உயர்கல்வித்துறையை சீர்குலைக்க ஆளுநர் முயற்சி- அமைச்சர் கோவி. செழியன் குற்றசாட்டு

உயர்கல்வித்துறையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதை, சீர்குலைக்க ஆளுநர் தொடர்ந்து குறுக்கீடு செய்கிறார் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கோவி. செழியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- உயர்கல்வித் துறையில் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்யக்கூடிய தேர்வுக் குழுவில் 3 நபர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், நாங்கள் முறையாக, சரியாக அரசின் விதிப்படியும், பல்கலைக்கழகத்தின் விதிப்படியும் தான் தேர்வுக் குழுவை நியமித்தோம். மாறாக, தன்னுடைய எல்லையின் அளவு என்ன ? எதில் தலையிட வேண்டும் ? எதில் தலையிடக்கூடாது என்ற நிலை தெரியாத ஆளுநர் அதை கண்டித்திருப்பதும், யுஜிசி தேர்வுக் செய்யக்கூடிய உறுப்பினரை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், 4வது உறுப்பினரை எங்களின் தலையில் சுமக்க வைப்பதும் ஆளுநர் பொறுப்புக்கு அழகல்ல. இதுவரையில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த அளவிற்கு மாநில உரிமைகளை கட்டிக்காப்பதில்…

அம்பேத்கரை அவமதித்தஉள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக–வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமாமேதை, டாக்டர் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று காலை 11.30 மணியளவில் கடற்கரை சாலை அம்பேத்கர் மணிமண்டபம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் தலைமை வகித்தார். அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை கையிள் ஏந்தி அவரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாநில துணை அமைப்பாளர்கள் ஏ.கே. குமார், அ. தைரியநாதன்,…

ஜனவரி 6- ஆம் தேதி தமிழக சட்டசபை- சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு அறிவிப்பு

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த ஆண்டின் குளிர்கால கூட்டம் என்பதால் குறுகிய நாட்களே கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் மதுரை மேலூர் அருகே டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமத்தை உடனே ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தவிர 19 சட்ட மசோதாக்களும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு சட்டமன்ற கூட்டத் தொடர் முடித்து வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2025-ம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 6-ந்தேதி கூட்டப்பட உள்ளது. இது குறித்து சட்டசபை சபாநாயகர் அப்பாவு இன்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விதி 174 (1) ன் கீழ் தமிழக சட்டமன்றத்தை வருகிற ஜனவரி மாதம் 6-ந்தேதி கூட்டி…

நெல்லை நீதிமன்ற வாசலில் வாலிபர் கொலை6 பேர் அதிரடியாக கைது- கார் பறிமுதல்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கீழநத்தம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி என்ற பல்லு மாயாண்டி (வயது 28). இவரது தந்தை மணி பால் வியாபாரம் மற்றும் பந்தல் கட்டும் தொழில் செய்து வந்தார். மாயாண்டி தனது தந்தைக்கு உதவி செய்து வந்ததோடு, கூலி வேலைக்கும் சென்று வந்தார். மாயாண்டி மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதில் ஒரு வழக்கில் ஆஜராவதற்காக மாயாண்டி இன்று காலை நெல்லை மாவட்ட நீதிமன்றத்துக்கு தனது தம்பி மாரிச்செல்வத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். இவர்கள் கே.டி.சி. நகர்-திருச்செந்தூர் ரோட்டில் கோர்ட்டு முன்பு வந்தனர். அப்போது காரில் ஒரு மர்மகும்பல் வந்தது. அதில் இருந்து இறங்கிய ஒருவர் மாயாண்டியை நோக்கி அரிவாளால் வெட்டுவதற்காக ஓடி வந்தார். இதைப்பார்த்த மாயாண்டியும், மாரிச்செல்வமும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஆளுக்கொரு திசையில்…

மாநிலங்களவையும் அமளியால் முடக்கம்.. முடிவுக்கு வந்தது குளிர்கால கூட்டத்தொடர்

பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அரசமைப்பு சட்டம் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, “எதிர்க்கட்சிக ளுக்கு அம்பேத்கர் பெ யரை தொடர்ந்து பல முறை முழக்கம் இடுவது வாடிக்கையாக இருக்கி றது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்ச ரித்தால் அவர்களுக்கு சொர்க்கத் தில் இடம் கிடைத்து இருக்கும்” என்று கூறினார். இதற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அம்பேத்கரை அமித்ஷா அவமரியாதை செய்து விட்டதாக கூறி குற்றம் சாட்டினார்கள். இதற்காக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கரை காங்கிரஸ் கட்சிதான் இழிவுப்படுத்தி இருப்பதாக ஆவண ஆதா ரங்களுடன் பா.ஜ.க. தலை வர்கள் தகவல்களை வெளியிட்டனர். இதையடுத்து அம்பேத்கர் தொடர்பான பேச்சு மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. நேற்று பாராளுமன்ற வளாகத்தில்…

காற்று மாசு காரணமாக தொடர்ந்து அபாய நிலையில் நீடிக்கும் தலைநகர் டெல்லி

டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து அபாயகர நிலையிலேயே தொடர்கிறது. இன்று காலை நிலவரப்படி டெல்லி காற்று மாசின் அளவு 433 ஆக பதிவானது. இந்த தகவலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தியாவில் காற்றின் தரக் குறியீடு பூஜ்ஜியத்தில் இருந்து 50 வரை இருந்தால் “நல்லது” என்றும் 51 முதல் 100 வரை இருந்தால் “திருப்திகரமானது” என்றும் 101 முதல் 200 வரை இருந்தால் “மிதமானது” என்றும் 201 முதல் 300 வரை இருந்தால் “மோசமானது” என்றும் 301 முதல் 400 வரை இருந்தால் “மிகவும் மோசமானது” என்றும் 400 முதல் 500 வரை இருந்தால் “அபாயகரமானது” என்றும் வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இன்று டெல்லியில் காற்றின் தரம் அபாயகர அளவில் இருந்தது. அங்கு இன்றைய வெப்பநிலை 7.5 டிகிரி செல்ஷியஸ் ஆக…

ராகுல், கார்கேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் நோட்டீஸ்: நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு

அமித் ஷாவின் உரையில் 12 விநாடிகள் பொய் தகவல்களை சேர்த்து பரப்பியதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமித் ஷாவின் உரையின் 12 விநாடிகள் மூலம் பொய்யை பரப்பியதால், மக்களவையில் ராகுல் காந்திக்கு எதிராகவும், மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எதிராகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவித்தார். அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் நடத்திய…

அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா காலமானார்

தேசிய லோக் தள தலைவரும் அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 89.குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரியானா மாநிலத்தின் முதல்வராக 1989-ம் ஆண்டு முதல் நான்கு முறை பதவி வகித்து ஓம் பிரகாஷ் சௌதாலா சாதனை படைத்துள்ளார். அவர் கடைசியாக மாநில முதல்வராக 1999-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஓம் பிரகாஷ் சௌதாலா மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் ரூ.100 கோடியில் சாலைகள், புதிய கட்டடங்கள் திட்டங்கள்

ஈரோடு மாவட்டத்தில் ரூ.100 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும் புதிய கட்டடங்கள் கட்டிக்கொடுக்கப்படும். கூட்டுக் குடிநீர் திட்டம் என பல புதிய திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் நிறைவுபெற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளை பட்டியலிட்டார். அவர் பேசுகையில், ஈரோடு, இந்த மண் தான் தமிழ்நாட்டின் புதிய வரலாற்றுக்கான தொடக்கம்! காரணம், தந்தை பெரியாரைக் கொடுத்த மண் இந்த மண்! தந்தை பெரியார் அவர்கள் நமக்கு பேரறிஞர் அண்ணாவையும், முத்தமிழறிஞர் கலைஞரையும் கொடுத்திருக்கிறார். அவர்கள் இல்லாமல், திராவிட இயக்கம் இல்லை! இன்றைய வளர்ச்சி நிறைந்த அறிவார்ந்த தமிழ்நாடும் இல்லை! நாமும் இல்லை! சில நாட்களுக்கு முன்புதான்,…

மத்தியபிரதேச மாநிலத்தில் அரசு தேர்வில் ஒருவர் மட்டும் 100-க்கு 101.66 மதிப்பெண்- வெடித்தது போராட்டம்

மத்தியபிரதேச மாநிலத்தில் வனக்காவலர், களக்காவலர் மற்றும் சிறைக்காவலர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தேர்வு மாநில அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை ஏராளமானோர் எழுதினர். கடந்த 13-ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தேர்வு எழுதிய ஒருவருக்கு 100-க்கு 101.66 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருந்தது. அவர் தரவரிசை பட்டியலில் முதலிடமும் பெற்று இருந்தார். இதனால் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி அந்த தேர்வு எழுதிய பலர் கோபால் பிரஜாபத் என்பவரது தலைமையில் இந்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், தேர்வு முடிவு அறிவிப்புக்கு பிறகு, தேர்வுக்குழு விதிகளின்படி ஆட்சேர்ப்புத் தேர்வில் ‘சாதாரணமயமாக்கல் செயல்முறை’ ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக…