ஜார்க்கண்ட் தேர்தல்: மொத்த வாக்குப்பதிவு நிலவரம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் இறுதிக்கட்டமாக மீதமுள்ள 38 தொகுதிகளில் இன்று(நவ. 20) வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 12 மாவட்டங்களிலுள்ள 14,218 வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. முன்னதாக, முதல்கட்டமாக வாக்குப்பதிவுகடந்த 13-ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கண்ட இடங்களில் 67.59 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முதல்கட்ட தகவலின்படி தெரிய வந்துள்ளது. வரும் சனிக்கிழமை(நவ. 23) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்றைய நாளில், ஜார்க்கண்ட்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ‘ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ஆர்ஜேடி’ இணைந்துள்ள இந்தியா கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா…

உலக நாடுகளில் பாதுகாப்பாக தங்க இருப்பை சத்தமில்லாமல் இந்தியாவுக்கு மாற்றும் ஆர்பிஐ!

போர்ச் சூழல் போன்ற பல்வேறு காரணிகளால் உலக நாடுகளில் பாதுகாப்பாக வைத்திருக்கும் தங்க கையிருப்பை இந்தியாவுக்கு ஆர்பிஐ மாற்றி வருகிறது. உலகிலேயே அதிக தங்க கையிருப்பை கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவுக்கு ஒரு முன்னணி இடம் இருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. அண்மையில், தீபாவளியையொட்டி வரும் தாந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு, லண்டனில் உள்ள இங்கிலாந்து வங்கியில் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 102 டன் தங்கத்தை சப்தமில்லாமல், இந்தியாவின் பாதுகாப்பான இடத்துக்கு இடம் மாற்றியிருக்கிறது ஆர்பிஐ. இதற்கு முன்பு, இங்கிலாந்து வங்கியிலிருந்து 100 டன் தங்கத்தை உள்நாட்டுப் பெட்டகங்களுக்கு இந்தியா மாற்றியிருந்தது. வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு தங்கத்தைக் கொண்டு வருவது மிகவும் ரகசியமாக, சிறப்பு விமானம் மூலம், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நமது உள்நாட்டில் மிகச் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருப்பதன் உறுதித் தன்மையையும் இது வெளிப்படுத்துகிறது.…

113 வயதிலும் ஜனநாயக கடமையாற்றிய மூதாட்டி..!

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், 113 வயதான காஞ்சன்பென் பாட்ஷா என்ற மூதாட்டி தனது வாக்குரிமையைப் பயன்படுத்தி ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இன்று(நவ. 20) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இங்குள்ள 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில், மும்பையில் 113 வயது மூதாட்டி ஒருவர் தனது வயது மற்றும் உடல் பலவீனத்தையும் கருத்தில் கொள்ளாமல், வாக்களித்தேயாக வேண்டும் என்ற நோக்கத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்து வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினைச் செலுத்தியுள்ளார். 113 மூதாட்டி ஒருவர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது அங்கிருந்தோரை ஆச்சரியப்படவைத்தது. வாக்களித்தப் பின்னர் மூதாட்டி அசைக்கமுடியாத நம்பிக்கையையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தினார். மும்பையில் வசித்துவரும் காஞ்சன்பென் ஒவ்வொரு மாநில சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலிலும் வாக்களித்து வருகிறார். இந்த செயலை…

உ.பி. இடைத்தேர்தல்.. இஸ்லாமியர்களை வாக்களிக்க விடாமல் தடுத்த 7 போலீசார் சஸ்பெண்ட் தேர்தல்துறை அதிரடி

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் 9 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலையில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் வாக்குப் பதிவில், இஸ்லாமிய வாக்காளர்களை போலீசார் வாக்களிக்க விட மறுப்பதாக உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு புகார் அளித்தார். முஸ்லிம் பெண்களிடம் புர்காவை கழற்ற கூறியும் முஸ்லிம் ஆண்களிடம் தேவையின்றி ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை போலீசார் கேட்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வந்தது. இதனையடுத்து, முஸ்லிம் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்த 7 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திராவில் பொதுமக்கள், போலீசாரை தாக்கிய நிர்வாண பெண் அகோரி

ஆந்திர மாநிலம், மங்களகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டோ நகருக்கு 25 வயது மதிக்க தக்க பெண் அகோரி ஒருவர் நிர்வாண நிலையில் காரில் வந்தார். அங்குள்ள வாட்டர் சர்வீஸ் மையத்திற்கு வந்த அகோரி தனது காரை சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்தார். அகோரி ஒருவர் நிர்வாண நிலையில் வந்துள்ள தகவல் அப்பகுதியில் பரவியது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் குவிந்தனர். அப்போது சிலர் தங்களது செல்போனில் பெண் அகோரியை வீடியோ எடுத்தனர். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த பெண் அகோரி தன்னிடம் இருந்த திரிசூலத்தால் பொதுமக்களை விரட்டி விரட்டி தாக்கினார். தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக ஓடிய பலர் தேசிய நெடுஞ்சாலை நடுவில் உள்ள தடுப்பு மற்றும் செடிகள் மீது விழுந்து எழுந்து காயமடைந்து தப்பிச் சென்றனர். மங்களகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பெண் அகோரியை…

கும்பகர்ணன் 6 மாதம் தூங்கமாட்டார்.. ரகசியமாக இயந்திரங்களை உருவாக்குவார்- உ.பி. கவர்னர் பேச்சு

ராமாயண புராணத்தில் ராவணனின் தம்பியாக வரும் கும்பகர்ணன் ஒரு தொழில்நுட்ப வல்லுநர் என்றும் ரகசியமாக அவர் ஆய்வகத்தில் இயந்திரங்களை உருவாக்கினார் என்று உத்தரப்பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள குவாஜா முயினுத்தீன் சிஷ்டி பாஷா விஸ்வவித்யாலயா கல்லூரியின் 9 ஆவது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆனந்திபென் படேல் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கும்பகர்ணன் 6 மாதங்கள் தூங்குவார் என்று மக்கள் நம்புகின்றனர். ஆனால் அது உண்மையில்லை. கும்பகர்ணன் ஒரு தொழில்நுட்ப நிபுணராக இருந்தார். அதனால் தான் கும்பகர்ணன் பொதுவெளியில் 6 மாதங்களுக்கு வரக்கூடாது என்று ராவணன் தடை விதித்தார். கும்பகர்ணன் தனது ஆய்வகத்தில் ஆறு மாதங்கள் ரகசியமாக இயந்திரங்களை தயாரித்தார். அதனால் தான் அந்த தொழில்நுட்பம் மற்ற நாடுகளுக்கு செல்லக் வில்லை. சீதையை ராவணன் விமானத்தில் தான்…

பாராளுமன்றம் 25-ஆம் தேதி கூடுகிறது- மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தகவல்

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 25-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சிகள் கூட்டத்துக்கு பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளார். வருகிற 24-ந்தேதி காலை 11 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்து உள்ளார். இந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவும், தற்போது பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வில் உள்ள வக்பு வாரிய மசோதாவும் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 மசோதாக்களையும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வரும் வேளையில். மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இதனால் பல்வேறு விஷயங்கள் குறித்து பாராளுமன்றத்தில் அனல்…

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் மத்திய நிதிக்குழுவினர் ஆய்வு

டெல்லியில் இருந்து மத்திய அரசின் 16-வது நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில், செயலர் ரிவத்விக் பாண்டே, உறுப்பினர்கள் அன்னி ஜார்ஜ், அஜய் நாராயன்ஜா, மனோஜ் பாண்டே, அன்னி ஜார்ஜ் மேத்யு, சவும்யா கண்டி கோஷ், உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் 4 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளனர். அடுத்த 5 ஆண்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் வரி வருவாய் திட்டம் எப்படி இருக்க வேண்டும், எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும், என்பது தொடர்பான பல்வேறு தகவல்கள் மற்றும் அதற்கான தரவுகளை ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று இந்த நிதிக்குழு சேகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் இயங்கிவரும் 15 கோடி லிட்டர் கொள்ளளவு, கடல்நீரை குடிநீராக்கும் ஆலையை குழுவினர் ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகள், உற்பத்தி, பாது பயன்பாடு, வருவாய்…

உடுப்பியில் நக்சலைட்டின் முக்கிய தலைவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் ஹெப்ரி போலீஸ் எல்லைக்குட்பட்ட கபினாலே வனப்பகுதியில் நேற்று இரவு 5 நக்சலைட்டுகள் கொண்ட குழுவினர் உணவு பொருட்களை வாங்க வந்தனர். இதுப்பற்றி நக்சல் எதிர்ப்புப்படை போலீசாருக்கு தகவல் தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் நக்சலைட் தலைவர் விக்ரம் கவுடா என்பவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மற்ற 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- கேரளாவில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்ததையடுத்து நக்சலைட்டுகள் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை நோக்கி வந்துள்ளனர். இதில் விக்ரம் கவுடா என்கவுன்டர் செய்யப்பட்டார். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்றனர். இந்த துப்பாக்கி சண்டை கபினாலே பஸ் நிலையத்தில் இருந்து 7 கி.மீ, தூரத்தில் உள்ள…

போர்களால் உலகளாவிய தெற்கு நாடுகள் உணவு, எரிபொருள், உரம் நெருக்கடியால் பாதிப்பு- ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் தலைமை பதவியை பிரேசில் வகித்து வருகிறது. பிரேசில் நாட்டில் ஜி20 மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. சமூக உள்ளடக்கம் மற்றும் பட்டினி, வறுமைக்கு எதிரான போராட்டம் என்ற தலைப்பில் நடப்பு ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- போர்களால் உலகின் தெற்கு நாடுகள் (Global South) உணவு, எரிபொருள், உரம் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, உலகின் தெற்கு நாடுகளின் சவால்கள் மற்றும் முன்னுரிமைகளை மனதில் கொள்ளும்போதுதான் நமது விவாதங்கள் வெற்றிபெற முடியும். டெல்லி உச்சிமாநாட்டின் போது ஆப்பிரிக்க யூனியனுக்கு G20-ன் நிரந்தர பிரதிநிதி அந்தஸ்தை வழங்கியதன் மூலம் உலகின் தெற்குப் பகுதியின் குரலை வலுப்படுத்தியதுபோல், உலகளாவிய நிர்வாக அமைப்புகளை சீர்திருத்துவோம். இவ்வாறு பிரதம் மோடி கூறினார்.…