பீகார் மாநிலம் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தரமற்ற பொருட்களை கொண்டு பாலம் கட்டப்பட்டதால் தான் இடிந்து விழுந்துள்ளது என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், பீகார் மாநிலத்தில் இன்னொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. பீகார் மாநிலத்தில் படேதா – கரோலி கிராமங்களை இணைக்கும் சிறிய பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இதனால் இரு கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
Category: முதன்மை செய்திகள்
கள்ளகுறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு- 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு
கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் பலியான விவகாரம் தொடர்பாக 3 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 8 பேரில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா மீது கச்சிராப்பாளையம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். சாராயத்தில் மெத்தனால் கலந்தவர்கள் என்ற அடிப்படையில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசுபள்ளி வகுப்பறையில் போதையில் உருண்ட ஆசிரியர்- மாட்டு கொட்டகையில் தூக்கி போட்ட மாணவர்கள்
தெலுங்கானா மாநிலம் கொத்த குடேம் மாவட்டம் திம்மாபேட்டை பஞ்சாயத்து ராஜிவ் நகரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் பதி பதி வீரய்யா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று குடிபோதையில் பள்ளிக்கு வந்தார். மேலும் வகுப்பறையில் வைத்து அவர் பீர் குடித்ததாக கூறப்படுகிறது. போதை தலைக்கேறியதும் வகுப்பறையில் தரையில் படுத்து புரள ஆரம்பித்தார். இதனை கண்ட பள்ளி குழந்தைகள் வீட்டுக்கு ஓடி சென்று பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். ஆசிரியருக்கு ஏதோ உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதோ என எண்ணிய பெற்றோர் பள்ளிக்கு ஓடோடி வந்தனர். அங்கு வந்தபோது தான் ஆசிரியர் மது குடித்துவிட்டு போதையில் உருண்டது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் ஆசிரியரை குண்டு கட்டாக தூக்கி அருகே இருந்த மாட்டு கொட்டகையில் தூக்கிப் போட்டனர்.மாட்டு கொட்டகையிலும் போதையில் உருண்ட ஆசிரியர் சில மணி…
பெண்களின் பாதுகாப்புக்காக இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு, துறை சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார். அப்போது கூறியதாவது:- சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி அரசு மானியமாக தலா ஒரு லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மானியம் வழங்கப்படும். 2 கோடி ரூபாய் செலவில் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை இயக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். பெண் குழந்தைகளுக்கான அரசு நலத்திட்டங்களில் பயன்பெறுவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்படும். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம் 200 பயனாளிகள் சுய தொழில் செய்ய ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும். 6 மாவட்டங்களில் மகளிர் விடுதிகள்…
டென்மார்க்- இங்கிலாந்துக்கிடையான போட்டியூரோ கோப்பை கால்பந்து போட்டி டிராவில் முடிந்தது
ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடைபெற்ற போட்டியில் குரூப் ‘சி’ பிரிவில் உள்ள டென்மார்க் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் டென்மார்க் அணி வீரர் மோர்டன் ஹூல்மண்ட் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கடைசி வரை போராடிய இரு அணி வீரர்களால் கூடுதலாக ஒரு கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. ஒரு…
அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா தினம் களைகட்டியது
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது. இதையடுத்து, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் சர்வதேச யோகா தினமான இன்று, இந்திய தூதர் பினயா பிரதான் கூறுகையில், “இன்று நாங்கள் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடி வருகிறோம். எங்களுடன் பல நாடுகளைச் சேர்ந்த யோகா பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த யோகா நிகழ்ச்சி நாள் முழுவதும் நடைபெறும். இன்று 8,000 முதல் 10,000 பேர் பங்கேற்று எங்களுடன் இணைந்து யோகா செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருள் ‘யோகா நமக்காகவும் சமூகத்திற்காகவும்’ என்பதில் நான்…
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார். மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார். உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர். இதைதொடர்ந்து, பாதிக்கப்பட்ட கருணாபுரம் கிராமத்திற்கும் உதயநிதி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள உடல்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்களுக்கு ரூ.10 லட்சம் காசோலையை வழங்கினார்.
தீவிர வெப்ப அலை எதிரொலி தலைநகர் டெல்லியில் மே 27-ம் தேதி முதல் இன்றுவரை வெப்ப அலையில் சிக்கி 20 பேர் பலி
டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் 9 பேரும், ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் 9 பேரும், லோக் நாயக் மருத்துவமனையில் 2 பேரும் என மொத்தம் 20 பேர் பலியாகினர். வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கம் மிக தீவிரமாக உள்ளது. பல இடங்களில் இயல்பு நிலையை விட 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது. இரவு நேரங்களிலும் வெப்பக் காற்று வீசி வருவதால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மே 27-ம் தேதி முதல் இன்றுவரை வெப்ப அலையில் சிக்கி 20…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை
“கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததுடன், 10க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். கஞ்சா, குட்கா, அரசு விற்கும் மதுவினைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையும் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கவே நல்ல சாராயம் விற்பதாகக் காரணம் கூறிய திமுக அரசு, தற்போது கள்ளச்சாராய விற்பனையையும் தடுக்கத்தவறி 5 உயிர்களைப் பலிகொண்டுள்ளது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்குச் சீர்கெட்டுள்ளது என்பதையுமே காட்டுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு மே மாதம் விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட…
விக்கரவாண்டியில் திமுக வேட்பு மனு தாக்கல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகம் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி, ரவிக்குமார் எம்.பி, தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பொன் கௌதம சிகாமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
