பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் வென்றது

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் F64 போட்டியில் 70.59 மீ தூரம் என்ற புதிய உலக சாதனையுடன் இந்தியாவின் சுமித் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். சுமித்துக்கு பாராலிம்பிக்கில் தொடர்ந்து 2வது தங்கம். இந்தியா இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்றுள்ளது.

நெட்பிளிக்ஸ்க்கு மத்திய அரசு சம்மன்

ஐசி 814 – The Kandahar Hijack’ வெப் தொடருக்கு எதிர்ப்புக்குரல் எழுந்த நிலையில் நெட்பிளிக்ஸ் உள்ளடக்க தலைவருக்கு (CONTENT HEAD) மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது. இந்த தொடரை அனுபவ் சின்ஹா இயக்கியுள்ளார். விஜய் வர்மா, நஸ்ருதீன் ஷா, அரவிந்த் சாமி, தியா மிர்சா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். 1999 டிசம்பரில், ஐசி 814 என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்கு செல்லும் வழியில், 5 பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. அப்போது பயணிகளின் உயிரை காப்பாற்ற வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு 3 பயங்கரவாதிகளை விடுதலை செய்தது. அப்போது உளவுத்துறை தலைவராக இருந்த அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் இருவரும் இந்த…

பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் நிதேஷ் குமார் தங்கம் வென்றார்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இன்று நடைபெற்றது. அதில், பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தேலை வீழ்த்தி இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்க பதக்கம் வென்றார் பிரிட்டன் வீரரை 21-14, 18-21, 23-21 என்ற செட் கணக்கில் நிதேஷ் குமார் வீழ்த்தினார். பாரா ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்திய அணி 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பிரீத்திக்கு குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பாரிஸ் பாரா ஒலிம்பிக் நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் டி35 போட்டியில் பிரீத்தி பால் 30.01 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். முன்னதாக பிரீத்தி பால் பெண்களுக்கான 100 மீட்டர் டி35 போட்டியில் வெண்கலம் வென்றார். பிரீத்தி பால் தனது இரண்டாவது வெண்கலத்துடன் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை 6 ஆக உயர்த்தினார். இந்த நிலையில் பாரா ஒலிம்பிக்கில் இரண்டாவது வெண்கலப் பதக்கம் வென்ற பிரீத்திக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில், “பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் மகளிர்…

‘இளைஞர்களை ஏமாற்றும் பாஜக.. மோடி அண்ட் கம்பெனி – காங்கிரஸ் தலைவர் கடும் கார்கே தாக்கு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதி என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ்- பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்திக்கின்றன. பாஜகவும், மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவையும் களத்தில் இருக்கின்றன காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ஐ மத்திய பாஜக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு ரத்து செய்த பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது. எனவே இந்த விவகாரம் பிரதான பிரச்சனையாக முன்னிறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களை மோடி ஏமாற்றி வருவதாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஏமாற்றுதல் என்பதே ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் விஷயத்தில் பாஜக…

முதலையோடு சாலையில் சென்ற ஸ்கூட்டர்

குஜராத்தின் கட்ச் அருகே அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குஜராத்தில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த கனமழைக்கு இதுவரை 30க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய சுமார் 1,200 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதைப்போலத் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் சுமார் 20 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். விஸ்வமித்ரி உள்ளிட்ட 24 ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு வருகிறது. அஜ்வா அணை நிரம்பியதை அடுத்து ,அதிலிருந்து உபரி நீர் விஸ்வாமித்ரி ஆற்றில் திறந்து விடப்பட்ட நிலையில் அணையிலிருந்த 440 முதலைகளில் பெரும்பாலானவை அருகில் உள்ள வதோரா கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளது. மாடுகளை…

பீகாரில் ஐக்கிய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி ராஜினாமா செய்தார்

ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக அறிவித்துள்ளார். கே.சி. தியாகி, தனது ராஜினாமா குறித்து கட்சித் தலைவரும் பிகார் முதல்வருமான நிதிஷ் குமாருக்கு எழுதிய கடிதத்தில் “கடந்த சில மாதங்களாக நான் தொலைக்காட்சி விவாதங்களிலிருந்து என்னை விலக்கிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். என்னுடைய மற்ற வேலைகள் காரணமாக, செய்தித் தொடர்பாளர் பதவியில் என்னால் பணிபுரிய முடியவில்லை. தயவுசெய்து இந்தப் பொறுப்பில் இருந்து என்னை விடுவியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, ராஜீவ் ரஞ்சன் பிரசாத்தை புதிய செய்தித் தொடர்பாளராக அறிவித்து உத்தரவிட்டுள்ளது, ஐக்கிய ஜனதா தளம்.

சத்ரபதி சிவாஜி சிலை இடிந்த விவகாரம்: ஹுதாத்மா சௌக்கில் இருந்து இந்தியாவின் நுழைவாயில் வரை பேரணி!

சத்ரபதி சிவாஜி சிலை இடிந்த விவகாரத்தில் ஆளும் கட்சியின் ஊழலைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். மகா விகாஸ் அகாதி கூட்டணிக் கட்சியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் தலைமையில் பேரணி நடைபெற்று வருகிறது. தெற்கு மும்பையில் உள்ள ஹுதாத்மா சௌக்கில் இருந்து இந்தியாவின் நுழைவாயில் வரை மகா விகாஸ் அகாதி கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் பேரணியாகச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். மகாராஷ்டிரத்தின் சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் இருந்த 17 ஆம் நூற்றாண்டின் மராட்டிய சாம்ராஜ்யத்தின் மகாராஜா சத்ரபதி சிவாஜியின் சிலை கடந்த திங்கள்கிழமை பிற்பகல் (ஆக. 26) இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் மகாராஷ்டிரத்தில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி…

லாவோஸ் நாட்டில்கொத்தடிமைகளாக இருந்த இந்தியர்கள் 47 பேர் மீட்பு – அதிர்ச்சியூட்டும் தகவல்

தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து அருகே உள்ள லாவோஸ் நாட்டில் சைபர் குற்றங்களுக்காக அடிமைகளாக பயன்படுத்தப்பட்டு வந்த 47 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதிக சம்பளத்தில் ஐ.டி வேலை இருப்பதாக கூறி லாவோஸ் நாட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்ட இந்தியர்கள் பலர் சைபர் குற்றங்களில் ஈடுபட நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர் என்று சமீப காலமாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. லாவோஸ் மற்றும் கம்போடியாவில் இது போன்ற மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட 635 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது, லாவோஸின் பொஹியோ மாகாணத்தில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஐடி நிறுவன போர்வையில் இயங்கி வந்த டேட்டிங் செயலி மோசடிகளில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர்கள் 47 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளின் பின்னணியில் இதுபோன்று இந்தியர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டேட்டிங் செயலிகளில் பெண்களை போன்று புரொபைல் உருவாக்கி இந்தியாவில் உள்ளவர்களிடம் சாட்டிங் செய்து அவர்களை…

சென்னைக்கு வந்த டிரக்கில் இருந்து ரூ.12 கோடி மதிப்பிலான 1,600 ஐபோன்கள் திருட்டு போலீசார் விசாரணை-

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் டிரக்கிலிருந்து 1,600 ஐபோன்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியாணாவில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த டிரக்கில் இருந்து 1,600 ஐபோன்கள் திருடுபோனதாக புகார் எழுந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.12 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், டிரக்குடன் சென்ற பாதுகாவலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இதுகுறித்து சாகர் மண்டல காவல் ஆய்வாளர் பிரமோத் வர்மா கூறுகையில், “ரூ. 12 கோடி மதிப்பிலான 1,600 ஐபோன்கள் திருடப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. பாதுகாவலருக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. குழுக்கள் அமைக்கப்பட்டு நாங்கள் இதுகுறித்து விசாரித்து வருகிறோம். கன்டெய்னர் ஹரியாணாவில் உள்ள குருகிராமில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. பாதுகாவலர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து ஓட்டுநரை மடக்கியுள்ளார்” என்று அவர் மேலும் தெரிவித்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை…