முடா முறைகேட்டில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவுக்கு மாநில ஆளுநர் அனுமதி

முடா முறைகேட்டில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் அனுமதி வழங்கியுள்ளார். இதற்கு கர்நாடக மாநில மந்திரிகள் கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் தவறு ஏதும் செய்யவில்லை. இதனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் காங்கிஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜக நியமித்துள்ள பாஜக அரசு அல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மாநில அரசுகளுக்கு இடர்பாடுகளை ஏற்படுத்துகின்றனர் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:- ஆளுநர் அனுப்பிய நோட்டீசில் என்ன உள்ளது? என்பதை பார்க்கவில்லை. அதுபோல் என்ன காரணத்திற்காக அனுமதி அளித்தார் என்பது குறித்து நான் இன்னும் பார்க்கவில்லை. என்னால் தற்போது நோட்டீஸ் சரியா அல்லது தவறா? எனக் கூற முடியாது. ஆனால்…

ராஜஸ்தானின் பள்ளியில் சக மாணவனை கத்தியால் குத்திய மாணவனின் வீடு இடித்து தரைமட்டம்

அரசுப் பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், சக மாணவனை 10-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தானின் உதய்பூரில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மாணவன் வசித்து வந்த வீடு, ஜேசிபி வாகனம் மூலம் சனிக்கிழமை(ஆக. 17) இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளது. அந்த குடியிருப்புக் கட்டடம், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்ததாக அதிகாரிகளுக்கு தெரியவந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், 10-ஆம் வகுப்பு பயின்று வந்த இரு மாணவர்கள் இடையே வெள்ளிக்கிழமை(ஆக. 16) தகராறு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. அதில் தகராறில் ஈடுப்பட்ட மாணவன், தான் வகுப்பறைக்கு எடுத்துச் சென்றிருந்த கத்தியால் சக மாணவனை பலமாகக் குத்தியுள்ளான். மோதலில் ஈடுப்பட்ட மேற்கண்ட இரு மாணவர்களும் வெவ்வேறு சமூகப் பிரிவைச் சார்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. கத்திக்குத்தில்…

டாக்டர்களின் பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகள் பெற குழு அமைப்பு: மத்திய அரசு உறுதி

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. டாக்டர்கள் போராட்டத்தால் மேற்குவங்கத்தில் மருத்துவ சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, இந்திய மருத்துவ கூட்டமைப்பு உள்ளிட்ட மருத்துவ சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை மந்திரியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், டாக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு அவர்களின் பணியிடங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், மருத்துவ சங்கங்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், டாக்டர்களின் பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகளைப் பெறவும் பரிந்துரை குழு அமைக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதியளித்துள்ளது. அந்தக் குழுவிடம் பரிந்துரைகளை வழங்க மாநில அரசுகள் உள்பட அனைத்துப் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும்…

பெண் பணியாளர்களுக்கான சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில் பெண் பணியாளர்கள் தங்கும் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம்-வடிகால் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது. இதில் 18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் மிக பிரமாண்டமாக இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தக் குடியிருப்பு வளாகத்தை திறந்துவைத்தார். விழாவில் பாக்ஸ்கான் நிறுவன தலைவர் யாங் லீயு முன்னிலை வகித்தார். பெண் பணியாளர்கள் தங்கும் விடுதியை திறந்துவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் பாக்ஸ்கான் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஐபோன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவிலேயே 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது.தொழில் வளர்ச்சியில் தனி கவனம்…

புதுச்சேரி சட்டப்பூர்வ பரிமாற்ற நாள்கீழூர் நினைவிடத்தில் தியாகிகளுக்கு சபாநாயகர் அமைச்சர்கள் மரியாதை

கீழூர் நினைவிடத்தில் நடந்த அரசின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழாவில் தியாகிகளுக்குசபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆதிதிராவிடர்நலத்துறை அமைச்சர் சாய்.சரவணக்குமார் ஆகியேர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார். பிரெஞ்சு ஆட்சியில் இருந்து 1.11.1954-ம் ஆண்டு புதுச்சேரி விடுதலை பெற்றது. அதன்பிறகு இந்திய அரசுடன் இணைய வேண்டுமா? வேண்டாமா? என்று வில்லியனூர் அருகே உள்ள கீழூர் கிராமத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 178 பஞ்சாயத்து உறுப்பினர்கள் பங்கேற்றனர். இவர்களில் இந்திய அரசுடன் இணைவதற்கு 170 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து 16.8.1962-ல் இந்திய அரசுடன் புதுச்சேரி அரசு இணைக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றவர்களின் பெயர் பட்டியல் அடங்கிய நினைவுத்தூண் கீழூரில் நிறுவப்பட்டுள்ளது. புதுச்சேரி இந்திய அரசுடன் இணைக்கப்பட்ட ஆகஸ்டு 16-ந் தேதி ஆண்டுதோறும் புதுச்சேரி அரசின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழாவாக கீழூர் நினைவிடத்தில் கொண்டாடப்பட்டு…

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்குபயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்

இந்தியா-இலங்கை இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 14-ந்தேதி ‘செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக அதே மாதம் 23-ந்தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் ‘சிவகங்கை’ என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக அந்தமானில் இருந்து ‘சிவகங்கை கப்பல்’ நாகை துறைமுகத்திற்கு கடந்த வாரம் வந்தது. இந்த கப்பலுக்கான சோதனை ஓட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று காலை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த சிவகங்கை பயணிகள் கப்பலை புதுச்சேரி மந்திரி நமச்சிவாயம், நாகை மாவட்ட கலெக்டர் ஆகாஷ், செல்வராஜ் எம்.பி. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, 44…

அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தொடங்கியது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 72 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கட்சி வளர்ச்சி குறித்தும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சியின் முப்பெரும் விழா குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், 2026 சட்டசபை தேர்தலிலும் வெற்றி வாகை சூட திட்டம் தீட்டி வருகிறது. அந்த வகையில், மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னையில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரும், ஏனைய…

இஓஎஸ்-08 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ள பூமி கண்காணிப்பு செயற்கைகோள் இ.ஓ.எஸ்.08. இந்த செயற்கைகோளை சுமந்தப்படி எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.17 மணிக்கு திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்தது.3 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் திட வகையை சேர்ந்ததாகும். இதனை ராக்கெட்டில் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. இந்த ராக்கெட்டில் 175 கிலோ எடை கொண்ட 3 ஆராய்ச்சி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கருவிகளும் ஒவ்வொரு பயன்பாடுகளுக்காக செயல்பட இருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் திட்டமிட்ட திசையில் சரியாக பயணித்தது. பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக…

சிறிய மனப்பான்மை கொண்டவர்களிடமிருந்து பெருந்தன்மையான நடவடிக்கைகளை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது

செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஐந்தாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதற்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். தில்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி 11-ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார். சமீபத்தில் முடிவடைந்த பாரீஸ் விளையாட்டுப் போட்டிகளில், பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்குப் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், 10 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்துடன் செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார். இந்த நிலையில், ராகுல் காந்திக்கு கடைசியில் இருந்து இரண்டாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்திக்கு, மத்திய அமைச்சர்களுக்கு நிகரான மரியாதை வழங்கப்படவில்லை என்றும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த ஆண்டு பாரீஸ்…

78-வது சுதந்திர தினம் பிரதமர் மோடி உரை

இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில் இந்திய அரசு சார்பில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழா பிரதான விழா ஆகும். இந்த விழாவையொட்டி பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார். சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.