2023 டிசம்பர் 23ஆம் தேதி கடற்படை தினத்தின்போது சிந்துதுர்க் மாவட்டத்திலுள்ள ராஜ்கோட் பகுதியில் சத்ரபதி சிவாஜி சிலை நிறுவப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இந்த சிலை அமைக்கப்பட்டு 8 மாதங்களே ஆன நிலையில், தற்போது விழுந்து நொறுங்கியுள்ளது. சிலை விழுந்து உடைந்த புகைப்படங்கள் நாடு முழுவதும் பலரால் பகிரப்பட்டது. பாஜக ஆட்சியில் கட்டுமானத் துறை, பொதுப்பணித் துறையில் ஊழல் நிறைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்தது. இந்நிலையில், சிவாஜி சிலை ஆபத்தான நிலையில் இருந்ததாக முன்பே (ஆக. 20) பொறியாளர் ஒருவர் கடற்படையை எச்சரித்துள்ளார். இது தொடர்பாக பொதுப்பணித் துறை பொறியாளர் எழுதியுள்ள கடிதத்தில், கடற்படை தினத்தில் 2023-ல் திறக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை ஆபத்தான நிலையில் உள்ளது. சிற்பி ஜேதீப் ஆப்தே ஜூன் மாதம் சிலையை சரிபார்த்தார். இருந்தபோதும் தற்போது சிலையின் இணைப்பில் உள்ள…
Category: இந்தியா
சுய உதவிக் குழு பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வங்கி கடன்- பிரதமர் மோடி வழங்கினார்
நாடு முழுவதும் கிராமங்களில் வசிக்கும் 2 கோடி பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி அவர்களை தொழில் முனைவோராக உயர்த்தி லட்சாதிபதிகளாக்கும் ‘லட்சாதிபதி சகோதரிகள்’ எனப்படும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக்குழுவில் அங்கம் வகிக்கும் பெண்களுக்கு, முதல் ஆண்டு ரூ.10 ஆயிரம் உதவித் தொகையும், அடுத்த 2 ஆண்டுகளில் அரசு உதவித்தொகையாக ரூ.12,500, வங்கிக் கடனாக ரூ.12,500-ம் வழங்கப்படும். இந்த உதவித் தொகையை பெற, பெண்கள் தொடங்க உள்ள சுய தொழில் குறித்த திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் பயனாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் டிரோன்களை இயக்குவது, பழுது பார்ப்பது, பிளம்பிங், எல்.இ.டி. பல்புகள் தயாரிப்பது போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.…
தலைநகர் டெல்லியில் மாணவன் புத்தகப் பையில் துப்பாக்கி
தலைநகர் டெல்லியில் நஜப்கர் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரத் தொடங்கினர். அப்போது ஒரு மாணவன் தயக்கத்துடன் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தான். இதைக் கண்ட பள்ளி நிர்வாகத்தினர், அந்த மாணவனை அழைத்தனர். அவன் வைத்திருந்த புத்தகப் பையை சோதனையிட்டனர். அந்தப் பையில் புத்தகங்களுக்கு பதிலாக துப்பாக்கி இருப்பதைக் கண்டு மிரண்டனர். உடனே இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் துப்பாக்கியை வாங்கி பரிசோதித்தனர். விளையாட்டுப் பொருள் என நினைத்து அதை கொண்டு வந்ததாக மாணவன் கூறினான். துப்பாக்கியைப் பறிமுதல் செய்த போலீசார் உடனே அதற்கான உரிமத்தை ரத்துசெய்யும் நடவடிக்கையில் இறங்கினர். விசாரணையில், அந்த துப்பாக்கி மாணவனின் தந்தைக்குச் சொந்தமானது என்பதும், அவரது பெயரில் உரிமம் வாங்கப்பட்டுள்ளதும், சில மாதங்களுக்கு முன் மாணவனின்…
தெலுங்கானாவில் தெருநாயை கரண்ட் கம்பத்தில் கட்டிவைத்து அடித்தே கொன்ற நபர்
தெலுங்கானாவில் தெருநாயை ஒருவர் கரண்ட் கம்பத்தில் கட்டிவைத்து அடித்து துன்புறுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் ப்ரீத்தி அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ப்ரீத்தி தனது புகாரில், குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு தெருநாயை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். பின்பு நாய் இறந்த பிறகு, உடலை பக்கத்தில் உள்ள அவரது வயலில் புதைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தின் குகட்பல்லி பரபரப்பான சாலையில் பறந்த ரூபாய் நோட்டுகள்- யூடியூபர் கைது
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பரபரப்பான குகட்பல்லி பகுதியில் ரூபாய் நோட்டுகளை பறக்க விட்டு ரீல்ஸ் எடுத்த யூடியூபரை போலீசார் கைது செய்தனர். யூடியூபர் பறக்கவிட்ட பணத்தை எடுக்க மக்கள் முண்டியடித்து ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அந்த வீடியோவில் யூடியூபர் பவர் ஹர்ஷா என்ற மகாதேவ் சாலையின் நடுவில் நின்று பணத்தை பறக்க விடுகிறார். இதனால் சிதறிய நோட்டுகளை எடுக்க வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனங்களை நிறுத்தி, பணத்தை எடுக்கின்றனர். நடந்து சென்றவர்களும் ரூபாய் நோட்டுகளை முண்டியடித்து சேகரிக்கின்றனர். சாலையில் சிதறிக்கிடந்த ரூபாய் எடுக்க முயன்றவர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வீடியோ வைரலானதை அடுத்து ஹர்ஷா மீது வழக்கு பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
ஏலியன்கள் இருப்பது உண்மை தான்.. இஸ்ரோ
இஸ்ரோ தலைவர் சோம்நாத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வேற்றுகிரக வாசிகள் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, “பிரபஞ்சத்தில் ஏலியன்கள் நிச்சயம் உள்ளன. அவைகள் நமது பூமிக்கு நிச்சயம் வந்து சென்றிருக்க வாய்ப்புகள் அதிகம்.” “100 ஆண்டுகளுக்கு முன் நமது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால், இன்று அந்த நிலை அடியோடு மாறியிருக்கிறது. இத்தகைய மைக்ரோபோன், கேமரா, லைட் மற்றும் தகவல் பரிமாற்ற வசதிகள், தொலைகாட்சி என எதுவும் இல்லாமல் இருந்தது. இவை அனைத்தையும் நாம் 100 ஆண்டுகளில் அடைந்திருக்கிறோம்.” “அந்த வகையில் இதே போன்ற நாகரீகம் இருக்கிறது என நினைத்துக் கொள்ளுங்கள். அவைகள் நம்மை விட 1000 ஆண்டுகள் முன்னேறி இருக்கின்றார்கள் எனில் அவர்கள் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வெறும் 100 ஆண்டுகளில் நாம் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற முடியும்…
புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்- 2025 ஏப்ரலில் அமல்
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) கீழ் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக 50%ஐ உறுதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. 25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர், ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெற முடியும் என தெரிவித்துள்ளது. ஓய்வூதியம் பெறும் ஊழியர் இறந்துவிட்டால், அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60 சதவீதம் அவரது குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். 10 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியருக்கு, குறைந்தபட்ச…
இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் 11 பேரை கைது செய்து அடாவடி தொடரும் அத்துமீறல்கள் மத்தியஅரசின் நடவடிக்கை என்ன?
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நாகப்பட்டினம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடல் படையினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து அரசுடைமையாக்கி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை இலங்கை அழித்து வருகிறது. இதனால் மீனவர்கள் பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இதற்கிடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சாந்தி பழனிசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த நாகரத்தினம், சஞ்சய், பிரகாஷ், சுதந்திர சுந்தர், சந்துரு, ரமேஷ், ஆனந்தவேல், நம்பியார் நகரைச் சேர்ந்த…
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு- உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டரை பலாத்காரம் கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்குக் காரணமானவர்களை விரைவாகத் தண்டிக்கக் கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் இந்த கைது நிகழ்ந்துள்ளது. மருத்துவமனை வளாகத்தில் சிவிக் போலீஸ் எனப்படும் காவல்துறைக்கு உதவிகளைச் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட நபராக வேலை செய்துவந்தவன் இந்த சஞ்சய் ராய். இந்நிலையில், கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்பட 5 மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த சியால்தா நீதிமன்றம், உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
ஆந்திரா வெடி விபத்து- உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு அறிவிப்பு
ஆந்திர மாநிலம் அச்சுதாபுரம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள Escientia என்கிற மருந்து நிறுவனத்தில் அணு உலை வெடித்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இதுகுறித்து சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:- அச்சுதாபுரம் மருந்து நிறுவன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விசாகா மருத்துவமனையில் நேரில் பார்வையிட்டேன். அவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தைரியம் கொடுத்தேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளேன். சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடும், படுகாயமடைந்த குடும்பங்களுக்கு தலா…
