ஜம்மு-காஷ்மீர் மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபடுவேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இக்கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களில் வென்றுள்ளது. இதன் மூலம், ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. பாஜக 29 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தனித்துப் போட்டியிட்ட மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களில் வென்றுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி ஆகியவை தலா ஒரு தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கின்றன. இந்நிலையில், ஜம்மு – காஷ்மீர் மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து உழைப்பேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ஜம்மு-காஷ்மீர் மக்களின்…
Category: முதன்மை செய்திகள்
அரியானா தேர்தல் முடிவுகளை ஏற்கமாட்டோம்: காங்கிரஸ் அறிவிப்பு
அரியானாவில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. அங்கு காங்கிரஸ் 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான பவன் கெரா, அரியானா மாநில தேர்தல் பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: தேர்தல் முடிவு எதிர்பார்க்காதது. ஆச்சர்யமாக உள்ளது. கள நிலவரத்திற்கு எதிராக உள்ளது. அரியானா மக்களின் எண்ணங்களுக்கு மாறாகவும், ஆட்சி மாற்றம் என்ற விருப்பத்திற்கு எதிராகவும் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் தேர்தல் முடிவுகளை ஏற்கமுடியாது என்பதை நாங்கள் அறிவிக்கிறோம். ஓட்டு எண்ணிக்கை குறித்தும், மின்னணு ஓட்டு எந்திரம் செயல்பாடு குறித்தும் 3 மாவட்டங்களில் இருந்து தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கட்சி நிர்வாகிகளுடன் பேசி உள்ளோம். புகார்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க உள்ளோம்.…
அரியானா சட்டசபை தேர்தல்:வினேஷ் போகத்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து!
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், மல்யுத்த வீராங்கனையுமான வினேஷ் போகத் தனது வெற்றியைப் பதிவு செய்தார். இதுகுறித்து தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வினேஷ் போகத்தை வாழ்த்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வினேஷ் போகத் ஹரியாணாவில் ஜூலானா சட்டபேரவைத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றுள்ளார். மக்களுக்கான பிரதிநிதியாக மக்கள் சேவையின் இந்த புதிய அத்தியாயத்தில் அவர் சிறப்பான வெற்றிபெற வாழ்த்துகிறேன். பாசிச சக்திகளுக்கு எதிராக அவரது ஆற்றல் தொடரட்டும்” எனப் பதிவிட்டுள்ளார். முன்னதாக, ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாஜகவின் யோகேஷ் குமாரைவிட 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வினேஷ் போகத்…
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள்- கிரிக்கெட் விளையாட்டு
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் வளாகத்தில் நேற்றிரவு 10-க்கு மேற்பட்ட தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த விசிக நிர்வாகி இளையராஜா (40) தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். விசிக நிர்வாகி வீடியோ எடுத்ததற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது கோவிலில் கிரிக்கெட் விளையாடலாமா? இது ஆகம விதிக்கு எதிரானது தானே? இதேபோல் அனைவரையும் கிரிக்கெட் விளையாட அனுமதிப்பீர்களா? என கேட்டபோது இது எங்க கோயில் நாங்க எது வேண்டுமானாலும் செய்வோம் அதனை கேட்க நீ யார்? என்று ஒருமையில் தீட்சிதர்கள் பேசியுள்ளனர். பின்னர் அங்கிருந்த தீட்சிதர்கள் இளையராஜாவை அடித்து அவரது செல்போனை பறித்துள்ளனர். இதுகுறித்து இளையராஜா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து தீட்சிதர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு…
புதுவை மணவெளி தொகுதி கொருக்குமேட்டில் ஆட்டோ ஸ்டாண்டு திறப்பு
புதுச்சேரி அக்.8-மணவெளி தொகுதி தவளக்குப்பம் கொருக்குமேடு பகுதியில் உள்ள சீனிவாசா அப்பார்ட்மெண்ட் பகுதியில் செல்வம் மக்கள் இயக்கம் சார்பாக புதிய ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு விழா நடைபெற்றது. இந்த ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு விழாவில் சட்டப்பேரவை தலைவர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆட்டோ ஸ்டாண்ட் பெயர் பலகையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆட்டோ ஸ்டாண்ட் சங்க நிர்வாகிகள் பாஜக மாவட்ட தலைவர் சுகுமார் துணைத் தலைவர் மணிகண்டன் சிவகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் பொறுப்புகளில் இருந்து நீக்கம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை அமைப்பு செயலாளர் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆகிய கட்சி பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டடு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பின்னர் தற்போது முதல் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மூன்று கட்டங்களாக நடந்த தேர்தலில் 63.45 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன் வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாகி நடந்து வருகிறது. முன்னதாக யாருக்கும் பெரும்பான்மைக்குத் தேவையான 46 இடங்கள் கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வந்தன. ஆனால் தற்போது அதை பொய்யாகும் விதமாக காங்கிரஸ் – என்.சி.பி கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 48 இடங்களில் காங்கிரஸ்-என்சிபி கூட்டணி முன்னிலையில் உள்ளது. தனித்து போட்டியிட்ட பாஜக 16 இடங்களில் முன்னிலையில் உள்ளது . அதேவேளையில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி [பிடிபி] 2 இடங்களில் மட்டுமே…
கலைஞர் நூற்றாண்டு பூங்கா தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை கத்தீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நினைவை போற்றுவதற்காக சென்னை கோபாலபுரம் கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவுக்கு எதிரில் செங்காந்தள் பூங்காவுக்கு அருகில் 6.09 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ரூ.45 கோடியே 99 லட்சம் செலவில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவின் நுழைவுவாயிலில் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுள்ள ஜிப்லைன் எனப்படும் கம்பியில் தொங்கியபடி செல்லும் சாகச பயணம், பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர் கொடி வளைவுப்பாதை, 120 அடி பனி மூட்டப்பாதை, 2,600 சதுர அடி நீளமுள்ள ஆர்க்கிட் குடில், அரியவகை கண்கவர் பூச்செடிகளை காட்சிப்படுத்த 16 மீட்டர் உயரத்துடன் 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவைகளை…
.இந்தியன் வங்கியின் உள்ளூர் வங்கி அலுவலர்தமிழக தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் மையம்
இந்தியன் வங்கி நடத்தும் உள்ளூர் வங்கி அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பத்திருந்த தமிழக தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில் காலியாகவுள்ள 300 உள்ளூர் வங்கி அலுவலர் பதவிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை விண்ணப்பத்துடன் ரூ. 1,000 தேர்வுக் கட்டணமாக பெறப்பட்ட நிலையில், வருகின்ற 10-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்வர்களுக்கான நுழைவுச் சீட்டு கடந்த வாரம் வெளியான நிலையில், தமிழக தேர்வர்களுக்கு ஹைதராபாத், பெங்களூரு போன்ற வெகு தொலைவில் உள்ள வெளி மாநிலங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்கு அடுத்த நாள், ஆயுதப் பூஜை தொடர் விடுமுறை வருவதால், பொதுப் போக்குவரத்து சேவைகள் அனைத்திலும் முன்பதிவு இருக்கைகள்…
10 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை காவல் நிலையத்துக்கு தீ வைப்பு
மேற்கு வங்கத்தில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்கானாஸ் மாவட்டத்தில் ஜாய் நகர் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை டியூஷன் சென்றுவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு திரும்பும் வழியில் காணாமல் போனதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். பின்னர் தேடுதலில் இறங்கிய கிராமத்தினரால் குளத்தில் இருந்து சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சிறுமி வீட்டுக்கு வரும் வழியில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லபட்டதாக பெற்றோரும் ஊராரும் தெரிவிக்கின்றனர். சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். பெற்றோர் புகாரின் மீது காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமியைக் காப்பாற்றி இருக்கலாம் எனவும் வேண்டுமென்றே அவர்கள் காலதாமதம் செய்ததாகவும் குற்றம் சாட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிலரால் காவல் நிலையத்திற்கும்,…
