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவிற்கு, இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான மா.கம்யூ., தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்திய அரசியலில் மிகச்சிறந்த ஆளுமையாக திகழ்ந்த சீத்தாராம் யெச்சூரி, தனது வாழ்நாள் முழுதும் பொதுவுடைமை சித்தாந்தங்களை கடைப்பிடித்து, அதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர். ஏழை எளிய மக்களின் நலனுக்காக தொடர்ந்து பார்லி., உள்ளேயும், வெளியேயும் குரல் கொடுத்து வந்த அவரது மறைவு தேசத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், அவர் சார்ந்த இயக்கத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பணபலம் கொண்டு பாஜகவினர் ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கிறார்கள். ஜார்க்கண்ட் முதல்வர்
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய சோரன், பணபலம் கொண்டு ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் செரைகேலா-கர்சவான் மாவட்டத்தில் உங்கள் திட்டம், உங்கள் அரசு, உங்கள் இல்லத்திற்கு என்ற நிகழ்ச்சியில் ரூ. 555.83 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று (செப். 10) அடிக்கல் நாட்டினார். ரூ. 472 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடக்கிவைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, பணபலம் கொண்டு அவர்கள் (பாஜக) ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கிறார்கள். தற்போது அதைக்கொண்டு எங்கள் ஆட்சியை சீர்குலைக்கப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த பாடத்தை கற்பிப்போம். எங்கள் நலத்திட்டங்களை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மூத்தக் குடிமக்கள் ஓய்வூதியம் வாங்குவதை அவர்களால்…
