வயநாட்டை பார்வையிட்டார் பிரதமர் மோடி

கேரள மாநிலம் வயநாடு, சூரல் மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் கடந்த மாதம் 30-ஆம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் மாயமாகிவிட்டனர். மீட்புப் பணி இன்னும் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி உள்பட பலர் சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று கேரளா சென்றடைந்தார். இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு வருகிறார். நிலச்சரிவால் சேதமடைந்த பகுதிகளை ஹெலிகாப்டரில் இருந்தவாறு பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். ஹெலிகாப்டரில் பிரதமர் மோடியுடன் கேரள ஆளுநர் மற்றும் கேரள…

வயநாட்டில் திடீர் நில அதிர்வு

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி இத்துறவி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அப்பகுதிகளில் இன்னும் மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட குறிச்சியர்மலை, மூரிக்காப்பு, கொம்பு அம்பு குத்தி மலை போன்ற பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன, இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நில அதிர்வு உணரப்பட்ட பகுதிகளுக்கு விரைந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். இந்த நில அதிர்வால் மக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். முன்னதாக இன்று காலை கேரளாவின் மூணாறு அருகே உள்ள கேப் ரோடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாகப் பெரிய பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து…

பிகார் மாநித்தில் 2 மாதத்தில் 14வது பாலம் விழுந்தது

பிகார் மாநிலத்தில் வியாழக்கிழமை மற்றொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இடிந்து விழுந்த 14 ஆவது பாலம் இது என்று கூறப்படுகிறது. பிகார் மாநிலம், கதிஹார் மாவட்டம் பாக்கியா சுகாய் கிராம பஞ்சாயத்து மற்றும் அதன் சுற்றுப் பகுதி மக்கள், தொகுதியின் தலைமையகமான பராரி நகருக்கு அருகில் உள்ள பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள கதிஹார் வழியாக சென்று வருவதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதையடுத்து கங்கை நதியின் மீது மேம்பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி, ஊரகப் பணிகள் துறை மூலம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கங்கை நதியின் மீது பாலம் கட்டப்பட்டு வந்தது. பாலத்தின் கட்டுமானப் பணிகள் 2023 இல் முடிவடைய இருந்தது, ஆனால் கட்டுமானப் பணிகள் முடிவடையாத நிலையில் அதன் காலக்கெடு ஜூலை 2024 ஆக மாற்றப்பட்டது. இந்த நிலையில்,…

வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றவேண்டும்- பிரதமர் மோடி

சுதந்திர தினத்தையொட்டி அனைவரின் வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ஹர் கர் திரங்கா(அனைவரின் வீடுகளிலும் தேசியக்கொடி) என்பது ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் (சுதந்திரத்தின் ஆற்றல் அமுதம்) மூலம் இந்திய மக்கள் நமது தேசியக் கொடியை அவர்களின் வீடுகளுக்கு கொண்டு வரவும், இந்தியாவின் 78-வது ஆண்டு சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் ஊக்குவிக்கும் ஒரு பிரசாரமாகும். தன்னுடைய எக்ஸ் தளத்தின் தன்னுடைய முகப்பு பக்கத்தில் தனது படத்தை நீக்கிவிட்டு தேசியக் கொடியை வைத்த பிரதமர் மோடி இதுகுறித்து எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “இந்தாண்டு சுதந்திரதினம் நெருங்கி வருவதால், மீண்டும் ஹர் கர் திரங்கா மறக்கமுடியாத மக்களுக்கான இயக்கமாக மாற்றுவோம். நான் எனது சுயவிவரப் படத்தை மாற்றுகிறேன். இதன்மூலம் நமது மூவர்ணக் கொடியைக் கொண்டாடுவதில் என்னுடன் இணையுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஆம், உங்கள்…

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார்

நீண்ட காலத்துக்கு முன்பு முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான சொத்துக்களை இறைவனுக்கு தானமாக வழங்கினர். இத்தகைய சொத்துக்கள் ‘வக்பு சொத்துக்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த சொத்துக்களை பராமரிக்க 1954-ம் ஆண்டு வக்பு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி மாநில அரசுகளால் மாநில வக்பு வாரியங்கள் நிறுவப்பட்டன. இந்த அமைப்புகள் வக்பு சொத்துக்களை நிர்வகித்து வருகின்றன. நாடு முழுவதும் வக்பு வாரியத்துக்கு 9.40 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. அதில் 8 லட்சத்து 72 ஆயி ரத்து 292 சொத்துகள் இருக்கின்றன. அந்த சொத்துக்களை வக்பு வாரியம் பராமரித்து வருகிறது. இவற்றின் மதிப்பு பல லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.வக்பு வாரியத்தின் கீழ் மாவட்ட வக்பு குழுக்கள் செயல்படுகின்றன. குறிப்பாக வக்பு சொத்துக்கள் சுமார் 200 பேரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த…

கர்நாடகவில் கர்ப்பிணி மீது மோதிய டிரக்; சாலையிலேயே பிரசவம்.. தாயம் குழந்தையும் பலி

பெங்களூரு அருகே எடேஹள்ளி தேசிய நெடுஞ்சாலையில், எட்டுமாத கர்ப்பிணி மீது டிரக் மோதியதில், சம்பவ இடத்திலேயே குழந்தை பிறந்து, தாயும் சேயும் சில நொடிகளில் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிஞ்சனா என்ற 30 வயது கர்ப்பிணி, தனது கணவர் மஞ்சுநாத் உடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது டிரக் ஒன்று மோதியது. இதில், சாலையில் விழுந்த சிஞ்சனா மீது டிரக் ஏறி இறங்கியது. படுகாயமடைந்த சிஞ்சனாவுக்கு சாலையிலேயே குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சிறிது நிமிடத்திலேயே குழந்தையும், தாயும் பலியாகினர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பொறியாளரான மஞ்சுநாத், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். ஒரு நிமிடத்தில் கண் முன்னே தனது மனைவியும், பிறந்த குழந்தையும் துடிதுடித்து பலியானதைப் பார்த்த மஞ்சுநாத், செய்வதறியாது கதறி அழுதார். இருவரும் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது…

பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலம் பதக்கம் வென்றது இந்தியா அணி

பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் அரை இறுதியில் தோல்வி அடைந்த இந்தியாவும், ஸ்பெயினும் இன்று வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் மோதியது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி அரைஇறுதியில் ஜெர்மனியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. கடந்த முறை வெண்கலம் வென்ற இந்தியா அந்த பதக்கத்தை தக்க வைக்குமா என்று எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கியது. இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தாலும் முதல் கால் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனையடுத்து நடந்த 2-வது கால் பாதியின் 18-வது நிமிடத்தில் ஸ்பெயின் தனது முதல் கோலை பதிவு செய்தது. 2-வது கால் பாதியின் இறுதி வரை போராடிய இந்திய அணி 30-வது நிமிடத்தில் ஒரு கோலை பதிவு செய்தது. இதனால் 1-1 என்ற கணக்கில் 2-வது கால் பாதி சமன் நிலையில்…

லஞ்சம் வாங்கிய அமலாக்கத் துறை உதவி இயக்குநர் கைது

மும்பையில் லஞ்சம் வாங்கிய அமலாக்கத் துறை உதவி இயக்குநரை சிறப்புப் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர். மும்பையில் கடந்த ஆக. 3,4 தேதிகளில் ஒரு நகைக்கடையில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர். ஆனால், சோதனையின் முடிவில், அமலாக்கத்துறையின் உதவி இயக்குநர் சந்தீப் சிங் யாதவ், நகைக்கடையின் உரிமையாளரிடம் ரூ. 25 லட்சம் லஞ்சமாகக் கேட்டுள்ளார். ஆனால், கடையின் உரிமையாளர் லஞ்சம் தர மறுத்ததால், உரிமையாளரின் மகனைக் கைது செய்வதாக, சந்தீப் மிரட்டியுள்ளார்.இதனைத் தொடர்ந்து, கடையின் உரிமையாளர் லஞ்சமாக ரூ. 20 லட்சம் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, நகைக்கடையின் உரிமையாளரிடமிருந்து சந்தீப் லஞ்சம் வாங்கியபோது, சந்தீப்பை சிறப்புப் புலனாய்வுத் துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.

‘இதற்குமேல் போராட என்னிடம் வலிமை இல்லை’

மகளிருக்கான மல்யுத்தத்தில் 53 கிலோ எடைப் பிரிவிலேயே வினேஷ் போகத் போட்டியிட விரும்பியதாகவும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் கட்டாயத்தால்தான் 50 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாரீஸ் ஒலிம்பிக்கில் செவ்வாய்க்கிழமை களம்கண்ட முதல் சுற்றிலேயே நடப்பு சாம்பியனான ஜப்பானின் யுய் சுசாகியை தோற்கடித்த வினேஷ் போகத், அடுத்தடுத்து காலிறுதி, அரையிறுதிகளில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இறுதிச் சுற்றில் ஏற்கெனவே இரண்டு முறை வினேஷ் போகத்தால் தோற்கடிக்கப்பட்ட சாரா ஹில்டெப்ராண்ட்டை அவர் எதிர்கொள்ள இருந்த நிலையில், புதன்கிழமை காலை செய்யப்பட்ட பரிசோதனையில் கூடுதலாக 100 கிராம் இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். ரியோ ஒலிம்பிக்கில் 48 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட வினேஷ் போகத், எடையை நிர்வகிக்க கடினமாக இருந்த காரணத்தால் 53 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டு வந்தார். இந்த…

தொடரும் அட்டூழியம்- தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு தவிக்கும் தமிழர்கள்மத்தியஅரசு நடவடிக்கை என்ன?

தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்கள், 4 நாட்டுப் படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. புத்தாளம் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.