துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடியில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அரசின் திட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டத்திதில் கலந்து கொள்ள சென்றார். அப்போது டூவிபுரத்தில் உள்ள வருவாய் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று ‘திடீர்’ ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் சுப்பையா மற்றும் அதிகாரிகளிடம், பொதுமக்கள் அளிக்கும் பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காலதாமதம் செய்யக்கூடாது என்று கூறினார்.தொடர்ந்து அரசின் திட்டங்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் பொதுமக்கள் அளிக்கும் பட்டா விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதனை முடித்து வெளியே வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சாலையில் திரண்டிருந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.…
Category: முதன்மை செய்திகள்
புதிய கட்சிகள் விசிகவுக்கு போட்டியாக வர முடியாது: தொல்.திருமாவளவன்
புதிய கட்சிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியாக வர முடியாது என்று, அந்தக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். திண்டிவனத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் அவா் பேசியதாவது: கட்சியின் கொடியை ஏற்றுவது என்பதே நமக்கு யுத்தமாக உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கொடிக் கம்பத்தை ஊன்றுவதில் நமக்கு பெரும் போராட்டங்கள் இருந்திருக்கிறது. வழக்குகளை சந்தித்தோம், சிறைக்கும் சென்றோம். கடலூா் மாவட்டத்தில் எண்ணற்ற நிகழ்வுகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. கொடி யுத்தம் என்ற பெயரிலேயே ஒரு புத்தகமே தொகுத்துவிடலாம். அதிகார ஆசை காட்டினால் நாம் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விடுவோம் என சிலா் கருதுகிறாா்கள். யாா் புதிய கட்சிகளைத் தொடங்கினாலும், அவா்கள் புகழ் பெற்றவா்களாகவே இருந்தாலும் விசிகவுக்கு போட்டியாக வந்துவிட முடியாது. திரும்பத் திரும்பக் கேள்வி கேட்பதாலேயே, திமுக கூட்டணியில் உள்ளேன் என்பதைக் கூற வேண்டிய…
விருதுநகர் புதிய ஆட்சியர் அலுவலகம்: முதல்வர் திறந்துவைத்தார்!
விருதுநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று(நவ. 10) முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். விருதுநகரில் மாவட்ட ஆட்சியரக புதிய கட்டடம் திறப்பு விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், கள ஆய்வுகள் மேற்கொள்ளவும் இரு நாள்கள் பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை பிற்பகல் விருதுநகா் வந்தடைந்தார். நேற்று முதல் நிகழ்வாக, விருதுநகரை அடுத்த கன்னிசேரிபுதூரில் உள்ள தனியாா் பட்டாசு ஆலையில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டாா். பட்டாசு ஆலையின் உரிமம், மூலப்பொருள்கள் வைப்பறை, பட்டாசுகளைப் பாதுகாக்கும் அறை உள்ளிட்டவற்றை அவா் பாா்வையிட்டார்.இந்த நிலையில், இன்று விருதுநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்துவைத்த முதல்வர், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைக்கப்பட்டுள்ள காட்சிக் கூடங்களை பார்வையிட்டார். மேலும், வெம்பக்கோட்டை அகழாய்வு தொல்பொருள்கள் அரங்கம் உள்ளிட்டவற்றை முதல்வர் ஆய்வு…
டெல்லி கணேஷ் மறைவு – நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார். டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் நேரிலும், சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி,” என குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி வரலாற்று சாதனை
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தொடரை கைப்பற்றும் முக்கியமான 3 ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 31.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சீன் அபாட் 30 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி மற்றும் நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் 141 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 26.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து…
விவசாய கடன் தள்ளுபடி, மகாராஷ்டிரா தேர்தல் அறிக்கையை அமித்ஷா வெளியிட்டார்
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக வருகிற 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது.அங்கு ஆளும் பா.ஜ.க. கூட்டணிக்கும், எதிர்கட்சியான காங்கிரஸ்-உத்தவ் தாக்கரே கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.இந்த நிலையில் மகாராஷ்டிரா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. இன்று வெளியிட்டது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இதை வெளியிட்டார். மத்திய மந்திரி பியூஸ் கோயல், மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி பட்னாவிஸ் ஆகியோர் உடன் இருந்தனர். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். லட்கி பஹின் யோஜனா வரம்பு ரூ.2,100 ஆக உயர்த்தப்படும். விருத் பென்சன் யோஜனா உச்ச வரம்பு ரூ.1500-ல் இருந்து ரூ.2,100 ஆக உயர்த்தப்படும். 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். விலையை சீராக வைத்திருக்க சந்தையில் தலையிடப்படும். அரசு அமைந்த 100 நாட்களுக்குள்…
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
நடிகர் டெல்லி கணேஷ் (80) உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக இன்று(நவ. 10) காலமானார். நடிகர் டெல்லி கணேஷின் உடல் ராமபுரத்தில் உள்ள அவரது வீட்டில்பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அவரது இறுதிச் சடங்குகள் நாளை காலை 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும் என்று குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.நாடகத்துறையில் இருந்து பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகராக அறிமுகமானவர் நடிகர் டெல்லி கணேஷ். தொடர்ந்து பசி, அபூர்வ சகோதரர்கள், தாயா தாரமா, மனிதன், நாயகன், சிந்து பைரவி, அவ்வை சண்முகி, ஆஹா, லண்டன், மாசிலாமணி உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு இந்திய விமானப்படையில் 10 ஆண்டுகள் பணியாற்றினார். நகைச்சுவை, வில்லன், குணசித்திரம் என பன்முக பாத்திரங்களில் நடித்தவர்…
டாஸ்மாக்கில் பில்லிங் சிஸ்டம் அரசு அதிரடி திட்டம்
டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குடிப்பிரியர்களிடம் இருந்து தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதனால், கூடுதல் கட்டணத்தை தடுக்கும் வகையில் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, டாஸ்மாக்கில் வாங்கும் மதுவுக்கு பில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, காஞ்சிபுரத்தில் மாவட்ட மேலாளர் தலைமையில் நாளை மற்றும் நாளை மறுநாள் தாலுகா வாரியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் 2 வாரங்களில், வாங்கும் மது பாட்டில்களுக்கு பில் கொடுப்பது நடைமுறைக்கு வருகிறது. மேலும், டாஸ்மாக் கடைகளை கணினி மூலம் ஒருங்கிணைக்க தனி ‘சாப்ட்வேர்’ உருவாக்கி டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. இதன்மூலம், கடையில் எவ்வளவு மது இருப்பு மற்றும் விற்பனை குறித்த விவரங்களை கணினி மூலம் அறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் பட்டியல்இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். பட்டியல் இனமக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக்கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. அவ்வகையில் 2024 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழுவிவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்திலிருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகம். சென்னை-05 அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மகனின் திருமண நிகழ்ச்சியில் -திமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் உயிரிழப்பு
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று உயிரிழந்துள்ளார். திருப்பதியில் தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. ஆனால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே செல்வராஜின் உயிர் பிரிந்துள்ளது. நாளை காலை அவரது உடல் கோவை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அதிமுகவில் இருந்தபோது எம்.எல்.ஏ.வாக இருந்த செல்வராஜ் பின்னர் திமுகவில் இணைந்தார். இதைதொடர்ந்து, கோவை செல்வராஜ் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
