தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த 27 ஆம் தேதி விக்கிரவாண்டியை அடுத்த வி சாலையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாடு வெற்றி பெற்றதை அடுத்து த.வெ.க. தலைவர் விஜய் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே. : 29.10.2024 வணக்கம். மாநாடு குறித்து உங்களுடன் பேச, இது நான்காவது கடிதம். வாஞ்சையில் நனைந்த வார்த்தைகளில் ஒரு நன்றிக் கடிதம். அரசியலில், கடிதமுறை என்பது ஆகப்பெரும் ஆயுதம், பேரறிஞர் அண்ணா தந்த ஆயுதம். தமிழக மக்கள். நம் அனைவருக்கும் சொந்தமானது. அந்த உணர்வின் அடிப்படையில்தான் நாமும் அதைக் கையில் எடுத்தோம்.” “இந்தக் கடிதம் எழுதும்போது, என்னென்னவோ எண்ண அலைகள் இதயத்தில் அலைமோதுகின்றன. என் நெஞ்சம் நிறைந்ததில் எதைச் சொல்வது? எதை விடுப்பது?” “மாநாடு நடத்த, பல்வேறு…
Category: முதன்மை செய்திகள்
பிரான்சில் வள்ளுவரையும், அன்னைத் தமிழையும் போற்றினோம்- அமைச்சர் அன்பில் மகேஷ்
எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுள் தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் ‘கனவு ஆசிரியர் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. 2024-25ஆம் ஆண்டுக்கான ஆன்லைன் தேர்வில் 10,305 ஆசிரியர்கள் பங்கேற்றனர். 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்வின் மூலம் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்ணுடன், 162 இடைநிலை ஆசிரியர்கள், 177 பட்டதாரி ஆசிரியர்கள், 41 முதுநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 380 பேர் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற 54 ஆசிரியர்கள் கடந்த 23-ந்தேதி பிரான்ஸ் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். 28-ந்தேதி வரை சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உடன்…
பள்ளி மாணவியை மிரட்டி பணம் பறித்த போலீஸ்காரர் கைது
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த கலைச்செல்வன் (வயது 35). இவர் ஏர்வாடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும், பாளையங்கோட்டையை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 17 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஆனந்த கலைச்செல்வன் அந்த மாணவியின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருடன் சகஜமாக பழகி வந்துள்ளார். மாணவி வீட்டில் தனியாக இருக்கும்போது அங்கு செல்லும் ஆனந்த கலைச் செல்வன், ஆபாசமாக பேசி வந்துள்ளார். பாலியல் ரீதியில் அந்த மாணவியிடம் பேசி, ஏமாற்றி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த மாணவி குறித்த வீடியோக்களை தனக்கு வாட்ஸ்-அப் மூலமாக அனுப்ப சொல்லி உள்ளார். மாணவியும் அந்தரங்க வீடியோக்களை போலீஸ்காரருக்கு அனுப்பி உள்ளார். அந்த மாணவி வசதியான…
மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடு விற்பனை வியாபாரிகள் தகவல்
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மக்கள் வீடுகளில் அசைவ உணவுகள் சமைத்து சாப்பிடுவது வழக்கம். எனவே சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்டியுள்ளது. அதன்படி நெல்லை மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் தீபாவளி விற்பனை படு ஜோராக நடந்தது. வியாபாரிகள் ஆடுகளை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்றுச் சென்றனர். செவ்வாய்கிழமை தோறும் நடக்கும் மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் இன்று அதிகாலை முதலே தீபாவளி பண்டிகைக்கான விற்பனை களைக்கட்டியது. இறைச்சிக்காக ஆடுகளை கொண்டு செல்வோர் மொத்தமாக 8 முதல் 10 ஆடுகளை விலைபேசி வாங்கி சென்றனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மட்டுமல்லாமல் தேனி, மதுரை மற்றும் கேரளா வியாபாரிகளும் வந்திருந்தனர். ஏராளமான வியாபாரிகள் சந்தைக்கு வந்திருந்தனர். இதனால் அதிகாலையில் தொடங்கி 10 மணி வரையிலும் மேலப்பாளையம் ரவுண்டானா வரை கடுமையான…
கோலமிட்ட பெண்கள் மீது கார் மோதி விபத்து
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் 17 வயது சிறுவன் ஓட்டிவந்த கார் ரங்கோலி கோலம் போட்டி கொண்டிருந்த 2 பெண்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவ்யா (13) என்ற சிறுமியும் பிரியன்ஷி (21) என்ற இளம்பெண்ணும் தீபாவளியை ஒட்டி தங்களது வீட்டிற்கு வெளியே ரங்கோலி கோலம் போட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் இவர்கள் மீது அதிவேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் காயமைடந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நவ்யா (13) கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. காரை ஓட்டி வந்த 17 வயது சிறுவன் விபத்து ஏற்படுத்தியவுடன் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள், காரை அடித்து நொறுக்கி, ஓட்டுநர்…
சிதம்பரம் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம்
ஐப்பசி பூர உற்சவத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள சிவகாமி அம்மன் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் சிவகங்கை மேற்குகரையில் அமைந்துள்ள திருக்காமக்கோட்டம் என்ற ஸ்ரீசிவகாமி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவம் அக்.19-ம் தேதி சனிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகாமி அம்மன் கோயிலில் உள்ள சிவகாமசுந்தரியின் பெயர் திருக்காமக் கோட்டமுடைய பெரியநாச்சியார் என்று கல்வெட்டில் குறிக்க பெற்றுள்ளது. வெளிச்சுற்றில் சித்தரகுப்தன், நடுக்கம் தீர்த்த விநாயகர், ஆதிசங்கரர், ஸ்ரீசக்கரம் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இச்சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி பூர உற்சவம் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மனுக்கு நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து தினமும் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. கீழரதவீதி தேரடி நிலையிலிருந்து தேர் புறப்பட்டு தெற்கு ரதவீதி, மேலரதவீதி, வடக்கு…
தவெக மாநாட்டிற்குச் சென்ற இளைஞர் விபத்தில் பலி!மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பதற்காகச் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நேரிட்ட விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். உடன் சென்ற மற்றொருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று (அக்.27) விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை பகுதியில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. மாலை 4 மணியளவில் மாநாடு தொடங்கவுள்ள நிலையில், அதிகாலை முதலே தொண்டர்கள் வி. சாலை பகுதியில் குவிந்து வருகின்றனர். இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வாகனங்கள் மூலம் தொண்டர்கள், ரசிகர்கள் வி. சாலை பகுதிக்கு புறப்பட்ட வண்ணம் உள்ளனர். இந்நிலையில்,தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட இளைஞர் சாலை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் பகுதியில்…
புதுவை மணவெளி தொகுதியில் மருத்துவமுகாம்சபாநாயகர் தொடங்கிவைத்தார்
மணவெளி சட்டமன்ற தொகுதி சின்ன வீராம்பட்டினம் பகுதியில் நடைபெற்ற இலவச பொது மருத்துவம் பல் மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாமினை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான செல்வம் தொடங்கி வைத்தார். இந்த மாபெரும் மருத்துவ முகாமில் பிவேல் மருத்துவமனை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் Smile and Glow ஆசிய மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கிராம பஞ்சாயத்தார் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
சிஎம்டிஏ அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. சிக்கியது என்ன?
சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. சிஎம்டிஏ அலுவலகத்தில் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், சிஎம்டிஏ அலுவலகத்திலும் சோதனை நடத்தப்படுகிறது. அமைச்சர் வைத்திலிங்கம் கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். அவர், அமைச்சர் பதவியில் இருந்தபோது 1058% வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், தாம்பரத்துக்கு அருகே உள்ள பெருங்களத்தூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கான அனுமதி வழங்க சுமார் ரூ. 27 கோடி லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்தது. அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் பிரபு, சண்முக பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில்,…
கவிஞர் புதுவைச் சிவம் பிறந்த நாள் விழா
புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, காமராஜ் சாலை-சித்தன்குடி சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு சட்டப்பேரவைத் தலைவர் செல்வம். பொதுப்பணித்துறை அமைச்சர். இலட்சுமிநாராயணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
