மும்பையில் கொலை செய்யப்பட்டவரின் உடலில் எதிரிகள் பெயர்: கொலையாளியை பிடித்த போலீசார்

மும்பையில் நீண்ட காலமாக குற்றப்பின்னணி கொண்ட ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலில் 22 பேரின் பெயரை பச்சைக்குத்தியுள்ளார். போலீசார் 3 பேரை கைது செய்துள்ள நிலையில், அவருக்கு திங்கு விளைவித்த எதிரிகளின் 22 பேரை பச்சை குத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆர்டிஐ ஆர்வலர் எனக் கூறப்படும் மும்பையைச் சேர்ந்த குரு வாக்மார் (வயது 38) மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர் புதன்கிழமை அதிகாலை மத்திய மும்பையில் உள்ள வோர்லி என்ற இடத்தில் உள்ள ஸ்பாவில் (Spa) கொலை செய்யப்பட்டார். அவரது உடலை பரிசோதனை செய்தபோது, அவரது தொடையில் 22 பேர் பெயரை பச்சைக்குத்தியது தெரியவந்துள்ளது. இந்த 22 நபர்களால் துன்புறுத்தப்பட்டிருந்ததால் தன்னுடைய உடலில் பச்சைக்குத்தி வைத்துள்ளதாக கருதப்படுகிறது. இந்த கொலை தொடர்பாக போலீசார் ஸ்பா உரிமையாளர் சந்தோஷ் ஷெரேகர் உள்ளிட்ட…

செருப்புத் தைக்கும் தொழிலாளியைச் சந்தித்துப் பேசிய ராகுல்!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூரில் சமூகத்தின் பிரச்னைகளைப் புரிந்துகொள்வதற்காக செருப்புத் தைக்கும் தொழிலாளியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்துப் பேசினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதான அவதூறு கருத்துகள் தொடர்பான வழக்கில் சுல்தான்பூரில் உள்ள எம்பி-எம்எல்ஏ நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுல்தான்பூரில் உள்ள செருப்புக் கடையில் ராகுல் காந்தி தனது காலணியைத் தைக்கும்போது தலித் தொழிலாளியிடம் சுமார் 30 நிமிடங்கள் கலந்துரையாடினார். அதன் விடியோ பதிவு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கடின உழைப்பாளிகளின் உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம், அவர்களுக்காக நாடாளுமன்றம் வரை குரல் எழுப்புவோம்.அவர்களின் நிகழ்காலம் பாதுகாப்பாகவும், எதிர்காலத்தை வளமாகவும் மாற்றுவதே எங்களின் நோக்கமாகும் என்று…

இளம் கிரிக்கெட் வீரர் கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை

23 வயது இளம் கிரிக்கெட் வீரர் கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட சாமுவேல் ராஜ், விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கிரிக்கெட் பயிற்சியை முடித்து வீட்டுக்குத் திரும்பியபோது, இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து யாரோ ஒருவர் குதிப்பதை பார்த்ததும், அங்குள்ளவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கும் காவல் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சாமுவேல் ராஜ் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சாமுவேல் ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் கத்திப்பாரா மேம்பாலத்தில் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கார்கில் வெற்றி தினம்: போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்தனர். இந்த போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 25-ம் ஆண்டு ஆகும். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. கார்கில் போர் வெற்றியின் 25-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுக்க களைகட்டியுள்ளன. அரசியல் தலைவர்கள், ராணுவம், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பினரும் போரில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர். இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கார்கில் போர் 25வது நினைவு நாளையொட்டி இன்று காலை பிரதமர் மோடி கார்கில் சென்றார். கார்கில் போர்…

25வது கார்கில் வெற்றி தினம்: உயிர் தியாகம் செய்தவர்களுக்கு குடியரசு தலைவர் புகழஞ்சலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்தனர். இந்த போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 25-ம் ஆண்டு ஆகும். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. கார்கில் போர் வெற்றியின் 25-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுக்க களைகட்டியுள்ளன. அரசியல் தலைவர்கள், ராணுவம், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பினரும் போரில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர். இது தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில், கார்கில் விஜய் திவாஸ், நமது ஆயுதப் படைகளின் அசாத்தியமான துணிச்சலுக்கும்,…

ஜார்கண்ட் பள்ளியில் இருந்து நீட் வினாத்தாள் திருடப்பட்டது- சிபிஐ தகவல்

நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபக்கில் உள்ள ஒயாசிஸ் பள்ளியின் முதல்வர், துணை முதல்வர் மற்றும் மையக் கண்காணிப்பாளர் ஆகியோரின் உடந்தையுடன் நீட் தேர்வு வினாத்தாள் திருடப்பட்டது. அவர்கள், அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி டிரங்கைத் திறந்து வினாத்தாளை திருடினர். திருடப்பட்ட வினாத்தாள், அதே நாளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பணம் செலுத்திய குறிப்பிட்ட சில மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரை மூலம் 4லட்சத்து 25 ஆயிரம்பேர் பனிலிங்க தரிசனம் செய்தனர்

காஷ்மீரில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அதில், ஆண்டுதோறும் பனிக்கட்டிகளால் ஆன சிவலிங்கம் இயற்கையாக உருவாகும். அதைக்காண லட்சக்கணக்கானோர் புனித யாத்திரையாக செல்வார்கள். இந்த ஆண்டு இதுவரை 4 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். கடந்த ஆண்டு 4 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் தரிசித்தது குறிப்பிடத்தக்கது.

நான் அமைதியாக இருக்க மாட்டேன்- இஸ்ரேலிடம் கமலா ஹாரிஸ்

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் காமலா ஹாரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேசுவார்த்தையில் அமைதிக்கான உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளும்படி நேதன்யாகுவை பைடன் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள கமலா ஹாரிஸ் நேதன்யாகுவிடம் பேசுகையில், கடத்த 9 மாதங்களாக காசாவில் நடந்தவை கொடூரமானது. இறந்த குழந்தைகளின் புகைப்படங்களையும், பசியில் துடித்தபடி தொடர்ந்து இடம்பெயரும் மக்களின் அவல நிலையையும் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியவில்லை. அவர்களின் துன்பங்களைப் பொருட்படுத்தாமல் எங்களை நாங்களே மரத்துப்போகச் செய்ய முடியாது. இவற்றைக் கண்டு நான் அமைதியாக இருக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.மேலும் நேதன்யாகுவிடம் பேசியது குறித்து பின்னர் மனம் திறந்த கமலா ஹாரிஸ், காசா மக்கள் படும் துயரம்…

நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடகா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேசிய அளவில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என டெல்லி, ஹிமாச்சல், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து, தமிழ்நாட்டைத் தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி, நேற்று மேற்குவங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை மருத்துவக்…

இந்தியா போங்க ஆனா மணிப்பூர் போகாதீங்க.. தன்நாட்டு அமெரிக்கா அரசு எச்சரிக்கை

அமெரிக்க அரசு அந்நாட்டு மக்களிடம் இந்தியா பயணம் செய்பவர்கள் மணிப்பூர், ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தி இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியான ஜம்மு மற்றும் காஷ்மீரில் நக்சலைட்டுகள் புழக்கம் அதிகளவில் இருப்பதால் அமெரிக்க அரசு இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளது. “குற்றம் மற்றும் தீவிரவாதம் அதிகரித்து காணப்படுவதால் இந்தியா செல்வோர் அதிக கவனமுடன் செயல்பட வேண்டும். சில பகுதிகளில் அதிகளவு அபாயம் கொண்டுள்ளது.” “இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பயணம் செய்யாதீர்கள். அங்கு தீவிரவாதம் மற்றும் பொது அமைதி கேள்விக்குறியாகி இருக்கிறது. மத்திய மற்றும் கிழக்கு இந்திய பகுதியான மணிப்பூரிலும் வன்முறை மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.” “இந்தியாவில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களில் கற்பழிப்பு முதன்மையாக உருவெடுத்து வருகிறது. வன்முறை…