பாராளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்த தள்ளு முள்ளுவில் பா.ஜ.க. எம்.பி.க்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து பாராளுமன்ற சாலை போலீஸ் நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், ராகுல் காந்தி வேண்டும் என்றே தள்ளிவிட்டதால் பா.ஜ.க. எம்.பி.க்கள் காயம் அடைய நேரிட்டது என்று குறிப்பிடப்பட்டது. இதையடுத்து பாராளுமன்ற சாலை போலீசார் 5 பிரிவுகளில் ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரிவு 117 (படுகாயம் ஏற்படுத்துதல்), 125 (பிறர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல்), 131 (குற்றவியல் பலவந்தப்டுத்துதல்), 351 (வன்முறை), பிரிவு3 (5) (உள்நோக்கத்துடன் செயல்படுத்துதல்) ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற சாலை போலீசாரிடம் பா.ஜ.க. தலைவர்கள் பிரிவு 109 (கொலை முயற்சி) சட்டத்தின்படி ராகுல் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தினார்கள். ஆனால் அதை போலீசார் ஏற்கவில்லை. என்றாலும் ராகுல் மீது…
Category: இந்தியா
இண்டியா கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்
அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக டெல்லி விஜய் சவுக் பகுதியில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். மேலும், நேற்று பாஜக எம்பிக்கள் நடந்து கொண்ட விதம் குறித்து அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். சமாஜ்வாதி கட்சி எம்பி ஜெயா பச்சன் பேசும்போது, “நேற்றைய நிகழ்வு என்பது வேண்டும் என்றே மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளே செல்ல முடியதாவாறு அவர்கள் படிகளில் நின்று கொண்டு மறித்தார்கள். நானே அதைப் பார்த்தேன். அவர்கள் எவ்வாறு தடுக்க முற்படலாம்?” என கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேருக்கு நேர் நின்று கோஷங்களை எழுப்பியது குறித்துப் பேசிய பாஜக எம்.பி சி.பி.ஜோஷி, “இது ஜனநாயகத்தை அவமதிக்கும்…
மாநிலங்களவையும் அமளியால் முடக்கம்.. முடிவுக்கு வந்தது குளிர்கால கூட்டத்தொடர்
பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அரசமைப்பு சட்டம் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, “எதிர்க்கட்சிக ளுக்கு அம்பேத்கர் பெ யரை தொடர்ந்து பல முறை முழக்கம் இடுவது வாடிக்கையாக இருக்கி றது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்ச ரித்தால் அவர்களுக்கு சொர்க்கத் தில் இடம் கிடைத்து இருக்கும்” என்று கூறினார். இதற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அம்பேத்கரை அமித்ஷா அவமரியாதை செய்து விட்டதாக கூறி குற்றம் சாட்டினார்கள். இதற்காக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கரை காங்கிரஸ் கட்சிதான் இழிவுப்படுத்தி இருப்பதாக ஆவண ஆதா ரங்களுடன் பா.ஜ.க. தலை வர்கள் தகவல்களை வெளியிட்டனர். இதையடுத்து அம்பேத்கர் தொடர்பான பேச்சு மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. நேற்று பாராளுமன்ற வளாகத்தில்…
காற்று மாசு காரணமாக தொடர்ந்து அபாய நிலையில் நீடிக்கும் தலைநகர் டெல்லி
டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து அபாயகர நிலையிலேயே தொடர்கிறது. இன்று காலை நிலவரப்படி டெல்லி காற்று மாசின் அளவு 433 ஆக பதிவானது. இந்த தகவலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தியாவில் காற்றின் தரக் குறியீடு பூஜ்ஜியத்தில் இருந்து 50 வரை இருந்தால் “நல்லது” என்றும் 51 முதல் 100 வரை இருந்தால் “திருப்திகரமானது” என்றும் 101 முதல் 200 வரை இருந்தால் “மிதமானது” என்றும் 201 முதல் 300 வரை இருந்தால் “மோசமானது” என்றும் 301 முதல் 400 வரை இருந்தால் “மிகவும் மோசமானது” என்றும் 400 முதல் 500 வரை இருந்தால் “அபாயகரமானது” என்றும் வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இன்று டெல்லியில் காற்றின் தரம் அபாயகர அளவில் இருந்தது. அங்கு இன்றைய வெப்பநிலை 7.5 டிகிரி செல்ஷியஸ் ஆக…
ராகுல், கார்கேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் நோட்டீஸ்: நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு
அமித் ஷாவின் உரையில் 12 விநாடிகள் பொய் தகவல்களை சேர்த்து பரப்பியதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமித் ஷாவின் உரையின் 12 விநாடிகள் மூலம் பொய்யை பரப்பியதால், மக்களவையில் ராகுல் காந்திக்கு எதிராகவும், மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எதிராகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவித்தார். அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் நடத்திய…
அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா காலமானார்
தேசிய லோக் தள தலைவரும் அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 89.குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரியானா மாநிலத்தின் முதல்வராக 1989-ம் ஆண்டு முதல் நான்கு முறை பதவி வகித்து ஓம் பிரகாஷ் சௌதாலா சாதனை படைத்துள்ளார். அவர் கடைசியாக மாநில முதல்வராக 1999-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஓம் பிரகாஷ் சௌதாலா மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மத்தியபிரதேச மாநிலத்தில் அரசு தேர்வில் ஒருவர் மட்டும் 100-க்கு 101.66 மதிப்பெண்- வெடித்தது போராட்டம்
மத்தியபிரதேச மாநிலத்தில் வனக்காவலர், களக்காவலர் மற்றும் சிறைக்காவலர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தேர்வு மாநில அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை ஏராளமானோர் எழுதினர். கடந்த 13-ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தேர்வு எழுதிய ஒருவருக்கு 100-க்கு 101.66 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருந்தது. அவர் தரவரிசை பட்டியலில் முதலிடமும் பெற்று இருந்தார். இதனால் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி அந்த தேர்வு எழுதிய பலர் கோபால் பிரஜாபத் என்பவரது தலைமையில் இந்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், தேர்வு முடிவு அறிவிப்புக்கு பிறகு, தேர்வுக்குழு விதிகளின்படி ஆட்சேர்ப்புத் தேர்வில் ‘சாதாரணமயமாக்கல் செயல்முறை’ ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக…
ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்டில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த 20 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெற்றது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததை அடுத்து, கவர்னர் சந்தோஷ் காங்வாரை சந்தித்த ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கவர்னரின் ஒப்புதலை அடுத்து, ஜார்க்கண்டில் நான்காவது முறையாக ஆட்சி அமைக்கும் சோரன் இன்று முதல்வராக பதவி ஏற்றுள்ளார். ஆளுநர் சந்தோஷ் குமார் கங்குவார் பதவி பிரமாணமும் ரகசகய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், காங்கிரஸ் தலைவர்…
எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், அதானி விவகாரத்தை மத்திய அரசுக்கு எதிராக கையில் எடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்தனர். மக்களவை நேற்று ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மக்களவைத் தொடங்கியது. அதானி விவகாரம், வக்ஃபு வாரிய சட்ட திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல், மணிப்பூர் வன்முறை, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, தமிழக மீனவர்கள் பிரச்னை உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தன. இதனால், மக்களவைத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மக்களவை செயல்பாடுகள் பிற்பகல் 12 மணி வரை…
இந்திய வரலாற்றைப் புரட்டிபோட்ட புரட்சியாளர் – சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்திய வரலாற்றைப் புரட்டிபோட்ட புரட்சியாளர் – சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் புகழ் ஓங்குக! உயர்கல்வியிலும் – வேலைவாய்ப்புகளிலும் – தலைமைப் பொறுப்புகளிலும் நமது திறமையால் சாதனை படைத்து அவருக்கு நன்றி செலுத்துவோம்! சாதிக்கப் பிறந்தவர்களுக்குச் சாதி தடையில்லை என்பதை நிறுவுவோம்! என்று தெரிவித்துள்ளார்.