புதுச்சேரி மணவெளி தொகுதியில் 3 இடங்களில்தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள் தொடக்கம்


புதுச்சேரி அரசு வட்டார வளர்ச்சி அலுவலகம் அரியாங்குப்பம் வட்டாரம் சார்பாக மணவெளி தொகுதியில்3 இடங்களில்  100 நாள் வேலை திட்டம் தொடங்கப்பட்டது. இதில் ஆண்டியார்பாளையம் தவளக்குப்பம் மற்றும் டி என் பாளையம்  ஆகிய  பகுதிகளில்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.52 லட்சம் மதிப்பிலான  பணிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்  சட்டப்பேரவைத் தலைவருமான  செல்வம்  அந்தந்த பகுதிகளில் நேரில் சென்று தொடங்கி வைத்தார்.
 ஆண்டியார்பாளையம் பகுதியில் பெட்ரோல் பங்க் முதல் உப்பனாறு வரை உள்ள அல்லிக்குட்டை வாய்க்காலை ரூ.06.23 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்துதல்,  தவளக்குப்பம் பகுதியில் ஈசிஆர் முதல் பள்ளி வாசல் வரை உள்ள வாய்க்காலை ரூ.05.37 லட்சம் மதிப்பில் தூர் வாரி ஆழப்படுத்துதல், மற்றும் டி.என் பாளையம் பகுதியில் ஏரி  வரை உள்ள மலட்டாறு வாய்க்காலை ரூபாய் 10.92 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்துதல்,   ஆகிய பணிகளை சட்டப்பேரவை தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன் உதவி பொறியாளர்  ராமன் இளநிலை பொறியாளர்  சிவஞானம் பணி ஆய்வாளர்  நற்குணன் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் மாவட்ட தலைவர் சுகுமாரன் என் ஆர் காங்கிரஸ் தொகுதி தலைவர் மனோகரன் கூட்டுறவு சங்க முன்னாள்  இயக்குனர் சக்திவேல் பாஜக பிரமுகர் ஞானசேகர், சிவக்குமார் வாழும் மணி சகாயராஜ் குப்புசாமி டி என் பாளையம் பகுதி கூட்டுறவு சங்க தலைவர் சுகாதியா கிரிகரன் முன்னாள் கவுன்சிலர் வீரசெல்வம் தர்மன் கிருஷ்ணராஜ் மாயகிருஷ்ணன் ஜெயமூர்த்தி குமாரசெல்வம் ஜீவா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment