இந்தியா இளைஞர் விளையாட்டு 2023 காலப்பேழை புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

தமிழ்நாட்டில் ரூ.400 கோடி முதலீடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனம், திண்டிவனம், சிப்காட் உணவுப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசிற்கும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது. வீட்டு பராமரிப்பு, தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் பழச்சாறுப் பொருட்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து வரும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனமானது, தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக, தமிழ்நாட்டில், உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி-2023 குறித்து விளக்கும் வகையில்…

பாலியல் வன்கொடுமை தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கிய தேசிய மகளிர் ஆணையம்

நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன், பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு என்.சி.சி. முகாம் பயிற்சி அளித்து வந்துள்ளார். அப்போது சிவராமன் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவராமன் உள்பட 7 பேரை கைது செய்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம், தாமாக முன்வந்து வழக்கு விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் மூன்று வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதைகுழியில் சிக்கி 2 நாட்களாக உயிருக்கு போராடிய வாலிபர்

தெலுங்கானா மாநிலம், மெகபூப் நகர் மாவட்டம், மத்தே வாடா அடர்ந்த வனப்பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அருகே அபாயகரமான புதைக்குழி உள்ளது. புதைகுழிக்குள் சிக்கி யாரும் பலியாக கூடாது என்பதற்காக புதை குழியை சுற்றிலும் இரும்பு கம்பிகள் கொண்டு தடுப்பு அமைத்து இருந்தனர். மேலும் எச்சரிக்கை பலகை அமைத்துள்ளனர். இந்த நிலையில் வாரங்கல் மாவட்டம், அல்லோடுவை சேர்ந்த நரேஷ் ( 30). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்தே வாடா வனப்பகுதிக்கு வந்தார். புதைக்குழியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளை தாண்டி சென்றார். அப்போது நரேஷ் புதைக்குழிக்குள் விழுந்தார். மார்பு வரை அவரது உடல் புதைந்த அதிர்ஷ்டவசமாக முழுவதும் மூழ்கவில்லை. புதைக்குழி உள்ளதால் அந்த பகுதிக்கு யாரும் செல்வது இல்லை. புதை குழிக்குள் சிக்கிய நரேஷ் 2 நாட்களாக உயிருக்கு போராடியபடி கூச்சலிட்டு கொண்டே இருந்தார். ரெயில்வே…

பிரதமர் மோடி செப்டம்பரில் ஓய்வு அறிவிக்கனும்.. இல்லை என்றால் வேறு வழி -சுப்ரமணிய சுவாமி

பாஜக மூத்த தலைவர் முன்னாள் மாநிலங்களவை எம்.பியுமான சுப்ரமணிய சுவாமி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் கட்சி வழிநடத்தப்படுவதை தொடர்ந்து விமர்சித்து வருபவர் ஆவார். சமீபத்தில் பாஜகவில் இருக்கும் நாம் நமது கட்சி டைட்டானிக் கப்பல் போல் மூழ்குவதைப் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு மோடியின் தலைமையே சிறந்ததாகும் என்று கடுமையாக விமர்சனத்தை முனைத்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கட்சி விதிப்படி மோடி, 2025 செப்டம்பர் 17 அன்று தனது 75 வது பிறந்தநாளில் அரசியலில் இருந்து ஓய்வை அறிவிக்கவில்லை என்றால் வேறு வழிகளில் அவர் தனது பிரதமர் நாற்காலியை இழக்கக்கூடும் என்று பதிவிட்டு மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். 75 வயதில் ஓய்வு பெரும் விதி மோடிக்குப் பொருந்தாது என்று பாஜகவினர் கூறி வரும் நிலையில் சுப்ரமணிய…

மும்பை பத்லாபூரில் சிறுமிகள் பலாத்காரம் சம்பவம் கொந்தளித்த மக்கள் மீது தடியட- பதற்றம்

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே பத்லாபூரில் உள்ள ஒரு பள்ளியில் சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து, நகரம் முழுவதும் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளியின் பணியாளர்களில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, பத்லாபூர் ரெயில் நிலையத்தில் உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான வீடியோ வைரலானது. ரெயில்வே வளாகத்தில் இருந்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டம் காரணமாக உள்ளூர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. பத்லாபூர்வழியாக செல்லும் 10க்கும் மேற்பட்ட ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இன்டர்நெட் சேவையும் துண்டிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட…

டெல்லி விடுதியில் நர்சிங் மாணவி மர்ம மரணம்

டெல்லியின் நியூ அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 22 வயது நர்சிங் மாணவி மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அறையின் உள்ளே பூட்டப்பட்டிருப்பதை கண்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது நர்சிங் மாணவி படுக்கையில் உயிரிழந்து கிடந்தார். அப்போது பக்கத்திலிருந்து சீலிங் பேனில் 2 ட்ரிப்ஸ் பாக்கெட் தொங்கவிடப்பட்டு அவளது கையில் ஊசி சொருகி ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு இருந்துள்ளது. இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், சம்பவ இடத்தில் தற்கொலைக் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. தங்கும் விடுதியில் நர்சிங் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேரடி பணிநியமன முறையை ரத்துகடும் எதிர்ப்பால் மத்தியஅரச முடிவு

மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற யு.பி.எஸ்.சி.யில் தேர்ச்சி பெற்றவர்களையும், குரூப் ஏ சேவை அதிகாரிகள் மூலமே நிரப்பப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 2018-ம் ஆண்டு முதல் நேரடி பணிநியமனம் என அரசுப்பணியில் அல்லாத துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு மத்திய அமைச்சகத்தின் முக்கிய பதவிகளில் நியமனம் செய்யும் முறையை பா.ஜ.க. அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கிடையே, நேரடி பணிநியமன முறையில் மத்திய அமைச்சகங்களில் காலியாகவுள்ள 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள்/துணைச் செயலாளர்கள் பதவிகளை நிரப்புவதற்கான விளம்பரத்தை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரதமர்…

ஆந்திராவில் சோகம் கெட்டுப்போன பிரியாணி சாப்பிட்ட மூன்று மாணவர்கள் உயிரிழப்பு

ஆந்திராவில் கெட்டுப்போன பிரியாணி மற்றும் சமோசா சாப்பிட்ட 3 பழங்குடியின மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அனகாபள்ளி மாவட்டம் கொடவரோட்லா மண்டல் பகுதியில் உள்ள கிறிஸ்தவ அமைப்பின் விடுதிகளை சேர்ந்த மாணவர்கள் அங்கு வழங்கப்பட்ட சமோசா மற்றும் பிரியாணியை சாப்பிட்டனர். விடுதிகளில் சமோசா, பிரியாணி சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 30-க்கு் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், இரண்டு மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடந்ததால், மாணவர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது. இந்த வரிசையில், ஆந்திர மாநிலத்திலும்…

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கிய விழாவில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். ரூ.100 முகமதிப்பு கொண்ட அந்த நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. பின்னர் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,’’சொல்ல முடியாத மகிழ்ச்சியின் உள்ளேன். நா நயம் மிக்க தலைவருக்கு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை நாம் கொண்டாடினோம். இன்று இந்தியாவே கருணாநிதியை கொண்டாடுகிறது. கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிட என் முதல் தேர்வாக இருந்தது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்தான். பல அரசியல் மாறுமாடுகள் இருந்தாலும், அனைத்துக் கட்சியினருடனும் இணக்கமாக உள்ள ராஜ்நாத் சிங், கருணாநிதி நாணயத்தை வெளியிட சிறந்த தேர்வு. நாணயத்தை வெளியிட ராஜ்நாத் சிங்கை அனுப்பிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. சுதந்திர…

கலைஞர் நினைவு நாணயம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாணயம் இன்று வெளியிடப்படவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது: முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவரான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும்அரசியல் தலைவராக, சமூகம், கொள்கை மற்றும் அரசியல் குறித்த ஆழமான புரிதலை அடிக்கோடிட்டுக் காட்டி, பல தசாப்தங்களாக மக்களால் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வராக நமது நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்தவர் கலைஞர் கருணாநிதி. பன்முகத் திறமைகளை உடையவராகத் திகழ்ந்த கலைஞர் கருணாநிதி, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை வளர்க்க, அவர் எடுத்த முயற்சிகள் இன்றும் மக்களால் நினைவுகூரப்படுகின்றன. அவரது இலக்கியத் திறனானது அவரது படைப்புகளால்…