கீழடி குறித்த உண்மைகளை சில மனங்கள் ஏற்க மறுக்கின்றன- அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழினத்தின் பெருமைக்கும், தொன்மைக்கும் பங்கம் விளைவிக்கும் எத்தனையோ தடைகளைக் கடந்து, அறிவியல் ஆதாரங்களுடன் நம் மரபை மொழியின் பெருமையை உலகறியச் செய்து வருகிறோம். ஆனால், சில மனங்கள் இன்னும் உண்மையை ஏற்க மறுக்கின்றன. இத்தகைய மறுப்புகளை எதிர்கொள்ள, அறிக்கைகள் மட்டும் போதாது; மாறாக, சில மனங்களை மாற்ற வேண்டிய கடமை நம்முன் உள்ளது. நாளை மதுரை விரகனூரில் நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டின் உணர்வை உலகறியச் செய்ய பெருந்திரளாகக் கூடிட வேண்டும். ஒன்றிய அரசின் மறுப்புகளுக்கு எதிராக, நம் இனத்தின் உரிமைகளை உறுதியாக வெளிப்படுத்த முதலமைச்சர் ஆணையின் படி அழைக்கிறது மாணவர் அணி, வாழ்க தமிழ்!! வெல்க தமிழ்! என கூறினார்

கோவிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்த திருடன் போதையில் தூங்கியதால்போலீசில்சிக்கினான்

கோவை அருகே உள்ள கோவைப்புதூரில் பாலவிநாயகர் மற்றும் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். நேற்றுமுன்தினம் இரவு பூஜை முடிந்த பின்னர் பூசாரி கோவிலை பூட்டி விட்டுச்சென்றார். மறுநாள் காலையில் அவர் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தார். அங்கு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருந்தது. அதேசமயம் உண்டியல் அருகே ஒரு வாலிபர் போதையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். உடனே பூசாரி, கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் அங்கு ஏராளமானோர் திரண்டனர். தூங்கிக் கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பி அவரிடம் விசாரித்தனர். கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட வந்ததாகவும், பணத்தை திருடிவிட்டு போதையில் அங்கேயே தூங்கி விட்டதாகவும் அவர்…

கேஜிஎஃப் தங்கச் சுரங்கம் திறப்பு

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள கோலார் தங்க வயல் சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டு, தங்கக் கட்டிகளை வெட்டி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2001ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி மூடப்பட்ட கோலார் தங்க வயலை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, சுரங்கத்தின் அடி ஆழத்தில் தோண்டி தங்கம் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை. மாறாக, தரைப்பகுதியில் மேலே இருக்கும் தங்கத்தை சேகரிப்பது புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு கலந்திருக்கும் தங்கத்தை பிரித்தெடுப்பது போன்றவை மேற்கொள்ளப்படவிருக்கின்றன. இதனால் தங்கம் விலை குறையுமா என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இந்தியாவின் தங்க இறக்குமதி குறைந்து, அந்நியச்செலாவணி குறையலாம் மேலும் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம் என்றுதான் கூறப்படுகிறது. கடந்த 1875ஆம் ஆண்டில் கோலார் தங்க வயலில் தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டு, சுரங்கம் அமைக்கும்…

இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து – 25 பேர் படுகாயம்

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. மண்டி மாவட்டம் பத்ரிகாட் பகுதியில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் சுமார் 35 பேர் பயணித்தனர். 25 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மதிமுக அலுவலகம் மீது தாக்குதல்: தீயணைப்பு படை வீரா் சிக்கினாா்

எழும்பூா் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்துக்குள் தீயணைப்புப் படை வீரா் சீருடையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் திங்கள்கிழமை அத்துமீறி நுழைந்தாா். கையில் உருட்டுக் கட்டையுடன் வந்த அவா், அங்கிருந்த பொருள்களை உடைத்தாா். அந்த இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். விசாரணையில் அவா், மன்னாா்குடியைச் சோ்ந்த அல்கோா் (25) என்பதும், தீயணைப்பு படை வீரரான அவா், எழும்பூரில் உள்ள தீயணைப்புத் துறை தலைமை அலுவலகத்தில் வேலை செய்வதும், குடும்ப பிரச்னை காரணமாகவும், பண நெருக்கடி காரணமாகவும் மன அழுத்ததில் இருந்திருப்பதும், அதன் காரணமாகவே மதிமுக அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது காவிரி நீர்! மலர், நெல் மணிகள் தூவி விவசாயிகள் வரவேற்பு

ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி நீர் திறந்து விடப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று காவிரி நீரை திறந்து வைத்தார்.மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை கடந்து இன்று திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது. முக்கொம்புக்கு வந்த காவிரி நீரை விவசாயிகள் மலர் தூவியும் நெல் மணிகள் தூவியும் உற்சாகமாக வரவேற்றனர்.முன்னதாக முக்கொம்பு சுற்றுலா தல நுழைவு வாயிலிருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். முக்கொம்பு மேலணையில் உள்ள காவிரி தாய் சிலைக்கும் கரிகாலன் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காவிரிக்கு படையலிட்டு பூஜை செய்தனர். அதனையடுத்து வாழ்த்து முழக்கங்கள் முழங்க மலர்கள் தூவியும் நெல்மணிகள் தூவியும் காவிரி நீரை வரவேற்றனர்.ஜூன் 12-ஆம் தேதியான சரியான தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சி…

நாகப்பட்டினம்-இலங்கை இடையிலான கப்பல் சேவை 18-ஆம் தேதி வரை நிறுத்தம்

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி ‘செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23-ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு ‘சிவகங்கை’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் சேவையை தொடங்கியது. இரண்டு நாட்டு பயணிகளின் ஆர்வத்தால் சனிக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இருமார்க்கத்திலும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ…

மறைந்தார் கொல்லங்குடி கருப்பாயி!

கொல்லங்குடி கருப்பாயி தனது 99 -ஆவது வயதில் சொந்த ஊரான கொல்லங்குடியில் சனிக்கிழமை காலமானார். சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த கருப்பாயி என்பவரும் தனது பாடல்களால் கொல்லங்குடிக்கு பெருமை சேர்த்தார்.இவரது வயல் வெளியில் ஒலித்த கிராமிய பாட்டு அகில இந்திய வானொலி வாயிலாக ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஒலித்தது. பின்னர் இயக்குநர், நடிகர் பாண்டியராஜன் கண்ணில் பட்டதால் அவரது ஆண்பாவம் படத்தில் நடிக்க வைத்ததுடன், சில பாடல்களை பாடவும் வைத்தார். தொடர்ந்து அவருடன் ஆயுசு நூறு, கோபாலா கோபாலா ஆகிய திரைப்படங்களிலும் நடித்தார்.நாட்டுப்புறப்பாடல்களில் முன்னோடியாக கருதப்படும் இவருக்கு கடந்த 1993 -ல் தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. பாடல் ஒலிப்பதிவிற்கு சென்றபோது இவரது கணவர் இறந்ததால், திரைத்துறையிலிருந்து விலகினார். தன் மகளின் இறப்பினாலும் ஒடுங்கிப்போனார். கொல்லங்குடியில் தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து…

விமான விபத்தில் உயிரிழப்பு 274-ஆக உயா்வு

நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 274-ஆக உயா்ந்துள்ளது. இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பிரதமா் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பெருந்துயா் நேரிட்ட இடத்தை வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். காயமடைந்தோரை சந்தித்து நலம் விசாரித்த மோடி, உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா். அகமதாபாத் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏா் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனா் ரக விமானம் (ஏஐ 171), இங்கிலாந்து, கனடா மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினா் உள்பட 242 பேருடன் (12 ஊழியா்கள், 230 பயணிகள்) லண்டனுக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் புறப்பட்டது. ஓடு பாதையில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழ்நோக்கி இறங்கிய விமானம், அருகில் உள்ள மேகானிநகா் பகுதியில் பி.ஜே அரசு…

ஆடி மாதம் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பம்- அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவிப்பு

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம் செல்ல தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் மக்கள் தாய் தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டுப் போற்றி வருகின்றனா். பல்வேறு திருக்கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று வழிபடுவதை பெரும் விருப்பமாகவும் கொண்டுள்ளனா். இதைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு 1,003 பக்தா்களும், புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு 1,008 பக்தா்களும் ஆன்மிகப் பயணமாக அழைத்து செல்லப்பட்டனா். தொடா்ந்து, 2025-2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு இந்த ஆண்டு 2,000 பக்தா்கள் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவா்”என அறிவிக்கப்பட்டது. அதைச் செயல்படுத்தும் வகையில் இந்த ஆண்டு…