புதுச்சேரி,செப்.5-வலிமை மிக்க பாரதத்தை உருவாக்க ஆசிரியர்கள் மாணவர்களை வழி நடத்த வேண்டும் ஆளுநர் கைலாஷ் நாதன் வாழ்த்துபுதுச்சேரி துணைநிலைஆளுநர் கைலாசநாதன் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: சமுதாய அளவில் பெற்றோர்களுக்கும் தெய்வத்திற்கும் இணையான மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள் ஆசிரியர்கள். மாணவர்களுக்கு கல்வியும் ஒழுக்கத்தையும் போதித்து நல்ல சமுதாயத்தை உருவாக்க அர்ப்பணிப்போடு கடமையாற்றும் ஆசிரியர்கள் உயர் நிலையில் வைத்து போற்றப்படுகிறார்கள். அத்தகைய ஆசிரியர்களின் கடமை உணர்வையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி போற்றும் நாளாக இந்த ஆசிரியர் தினம் அமைகிறது. சிந்தனை வளமும் செயல் திறமும் மிகுந்த வலிமை மிக்க பாரதத்தை உருவாக்க ஆசிரியர்கள் மாணவர்களை வழிநடத்த வேண்டும், என்று கேட்டுக்கொண்டு ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். முதல்வர் ரங்கசாமியை விடுத்துள்ள ஆசிரியர் தின வாழ்த்து: புதுச்சேரி…
Category: முதன்மை செய்திகள்
ட்ரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2000 கோடிக்கு தமிழக அரசு ஒப்பந்தம்தமிழகத்தில் தொழில் முதலீட்டு மையமும் அமைகிறது
வளர்ச்சியின் அடையாளமாக திகழும் தொழில் நிறுவனங்கள், தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்யும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க நாட்டிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன, இதன்மூலம் மொத்தம் ரூ.1,300 கோடி முதலீட்டில் 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 3-ந் தேதியன்று அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட் நிறுவனங்களுடன் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஈட்டன் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.200 கோடி முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில் தற்போதுள்ள ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல்…
வடகொரிய வெள்ள நடவடிக்கை கடமை தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்?
வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 1,000 பேர் உயிரிழந்த நிலையில், அதை தடுக்கத் தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவுப்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 4,100 வீடுகள், 7,410 விவசாய நிலங்கள், அரசு கட்டடங்கள்,சாலைகள் மற்றும் ரெயில்வே லைன்கள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. இந்த பாதிப்புகளில் சிக்கி 1000 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வட மேற்கு பகுதிகளில் உலா சின்உய்ஜூ[Sinuiju], உய்ஜூ Uiju உள்ளிட்ட நகரங்களின் அதிக அழிவுகள் நிகழ்ந்துள்ளன.வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட கிம் ஜாங் உன் அவ்விடங்களை மீண்டும் கட்டியெழுப்ப பல மாதங்கள் ஆகும் என்று தெரிவித்தார். மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து…
சத்தீஸ்கரில் குடிநீர் கேட்ட மாணவிகள்.. சிறுநீரை குடிக்க சொன்ன அரசு பள்ளி தலைமை ஆசிரியர்
சத்தீஸ்கரில் அரசு இடைநிலைப் பள்ளியில் தாகத்துக்குத் குடிநீர் வசதி செய்து தரகோரிய மாணவிகளை சிறுநீரைக் குடிக்க தலைமையாசிரியர் வற்புறுத்தியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் Phoolidumar என்ற பகுதியில் செயல்பட்டு வந்த அரசு இடைநிலைப் பள்ளியில் சுத்தமான குடிநீர் கிடைப்பதில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. 7 வகுப்பு படித்து வந்த மாணவிகள் குழுவாக சேர்ந்து குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ண திரிபாதியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். கோபமடைந்த ராமகிருஷ்ண திரிபாதி மாணவிகளை சாக்கடையைக் குடிக்க வற்புறுத்தியுள்ளார். இதனால் திகைத்துப்போய் நின்ற மாணவிகளை மேலும் சிறுநீரைக் குடிக்கும்விபடி கூறியுள்ளார். இதனை அந்த மாணவிகள் தங்களது கிராமத் தலைவரிடம் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அம்மாவட்ட கலெக்டரிடம் சென்ற நிலையில் ராமகிருஷ்ண திரிபாதி தலைமை ஆசிரியர் பதவியில்…
புதுச்சேரி ஒதுக்கீட்டில் ஜிப்மரில் வெளிமாநில மாணவர்களுக்கு வழங்கிய 9 இடம் ரத்து சபாநாயகர் பேட்டி
இதுதொடர்பாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது- புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி, காரைக்காலில் 250 இடங்கள் உள்ளன இதில் 64 இடங்கள் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இரட்டை குடியுரிமை பெற்று பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் 9 பேர் இடம் பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக கவர்னர் கைலாஷ்நாதன் மத்திய அரசை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்டமாணவர்களை நீக்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி தற்போது அந்த 9 மாணவர்களின் பெயர்களையும் தேசிய மருத்துவ ஆணையம் நீக்கியுள்ளது. இதனால் ஜிப்மரில் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்கள் 64 பேர் சேரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது. அனைவருக்குமான முதலமைச்சரின் மருத்துவ நிதியுதவி திட்டம் கொண்டுவரப்படும் (ரூ.5லட்சம் வரை சிகிச்சைபெற) என்று…
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரிதாபம்-காவலர் உடற்தகுதி தேர்வில் மயங்கி விழுந்து 11 பேர் உயிரிழப்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற காவலர் உடற்தகுதி தேர்வில் பங்கேற்ற 11 போட்டியாளர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடும் வெயிலில் 10 கி.மீ தூரத்திற்கு அவர்கள் ஓடிய நிலையில், இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பயிற்சியின் போது மயங்கி விழுந்ததால் சுமார் 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்ததை இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லும் பாதையில் கடும் நிலச்சரிவு 2 பேர் பலியானர்கள்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ரா அருகே உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி ஆலய வாரியத்தின் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். நிலச்சரிவில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீராங்கனைகள் பேட்மிண்டனில் வெள்ளி, வெண்கலம் வென்றனர்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. மகளிர் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர், எஸ்யு 5 பிரிவின் இறுதிப் போட்டி மற்றும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன் சீனாவின் கியு ஹ்யா யங்-ஐ எதிர்கொண்டு விளையாடினர். இந்த போட்டியில் துளசிமதி முருகேசன் 17-21, 10-21 என்ற செட் கணக்கில் க்யு ஹ்யா யங்கிடம் தோல்வி அடைந்தார். இதனால் துளசிமதி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றி உள்ளார். இதே பிரிவில் (பெண்கள் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவு) வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் மனிஷா ராமதாஸ், டென்மார்க்கின் கேத்ரின் ரோசன்கிரென் உடன் மோதினார். இந்தில் அபாரமாக செயல்பட்ட மனிஷா…
ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரில் பயணித்த வீடியோவை பகிர்ந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.அமெரிக்க சுற்றுப்பயணத்தில் ஜாகுவார் நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரில் பயணித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தந்தை பெரியாரின் ‘இனிவரும் உலகம்’ புத்தகத்தில் உள்ள கருத்தோடு தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், “இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடுநிலைமை அறிவோடு, முயற்சித்ததின் பலனாலேயே ஏற்பட்டவை” என்று பதிவிட்டுள்ளார்.
பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் வென்றது
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் F64 போட்டியில் 70.59 மீ தூரம் என்ற புதிய உலக சாதனையுடன் இந்தியாவின் சுமித் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். சுமித்துக்கு பாராலிம்பிக்கில் தொடர்ந்து 2வது தங்கம். இந்தியா இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்றுள்ளது.
