திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியின் போது விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டுகள் தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து ஏழுமலையான் கோவிலில் மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து லட்டு மீதான தோஷம் நீங்கியதாக தேவஸ்தானம் அறிவித்தது. பக்தர்கள் எந்தவித சந்தேகமும் இல்லாமல் வழக்கம் போல் லட்டு பிரசாதம் வாங்கிச் செல்லலாம் என அறிவித்தனர். லட்டு சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தினாலும் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எந்தவித தயக்கமும் இன்றி லட்டுக்களை வாங்கி சென்று வருகின்றனர். இந்நிலையில், திருப்பதி கோயிலில் பிரம்மோற்சவத்தை ஒட்டி, கடந்த 4 ஆம் தேதி முதல் 11ம் தேதி வரை 8 நாட்களில் 30 லட்சம் லட்டுகள் விற்பனையாகி உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இக்காலகட்டத்தில் ரூ.26 கோடி உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளது. இது…
Category: முதன்மை செய்திகள்
திடீர் நெஞ்சுவலியால் சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி
பிரபல அரசியல் விமர்சகரும் யூடியூபருமான சவுக்கு சங்கர் திடீர் நெஞ்சுவலியால் காரணமாக சென்னை வடபழனி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பெண் காலவர்கள் குறித்து நேர்காணலில் அவதூறாக பேசியது உட்பட பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் இருந்த சவுக்கு சங்கர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவில் நில மோசடி வழக்கு- காரைக்கால் துணை ஆட்சியர் கைது
காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில் காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சான் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு மனைப் பட்டா வழங்குவதாகக் கூறி கோவில் இடம் மோசடியில் கோடிக்கணக்கான பணம் பெற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மகளிர் காவல் நிலையத்தில் ரகசிய அறையில் வைத்து 15 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் இறுதியில் வழக்கு பதிவு செய்து காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சனை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே, காரைக்காலைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஜேசிபி.ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும், போலி ஆவணங்கள் மூலம் நிலம் விற்பதற்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட காரைக்கால் சிவராமன், திருமலைராஜன், காரைக்கால் நகராட்சி நில அளவையர் ரேணுகாதேவி, பத்திர எழுத்தர் கார்த்தி ஆகியோரை போலீசார் ஏற்கெனவே கைது செய்துள்ளனர். இந்நிலையில், மாவட்ட துணை ஆட்சியர்…
அரியானாவில் அக்.15ம் தேதி பாஜக ஆட்சியமைப்பு
அரியானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகின. முதலில் காங்கிரஸ் 50 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சுமார் ஒரு மணி நேரம் கழித்து பா.ஜ.க முன்னிலை விகித்து இறுதியாக 90 இடங்களில் 48 இடங்களில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. பெரும்பாலான தொகுதியில் இழுபறி நிலவியது. முன்னணி வகித்தவர்கள் பின்தங்குவதும், பின் தங்கியவர்கள் முன்னணி வகிப்பதுமாக இருந்தது. இதனால் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி வாக்குகள் வித்தியாசம் மிகவும் குறைவாக இருந்தது. இறுதியாக, அரியானா மாநிலத்தில் பாஜக 3 ஆவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், அரியானா மாநிலத்தில் பாஜக அரசின் பதவி ஏற்பு விழா அக்டோபர் 15ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய முதல்வராக இருக்கும் நயாப் சிங் சயானியே மீண்டும் முதல்வராவார் என…
ஆயுத பூஜை, விஜயதசமி: தவெக தலைவர் விஜய் வாழ்த்து
யுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து புதிய முயற்சிகளிலும் வெற்றி உண்டாகி, அனைவரின் வாழ்வும் தழைத்தோங்க இனிய நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
மறைந்தார் முரசொலி செல்வம்- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
“நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை இழந்து நிற்கிறேன்” – முரசொலி செல்வம் மறைவு; முதல்வர் ஸ்டாலின் உருக்கம்! “நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன். என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கட்சியிலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்” என்று முரசொலி செல்வம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மறைந்த முதல்வர் கருணாநிதியின் மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது. கருணாநிதியின் மூத்த பிள்ளையான முரசொலியின் பணிகளைத் தன் தோளில் சுமந்துகொண்டு இளமைப் பருவம் முதலே திறம்படச்…
வில்லியனூர் தொகுதியில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி: எதிர்க்கட்சித் தலைவர் . சிவா துவக்கி வைத்தார்
புதுச்சேரி வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட வசந்தம் நகர், ஆத்துவாய்க்கால்பேட், குளத்துமேடு மற்றும் வி.மணவெளி வழியாக செல்லும் வாய்க்கால்களை பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் மூலம் ரூ. 7 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் இன்று துவங்கியது.இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா அவர்கள் கலந்துகொண்டு தூர்வாரும் பணிகளை பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில், பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் சங்கர் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், தொகுதி அவைத் தலைவர் ஜலால் அணிப், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், தொழிலாளர் முன்னேற்ற பேரவை சங்கத் தலைவர் அங்காளன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் தேசிகன், ஆதிதிராவிடர் அணி துணைத்…
நீட் தேர்வு ரத்துக்கு திமுக அரசு எதையும் செய்யவில்லை- இ.பி.எஸ்.
சேலம் எடப்பாடியில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவி புனிதா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மறைந்தார் முரசொலி செல்வம்-தமுதல்வர் ஸ்டாலின் இரங்கல்
“நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை இழந்து நிற்கிறேன்” – முரசொலி செல்வம் மறைவு; முதல்வர் ஸ்டாலின் உருக்கம்! “நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன். என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கட்சியிலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்” என்று முரசொலி செல்வம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மறைந்த முதல்வர் கருணாநிதியின் மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது. கருணாநிதியின் மூத்த பிள்ளையான முரசொலியின் பணிகளைத் தன் தோளில் சுமந்துகொண்டு இளமைப் பருவம் முதலே திறம்படச்…
சென்னையில் பா.ம.க.வினர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் போலீசார் தடுத்து நிறுத்தினர்
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க கோரியும், தற்போது இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க கோரியும், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கோரியும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை இன்று முற்றுகையிட போவதாக பா.ம.க. அறிவித்திருந்தது. அதன்படி வள்ளுவர் கோட்டம் அருகே பா.ம.க.வினர் திரண்டனர். இந்த போராட்டத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, பா.ம.க. பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும் சத்ரிய நாடார் இயக்க நிறுவனர் சந்திரன் ஜெயபால், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார், நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்க தலைவர் ஆனந்தராஜ், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மீனவர் கிராமங்களான தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம்…
