வில்லியனூர் தொகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள்- பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளருடன் எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆலோசனை

வில்லியனூர் தொகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளருடன் எதிர்க்கட்சித் தலைவர் சிவா இன்று ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்தாலோசனைக் கூட்டம் சட்டப்பேரவையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று மதியம் நடந்தது.

கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன், நெடுஞ்சாலைப் பிரிவு செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், நீர்பாசனக் கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள் அனைத்தும் மழைக்காலத்திற்கு முன்பாக தூர்வாரப்பட வேண்டும். மணவெளி மல்லிகா நகர், ஜி.என்.பாளையம்பேட், ஆத்துவாய்க்கால்பேட், கொம்பாக்கம் செட்டிக்களம் ரோடு, லட்சுமி அவென்யூ வில்லியனூர் புல்வார் பகுதிகளில் கல்வெட்டு அமைத்தல், கருப்பட்டிச் சேனல் வாய்க்காலின் இருபுறமும் நபார்டு வங்கி நிதியுதவியுடன் சிமெண்ட் கட்டை அமைப்பது. சுல்தான்பேட்டை, வினித் நகரில் ஏஎப்டி குடிநீர் திட்டத்தை விரைந்து முடித்து மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தல். தேசிய நெடுஞ்சாலையில் விடுப்பட்ட பகுதிகளில் பக்க வாய்க்கால் அமைத்தல். பழமைவாய்ந்த சுல்தான்பேட்டை குளத்தை புதுப்பித்தல். வில்லியனூர் மாதா கோவில், மூர்த்தி நகர், பாண்டியன் நகர், மார்க்கெட் சாலைகளை புதுப்பித்தல் ஆகிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு, மேற்கண்ட பணிகளை துரிதமாக முடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

Related posts

Leave a Comment