பொறுப்பற்ற தன்மையால் விலையாக தங்கள் உயிர்களை மக்கள் கொடுத்து வருகின்றனர்: ராகுல்காந்தி பதிவு

பொறுப்பற்ற தன்மையால் மக்கள் தங்களது உயிர்களை விலையாகக் கொடுத்து வருகின்றனர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தில்லியில் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீரில் சிக்கி 2 மாணவிகள் உள்பட 3 பேர் பலியாகினர். சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது. தில்லியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மைய கட்டடத்தின் கீழ்தளத்தில் வெள்ள நீரில் சிக்கி மாணவர்கள் பலியானது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. சில நாள்களுக்கு முன், மழையின் போது மின்சாரம் தாக்கி மாணவர் ஒருவர் பலியானார். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதுகாப்பற்ற கட்டுமானம், மோசமான திட்டமிடல் மற்றும் நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றால் சாமானிய குடிமக்கள் தன் உயிர்களை விலையாகக் கொடுத்து…

டெல்லி ஐ.ஏ.எஸ் கோச்சிங் சென்டரில் புகுந்த மழை நீரில் முழுகி 1 மாணவி உட்பட 3 பேர் பலி

தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நீர்த் தேக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியின் மேற்குப் பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் செயல்பட்டு வரும் ரவு [RAU] ஸ்டடி சர்க்கிள் என்ற ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்திற்குள் புகுந்த தண்ணீரில் சிக்கி அங்கு படித்துவந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர்பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு 7 மணியளவில் சுமார் 30 மாணவர்கள் மையத்தில் படித்துக் கொண்டிருந்தபோது தரைத்தளத்திற்குள் மழை நீர் புகுந்துள்ளது. தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் தத்தளித்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக 2 மாணவிகளும் ஒரு மாணவரும் உயிரிழந்தனர். இதனால் கொந்தளிப்பில் நேற்று நாளிரவு முதல் பயிற்சி மைய கட்டிடத்திற்கு முன்னாள் கூடி மாணவர்கள் மாநகராட்சியைக் கண்டித்துப் போராட்டம் நடத்தி வருவதால்…

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் 2024 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தனது பதக்கப் பட்டியலைத் திறந்துள்ளது. கடந்தமுறை நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை மனு பாக்கர் இழந்திருந்த நிலையில், இம்முறை பதக்கம் வென்றுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கின் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பெண்கள் பிரிவில் (பிஸ்டல்) 221.7 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். தென்கொரியாவின் ஓ யே ஜின் என்பவர் 243.2 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். மற்றொரு கொரிய வீராங்கனை கீ யேஜின் 241.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். மனு பாக்கர் பதக்கம் வென்றதன் மூலம் துப்பாக்கி சுடுதலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தலை, கழுத்து புற்றுநோய் அதிகரிப்பு- ஆய்வில் தகவல்

இந்தியாவில் தலை, கழுத்து புற்றுநோய் அதிகரித்து வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தலை மற்றும் கழுத்து புற்றுநோய் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியைச் சேர்ந்த கேன்சர் முக்த் பாரத் அறக்கட்டளை நடத்திய ஆய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 1,869 புற்றுநோயாளிகளிடம் நடத்திய ஆய்வில் 26 சதவீதம் பேருக்கு தலை மற்றும் கழுத்து புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த கேன்சர் முக்த் பாரத் அறக்கட்டளை, மார்ச் 1 முதல் ஜூன் 30 வரை தனது ஹெல்ப்லைன் எண்ணில் பெறப்பட்ட அழைப்புகளின் தரவுகளைத் தொகுத்து இந்த ஆய்வை நடத்தியது. இது தொடர்பாக மூத்த புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஆஷிஷ் குப்தா கூறியதாவது: இந்தியாவில் அதிக புகையிலை நுகர்வு மற்றும் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று காரணமாக தலை மற்றும் கழுத்து புற்றுநோய், குறிப்பாக இளைஞர்களிடையே அதிகரித்து…

மத்திய அரசு நிதி ரூ.30 கோடியை புறக்கணித்த இமாச்சல் அரசு

மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டிவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருவது தெரிந்ததே. இந்நிலையில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதற்கான ஒருங்கிணைந்த தொழிற்பூங்கா [Medical Device Park] அமைப்பதற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை திருப்பி அனுப்பியுள்ள ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசு தங்கள் மாநிலத்தின் செலவிலேயே அதை அமைத்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. இதுதொடர்பாக இமாச்சலப் பிரதேச அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநில அரசானது தொழிற்பூங்கா அமைக்க இதுவரை ரூ.74.95 கோடி செலவிட்டுள்ளது. எனவே மாநிலத்தின் விருப்பத்தின்படி, மத்திய அரசிடம் இருந்து வந்துள்ள ரூ.30 கோடியைத் திருப்பி அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிற்பூங்கா அமைப்பதற்கான மொத்த செலவு ரூ.350 கோடியாகும் இந்த அறிவிப்பு குறித்து பேசிய அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு பேசுகையில், 265 ஏக்கர் பரப்பளவில் இந்த…

காதியின் விற்பனை 400 சதவீதம் உயர்வு- பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அவரது 112-வது நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. இதில் மோடி பேசியதாவது:- காதி கிராமோத் யோக்கின் வர்த்தகம் முதல் முறையாக ரூ.1.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. காதியின் விற்பனை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? காதியின் விற்பனை 400 சதவீதம் உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் காதி மற்றும் கைத்தறி விற்பனை அதிக அளவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. பெரும்பாலும் பெண்கள் இந்த தொழிலில் இருப்பதால் அவர்கள் அதிகமாக பயன் அடைகிறார்கள். நீங்கள் வெவ்வேறு வகையான ஆடைகளை வைத்திருக்கலாம். இதுவரை நீங்கள் காதி ஆடைகளை வாங்கவில்லை என்றால் அவற்றை வாங்க தொடங்குங்கள். பாரீஸ் ஒலிம்பிக் உலக கவனத்தை ஈர்த்து வருகிறது. உலக அரங்கில்…

10 மாநில முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தனர்

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, பீகார், டெல்லி, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய 10 மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை என நிதி ஆயோக் சிஇஓ சுப்ரமணியம் தெரிவித்தார். அதேவேளையில் மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச மாநில துணைநிலை ஆளுநர்கள் என 28 பேர் பங்கேற்றனர் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டத்தில் அவர்கள் பங்கேற்கவில்லை என்றால் அவர்களுக்குத்தான் அது இழப்பு என தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, உணவு இடைவேளைக்கு முன்னதாக பேச வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோள் ஏற்கப்பட்டு பேச அனுமதி வழங்கப்பட்டது. அவரது நேரம் முடிந்தபோது பாதுகாப்புத்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் மைக்கை தட்டினார் அப்போது மம்தா…

தி.மு.க. சார்பில் இன்று மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். சென்னை கிண்டியில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் போராட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். கடலூர் மாவட்டத்தில் தலைமை தபால் நிலையம் அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். சேலம் மாவட்டம் கோட்டை மைதானம் பகுதியில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் ஒருங்கிணைந்த திமுக சார்பில் நடைபெறும்…

பீகாரில் பயங்கரம் ரெயில்வே போலீஸ் தாக்கியதில் குடல் சரிந்து விழுந்த இளைஞர்

பீகாரில் ரயில்வே போலீஸ் சரமாரியாக அடித்ததில் பயணியின் குடலே வெளியில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் வியாழக்கிழமை பீகாரில் உள்ள சீதாமாரி மாவட்டத்தில் உள்ள பூப்ரி ரெயில் நிலையத்தில் மும்பைக்கு செல்லும் கர்மபூமி விரைவு ரெயிலில் உறவினரை ஏற்றி விடுதற்காக முகமது பர்கான் என்ற 25 வயது இளைஞர் வந்துள்ளார். நடைமேடையில் ரெயில் வந்து நின்றதும் முன்பதிவில்லாத பெட்டிகளில் ஏறி சீட் பிடிப்பதற்கு அங்கு கூடிருந்த பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்த அங்கு வந்த ரெயில்வே போலீஸ் [GRP] கான்ஸ்டபிள்கள் இருவர் பயணிகள் மீது தடியடி நடத்தத்தொடங்கினர். அப்போது அங்கு நின்றிருந்த முகமது பர்கானை கான்ஸ்டபிள்கள் இருவரும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பார்கானின் வயிற்றில் பலமுறை அவர்கள் அடித்த நிலையில், அவரது குடல் வெளியே வந்தது. சில நாட்களுக்கு முன்பே பர்கானுக்கு…

ஆளுநரை விமர்சிக்கக்கூடாது- உத்தரவை எதிர்த்து மம்தா மனு- . உடனே ரத்து செய்த நீதிமன்றம்

மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் மீது ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். ஆனால், அந்த குற்றச்சாட்டை கவர்னர் மறுத்தார். இதனையடுத்து, ‘ஆளுநர் மாளிகை செல்வதற்குப் பெண்கள் பயப்படுகின்றனர்’ என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியிருந்தார். மேலும், அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற 2 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பதிவு பிரமாணம் செய்து வைக்காமல் கவர்னர் இழுத்தடித்து வந்தார். அதனால் அந்த 2 எம்.எல்.ஏ.க்களும் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரை விமர்சித்தனர். இந்நிலையில், மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூலை 17 ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.…