திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: அறங்காவலர் குழு தலைவர் அறிவிப்பு

திருப்பதி, திருமலை கோயிலில் வேலை செய்பவர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என்று அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பி.ஆர்.நாயுடு தெரிவித்தார். ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலின் (டிடிடி) அறங்காவலர் குழு தலைவராக பி.ஆர்.நாயுடு அண்மையில் நியமனம் செய்யப்பட்டார். மேலும், டிடிடி குழு உறுப்பினர்களாக 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அறங்காவலர் குழு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பி.ஆர். நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டதற்காக முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர் லோகேஷ் உள்ளிட்டவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அறங்காவலர் குழு தலைவராக பணியாற்றுவதை பாக்கியமாக கருதுகிறேன். கடந்த ஆட்சி காலத்தை போல் அல்லாமல் வெளிப்படைத்தன்மையாகவும் உண்மையாகவும் பாடுபடுவேன். திருமலை தேவஸ்தானத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். தேவஸ்தானத்தில்…

தேர்தல் வாக்குறுதி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே பதிலடி

கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை தொடங்கி வைத்தது. சக்தி திட்டம் எனும் இத்திட்டத்தின் மூலம் கர்நாடகா முழுவதும் பெண்கள் அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம். இந்நிலையில், அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், “பஸ் டிக்கெட் எடுக்க எங்களுக்கு பொருளாதார வசதி உள்ளது. இலவச டிக்கெட் வேண்டாம்’ என சில மாணவிகள் இ – மெயில் மற்றும் ‘எக்ஸ்’ வலைத்தளம் வழியாக கருத்து தெரிவித்துள்ளனர். எனவே சக்தி திட்டத்தை மறு பரிசீலனை செய்வது குறித்து, முதல்வருடன் ஆலோசிக்கப்படும்” என்று தெரிவித்தார். இதனையடுத்து காங்கிரஸ் மாநில பிரிவுகள், சரியான பட்ஜெட்டையும், நிதிச் சிக்கல்களுக்கு வழிவகுக்காத தேர்தல் வாக்குறுதிகளையும் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். கார்கேவின் இக்கருத்து தொடர்பாக பிரதமர் மோடி தனது…

புதுச்சேரி விடுதலை நாள் விழாமுதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியேற்றினார்.

புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை திடலில் நடைபெற்ற புதுச்சேரியின் விடுதலை நாள் விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். புதுச்சேரியின் விடுதலை நாள் விழா ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் தேதி கொண்டாடப்படுவது வழக்கம். கடற்கரை காந்தி சிலை திடலில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றினார். முன்னதாக அவர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.பின்பு கலைக்குழுவினரின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதை ஏராளமான பொதுமக்கள் ரசித்து பார்த்தனர். விழாவில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் புதுச்சேரி விடுதலை நாள் காரைக்கால், ஏனாம், மாஹே பகுதியிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டதுசுமார் 300 ஆண்டுகளாக பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து வந்த புதுச்சேரிக்கு 1954-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம்…

தமிழ்நாடு நாளுக்கு முதல்வர்,தலைவர்கள் வாழ்த்து

தமிழ் மொழி பேசும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட பெருமை மிகுந்த தினம் என தமிழ்நாடு நாளுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சென்னை மாகாணம் மொழிவாரி மாநிலங்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, தமிழக மாநிலமாக உருவாக்கப்பட்ட நாள் (நவ.1) தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு நாளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை நேற்று பகிர்ந்தனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின்: தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழகத்தின் எல்லையை காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள் நவ.1. தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளை தமிழகத்துடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன். முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: தமிழ் மண், தமிழ் மொழி என்று, நம் தமிழுக்கும் நம்…

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம்- ராகுல் காந்தி மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:- பண்டிட்ஜியின் இந்து, பாபுவின் அன்புக்குரியவர், அச்சமற்றவர், துணிச்சலானவர், நீதியை விரும்புபவர் – இந்தியாவின் இந்திரா! பாட்டி, தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான உங்கள் தியாகம், பொது சேவையின் பாதையில் நம் அனைவரையும் எப்போதும் ஊக்குவிக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

சிவகாசி பட்டாசுகள் ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி, சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாமு முழுவதும் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்களால் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டன. மழை உள்ளிட்ட காரணங்களால் 75 சதவீத அளவுக்கு மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்பட்ட 95 சதவீத பட்டாசுகள் ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக பட்டாசு வணிகர்கள் தெரிவித்துள்ளனர். தயாரிப்பு குறைந்த நிலையில் கூட கடந்தாண்டை விட, நடப்பாண்டில் பட்டாசு விற்பனை சிறப்பாக இருந்ததாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.

மேஜர் முகுந்தனுக்கு மிகப்பெரிய சல்யூட்- தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பாராட்டு

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் ‘முகுந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.அமரன் படத்தை பார்த்த முதலமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:- நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்களது அன்பு அழைப்பை ஏற்று, நேற்று அமரன் திரைப்படம் பார்த்தேன். புத்தகங்களைப் போல்- திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் இயக்குநர் ராஜ்குமார் படமாக்கியுள்ளார்.அமரன் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு படக்குழுவினர்…

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்ய முடியாமல் இருக்கிறது. அதற்குப் பதிலாக எல்.ஏ.சி. எனப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு அவரவர் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் ரோந்து சென்று வந்தனர். அவ்வப்போது இந்தியப் பகுதிகளுக்குச் சீனா பெயர் வைப்பதும், தங்களது எல்லையில் குடியேற்றங்களை நிறுவுவதுமாகச் சீனா இருக்கிறது. முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் வைத்து இந்திய ரோந்து படை மீது சீன ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதால் நிலைமை இன்னும் மோசமாகத் தொடங்கியது. இந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். ஊடுருவிய நிலப்பகுதிகளிலிருந்து சீன ராணுவம் பின்வாங்க மறுத்து எல்.ஏ.சி. எல்லையை ஒட்டி கட்டுமானங்களை மேற்கொண்டு வந்தது. இதையடுத்து, கடந்த…

பி.பி.எல். நிறுவனர் நம்பியார் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு

இந்திய மின்னணு நிறுவனமான பி.பி.எல். குழும நிறுவனர் டி.பி. கோபாலன் நம்பியார் வியாழக்கிழமை காலமானதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. 94 வயதான நம்பியார் கடந்த சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார். டிபிஜி (DPG) என்று பிரபலமாக அறியப்பட்டவர் கோபாலன் நம்பியார். இவர் பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகரின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு குறித்து முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் “பி.பி.எல். பிராண்டின் நிறுவனர் ஸ்ரீ டிபிஜி நம்பியாரின் மறைவு வருத்தமளிக்கிறது. நெடுங்காலமாக நெருங்கிப் பழகிய ஸ்ரீ நம்பியாரின் மகத்தான பங்களிப்புகள் மற்றும் அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கல்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம்.. குழப்பத்தில் பயனர்கள்

இன்ஸ்டாகிராம் சேவை உலகின் பல்வேறு பகுதிகளில் முடங்கியுள்ளதாக பயனர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதன் காரணமாக செயலியில் வைத்து குறுந்தகவல் அனுப்ப முடியவில்லை என்று பலர் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து வலைதளங்கள் செயலிழப்பது குறித்து தகவல் வெளியிடும் டவுன்டிடெக்டர் இன்று மாலை 5.14 முதல் இன்ஸ்டாகிராம் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 2 ஆயிரம் பேர் மெட்டா நிர்வகித்து வரும் இன்ஸ்டா செயலி முடங்கியுள்ளதாக புகார் அளித்துள்ளனர். பலர் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். இன்ஸ்டாகிராம் அல்லது அதன் தாய் நிறுவனமான மெட்டா சார்பில் இன்ஸ்டாகிராம் முடங்கியது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், செயலிழப்பு நடந்து இருப்பதாக தெரிகிறது.